சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“நான் ரெகுலர் கமர்ஷியல் ரூட்ல இல்லை; அதனால எனக்கு யாரும் போட்டி இல்லைன்னு தான் சொல்லணும். இது சம்பிரதாயமான பதிலா இருந்தாலும், எனக்கு நான்தான் போட்டி. உண்மையைச் சொல்லணும்னா, என்னுடைய முந்தைய படம்தான், எனக்குப் போட்டி; அதுதான் எனக்கு சவால்!” - ‘உங்களுக்கு பைனரி கம்பேரிசன் இல்லையே?’ என்ற கேள்விக்குப் புன்னகையுடன் ஜெயம் ரவி சொன்ன பதில் இது. 15 வருட சினிமாப் பயணத்தில் 25 படங்களின் அனுபவம் அவரிடம் இருக்கிறது.

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“ ‘கோமாளி’ என்ன மாதிரியான படம்?”

“தினமும் பல விஷயங்களைப் பார்க்கிறோம்; அதெல்லாம் கொஞ்சம் பாதிக்கும். அப்புறம் ஈஸியா கடந்துபோயிடுவோம். ஆனா, அப்படிக் கடந்துபோக முடியாத ஒரு விஷயத்தைக் காமெடியா சொல்லப்போற படம்தான், ‘கோமாளி.’ என்கூட யோகி பாபு, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே முக்கியமான கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. அறிமுக இயக்குநர் பிரதீப் ராகவன் இயக்கியிருக்கார். இந்தப் படத்துல கோமாளியும் ஒரு முக்கியமான ரோல். படத்தோட ஆரம்பத்துல ஒரு குட்டி வீடியோ வரும். அதுல வர்ற கேரக்டரை வேறொருத்தர் பண்றதா இருந்து, கடைசியில நானே நடிச்சுட்டேன். அந்தக் கேரக்டருக்காக 20 கிலோ எடையைக் குறைச்சேன். அதுதான் படத்துல ட்விஸ்ட்!”

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“உங்க ஒவ்வொரு படமும் ஒவ்வொரு ஜானர்ல இருக்கே, என்ன காரணம்?” 

“ஆரம்பத்துல டாம் அண்டு ஜெர்ரி மாதிரி ஜாலியா, துறுதுறுன்னு நடிச்சுக்கிட்டிருந்தேன். ‘உனக்கும் எனக்கும்’, ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ படங்கள்ல என் நடிப்பு குழந்தைகளுக்குப் பிடிச்சிருந்தது. பிறகு, ‘பேராண்மை’, ‘நிமிர்ந்து நில்’ மாதிரி இளைஞர்களுக்குப் பிடிக்கிற படங்கள்ல நடிச்சேன். இப்போ ஒரு குழந்தைக்கு அப்பாவாகூட நடிக்கிற மெச்சூர்டான கதா பாத்திரங்கள்ல நடிக்கிறேன். ரிஸ்க் எடுக்கும்போது, தயாரிப்பாளருக்கு பாதிப்பு இல்லாத வகையில பண்ணவேண்டி இருக்கு. ‘மிருதன்’ ஜாம்பி படமா இருந்தாலும், அதுல அண்ணன் - தங்கச்சி சென்டிமென்ட் இருந்தது. ‘டிக் டிக் டிக்’ ஸ்பேஸ் மூவியா இருந்தாலும், அதுல அப்பா - மகன் சென்டிமென்ட் இருந்தது. இப்படிப் புது முயற்சியில எமோஷனலைக் கொண்டு வர்றப்போ, அது ரசிகர்களுக்குப் பிடிச்சுப் போயிடுது. அதுதான் என் நோக்கம்.”

“காஜல் அகர்வால்கூட முதல் முறையா நடிக்கிறீங்க, அந்த அனுபவம் எப்படியிருக்கு?”

“அவங்ககூட ஏற்கெனவே இரண்டு படங்கள்ல நடிக்கவேண்டியது, சில காரணங்களால மிஸ் ஆகிடுச்சு. ரெண்டுபேரும் ஒரே டைம்ல சினிமாவுக்கு வந்தோம். ஷூட்டிங் ஸ்பாட்ல, ‘இத்தனை வருடமா இருக்கோம்; இப்போதான் சேர்ந்து நடிக்கிறோம்ல!’ன்னு பேசிக்கிட்டோம்.”        

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“பல சீனியர் ஆர்ட்டிஸ்ட்கூட வொர்க் பண்ணியிருக்கீங்க. அவங்களுடனான நட்பு எப்படி இருக்கு?”

“அப்பா பல வருடமா சினிமாவுல இருக்கிறதுனால, சினிமா எங்களுக்கு இன்னொரு ஃபேமிலி மாதிரிதான். ‘ஜெயம்’ பட பூஜைக்கு கமல் சார் குத்துவிளக்கு ஏற்றினார். படத்தைப் பார்த்துட்டு ரஜினி சார் தட்டிக்கொடுத்தார். சினிமாவுக்கு வர்றதுக்கு முன்னாடி இந்திந்த கோர்ஸ் படிங்கன்னு எனக்கும் அண்ணனுக்கும் அறிவுரை சொல்வார், கமல் சார். மும்பை போனா, கண்டிப்பா நதியா மேடம் வீட்டுக்குப் போவேன். பிரகாஷ் ராஜ் சாரை எங்கே பார்த்தாலும், அவர்கூட கெளம்பி வெளியே போயிடுவேன்.”

“மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’ல நீங்களும் நடிக்கிறீங்கன்னு தகவல் வந்ததே?”

“எனக்கும் தகவலாதான் வந்தது. நோ கமென்ட்ஸ்.”

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“ ‘சங்கமித்ரா’ என்னாச்சு?”

