சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

வலைபாயுதே

வலைபாயுதே
பிரீமியம் ஸ்டோரி
News
வலைபாயுதே

வலைபாயுதே

facebook.com/RS Prabu

தானியங்கித் தொழில்நுட்பங்கள் வந்து விட்டால் கணிசமாக மனிதர்களுக்கான வேலைவாய்ப்புகள் குறைந்துவிடும் என்று சொல்லப்படும்போதெல்லாம் நெடுஞ் சாலை சுங்கச்சாவடிகளில் உள்ள Fast Tag சந்து நினைவுக்கு வந்து ஆட்டித் தொலைக் கிறது. காசு வாங்கிப்போட என்னவோ ஆள் தேவையில்லைதான். ஆனால் திறந்திருக் கிறதே என்று காசு கொடுக்காமல் ஓடுபவர்களைத் தடுக்க காவலாளிகள் தேவைப்படுகிறார்கள்.

facebook.com/iMuthuram

பீரோவுக்குப் பக்கத்துல ஃப்ரிட்ஜைத் தூக்கி வச்சிட்டு உசுர வாங்குறாய்ங்க. ஃப்ரிட்ஜ்ஜைத் தொறந்து ஜட்டிய தேடிட்டு இருக்கேன்!

வலைபாயுதே

facebook.com/Lakshmi Saravanakumar

மனிதர்களுக்கு இயல்பிலேயே ஒரு குணமுண்டு. தேடி வந்து நெருக்கம் காட்டுகிற எவரையும் அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இருப்பதி லேயே ஆகக் கொடுமையானது நீங்கள் யாரென்றே தெரியாத ஒருவரின் மீது உங்களுக்கு வரும் அன்பு. அதைப் போன்றதொரு மானங்கெட்டதனம் வேறில்லை.

facebook.com/Karthik

‘`என்னைப்பற்றி நல்லா தெரிஞ்ச நீயே இப்படிப் பேசலாமா’’ என்று யார் சொன்னாலும் அவர்களைச் சந்தேகி!

twitter.com/Kannan_Twitz

கடன் வாங்குனவன்கிட்ட பணத்த கேட்கலாமேன்னு போன் பண்ணா போனை அட்டண்ட் பண்ணிட்டு, பேசாம இருமிட்டே இருக்கான். ‘எப்படியும் உடம்பு சரியில்லை மச்சான்... வேலைக்குப் போகல’ன்னுதான் சொல்லுவான்... நாமளே போனை கட் பண்ணிடுவோம்!

twitter.com/Kozhiyaar

குடும்பச் சண்டை பட்டாசு வெடிப்பது போலத்தான்! நாம் காதைப் பொத்தி, கண்ணை மூடித் தயாராக இருக்கும் போது புஸ்ஸெனப் போய்விடும்.  ஆனால், அசால்ட்டாக இருக்கும்போது டமார் என வெடித்து நம் காதையே கிழித்துவிடும்.

வலைபாயுதே

twitter.com/i_HomeMaker

சினிமால நல்ல மாமியாரை காமிச்சு பிள்ளைக மனசுல ஆசைய வெதைக்கிறாங்க.... சீரியல் அப்படியல்ல... எதார்த்தத்துக்கும் கீழ வரைக்கும் போய் எதற்கும் தயாராகும் மனநிலைய தந்துடுது!

facebook.com/Mano Red

செய்யும் பகடி எதிராளிக்குப் புரிந்தால் தான் வெற்றி. புரியாமல் அவர்கள் மென்மையாகக் கடக்கும்போது கதவிடுக்கில் விரல் நசுங்கிய வலியுடன் ஒரு கலைஞன் தோற்றுப்போகிறான்.

twitter.com/nandhu_twitts

யாருமே உதவி செய்யாமல் நீயே எழுந்து நின்னயே அப்போ உனக்கு வயசு 3...இப்ப மட்டும் எதுக்கு பயப்படுற..!!

வலைபாயுதே

twitter.com/AlayamSenthil

பணம் இருந்தாலும் தன்னடக்கமாகப் பேசுவது ATM மட்டுமே!

twitter.com/shivaas_twitz

செல்போன்கள் பயன்பாட்டுக்கு வராத காலத்திலேயே, தமக்குப் பிடித்த நடிகரின் படத்தை DP-யாக வைத்தவர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள்!

வலைபாயுதே

twitter.com/kumarfaculty

விவசாய நிலப்பரப்பு குறைந்து கொண்டே போவதற்கும், மருத்துவமனை களின் பரப்பளவு அதிகரித்துக்கொண்டே போவதற்கும் நேரடித் தொடர்பு உள்ளது!

twitter.com/ItsJokker

அதிகபட்சமாய் வேறொன்றும் ஆசையில்லை, ஞாயிற்றுக்கிழமைக்கும், திங்கள்கிழமைக்கும் இடையில் ஒரு கிழமை கிடைத்தால் போதும்!

-சைபர் ஸ்பைடர்