“அதுக்குத் தயாரிப்பாளர்கள்தான் பதில் சொல்லணும். ஷூட்டிங் ஃபிக்ஸ் பண்ணி, தேதியெல்லாம் குறிச்சோம். திஷா பதானி ஹீரோயின்னும் முடிவு பண்ணியிருந்தோம். சில காரணங்களால அப்போ நடக்கலை. இயக்குநர் சுந்தர்.சி அண்ணாவும், தயாரிப்பாளரும் கலந்துபேசி சீக்கிரமே நல்ல முடிவைச் சொல்வாங்க.”

“ ‘அடங்க மறு’ படத்துல பேசுன விஷயம், பொள்ளாச்சியில நடந்திருக்கு... அந்த சம்பவம் உங்களை எந்தளவுக்கு பாதிச்சது?” 

“பொள்ளாச்சியில நடந்த மாதிரி யான சம்பவங்கள் காலம் காலமா நடந்துக்கிட்டுதான் இருக்கு. சமூக ஊடகங்கள் இருக்கிறதுனால, இப்போ வெளியே தெரியுது. எப்படியாவது, இதுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்கணும். பசங்களை ஒழுங்கா வளர்க்கச் சொல்லிக் கொடுக்கணும். அழுதா, ‘நீயென்ன பொண்ணா, அழாத’ன்னு சொல்லாம, ‘பொண்ணுங்களை அழாம பார்த்துக் கணும்’னு சொல்லிக்கொடுக்கணும். ரெண்டு ஆண் பிள்ளைகளுக்கு அப்பாவா, நான் இதைத்தான் பண்ணப் போறேன்.”

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“இயக்குநர் ஆகப்போறீங்க... என்ன ஸ்பெஷல்?”

“நல்ல என்டர்டெயின்மென்ட்டா ஒரு கதை எழுதியிருக்கேன். இதுக்கு யோகி பாபு பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. ஒரு கேரக்டர்தான் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கும். படத்துல நிறைய காமெடி இருக்கும். இதுக்கு, யோகி சரியா இருந்தார். அவருக்குள்ள வேறொரு நடிகர் இருக்கார். அதையெல்லாம் மறைச்சு, காமெடி மட்டும் பண்ணிக் கிட்டிருக்கார். ‘உங்ககிட்ட இருக்கிற நடிகரை வெளியே கொண்டுவரப் போறேன்’னு அவர்கிட்ட சொன்னேன். ‘அப்படியா... ட்ரை பண்ணுங்க’ன்னு கலாய்ச்சார்.  2020-ல் என்னை இயக்குநரா பார்க்கலாம்! தவிர, நல்ல சோஷியல் மெசேஜ் சொல்ற ஒரு கதையும் வெச்சிருக்கேன். அதுல நான்தான் நடிப்பேன். ‘நடிகர் - இயக்குநர்’ ஜெயம் ரவி... நல்லா இருக்குல்ல!”

“யோகிபாபுவை இயக்கப்போறேன்!”

“அடுத்து?”

“ ‘ரோமியோ ஜூலியட்’, ‘போகன்’ படங்களுக்குப் பிறகு லக்‌ஷ்மன் இயக்கும் படத்துல நடிக்கிறேன். இது என்னோட 25-வது படம். இமான் மியூசிக் பண்றார். என் கரியர்ல மிக முக்கியமான படமா இது இருக்கும். என் மாமியார் சுஜாதாதான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறாங்க. பிறகு, டைரக்டர் அஹமத் இயக்குற படத்துல நடிக்கிறேன். கொஞ்சம் பெரிய பட்ஜெட் படம் இது.”

“ஒரே நிறுவனத்துக்கு அடுத்தடுத்து மூன்று படங்கள் நடிச்சுக் கொடுத்து, சம்பளமா போயஸ் கார்டன்ல ஒரு வீடு கேட்டதா ஒரு செய்தி வந்ததே?”

“என்னைப் பற்றிய பெரிய வதந்தி இது. எங்கே இருந்து இப்படி பூதாகரமா கெளம்புச்சுன்னு தெரியலை. வேலைக்குப் போனா சம்பளம் வாங்குற மாதிரிதான் என் 15 வருட சினிமாப் பயணத்துல சம்பளம் வாங்கிக்கிட்டு இருக்கேன். எல்லோருமே தவணை முறையிலதான் சம்பளம் கொடுத்தாங்க. அந்தச் சம்பளத்துல நானே சொந்தமா ஒரு வீடு கட்டிக்கிட்டிருக்கேன். எதுக்கு எனக்கு இன்னொரு வீடுன்னு எனக்கே தெரியல.”

-அலாவுதின் ஹுசைன்

சென்டிமென்ட்?

“வண்டியை எடுக்கும்போது ரிவர்ஸ்ல போகக்கூடாதுன்னு நினைப்பேன். எப்போவுமே முன்னேறிப் போகணும்னு ஆசை!”

அதிகமா பயன்படுத்துற ஹேஷ்டேக்?

#lovelife #behappy

அடிக்கடி வாங்கும் பொருள்?

பயன்படுத்துறது இல்லைன்னாலும், அடிக்கடி பர்ஸ் வாங்குவேன்.

சினிமா தவிர்த்து அண்ணன்கிட்ட பேசுற விஷயம்?

எப்போவும் சினிமா பற்றிதான் பேசுவோம். 

பிடிக்காத விஷயம்?

புறணி பேசுறது ஆகாது. எதுவா இருந்தாலும் நேரா பேசிடுவேன்.

ரொம்பப் பிடிச்சது?

செல்ஃப் டிரைவிங்.

பிடிச்ச வெளிநாடுகள்?

நியூசிலாந்து, ஆஸ்திரியா, மாலத்தீவு.