Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

• எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ‘மிஸ்டர்.லோக்கல்’ இந்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இதைத் தொடர்ந்து, இயக்குநர் மித்ரனுடன் ‘ஹீரோ’ படத்திலும் ரவிக்குமார் இயக்கிக்கொண்டிருக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் தன் கவனத்தைச் செலுத்தி வருகிறார். தவிர, சன் பிக்சர்ஸ் தயாரிக்க, பாண்டிராஜ் இயக்கவிருக்கும் படத்திலும் ஒப்பந்தம் ஆகியிருக்கிறார், சிவகார்த்திகேயன். இப்படத்தில் சிவாவுக்கு ஜோடி,  ‘துப்பறிவாளன்’ படத்தில் நடித்த அனு இமானுவேல்.

மிஸ்டர் மியாவ்

• ஸ்வேதா திரிபாதிக்கு மேனேஜர் என யாரும் இல்லை. இயக்குநர்கள் கதை சொல்ல விரும்பினால்கூட, அவரேதான் கேட்கிறார்... நடிக்கலாமா, வேண்டாமா என அவரே முடிவெடுக்கிறார். கதை கேட்ட மாத்திரத்தில், அங்கேயே இயக்குநரிடம் தன் முடிவைச் சொல்லி அசத்துகிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

• தமிழ் சினிமாவில், ‘முன்னணி நடிகை’ என்கிற இடத்தைப் பிடிக்கத்  தொடர் முயற்சி செய்துவரும் நடிகை ராஷி கண்ணா, அதற்காகவே  இளம் நடிகர்களாக தேர்ந்தெடுத்து அவர்களுடன் நடிக்கிறார்.சிறுவயதிலிருந்தே தீவிர அஜித் ரசிகையான இவர், ‘‘அஜித்தின் சிரிப்புக்காகவே அவரது அத்தனை படங்களையும் தவிர்க்காமல் பார்த்துவிடுவேன்’’ எனத் தெரிவித்திருக்கிறார்.

• ‘மதராசப்பட்டினம்’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான எமி ஜாக்சன், தொடர்ந்து பாலிவுட் படங்களிலும் நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த புத்தாண்டு அன்று தன் காதலர் ஜார்ஜை சமூக வலைதளங்களில் அறிமுகப்படுத்தினார். தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருந்தார். இந்தக் காதல் ஜோடிக்குப் பெற்றோர்கள், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில், நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருக்கிறது. மொத்தத்தில், டபுள் குஷியில் இருக்கிறார் எமி ஜாக்சன்.

மிஸ்டர் மியாவ்

• ராம்குமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம், ‘ராட்சசன்’. விஷ்ணு விஷால், அமலா பால் நடித்திருந்த இந்தப் படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது. இந்த நிலையில், ‘தமிழில் விஷ்ணு விஷால் பிரமாதமா நடித்திருப்பார். அவரைப்போல தெலுங்கில் பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸால் நடிக்க முடியாது’ என அமலா பால் கூறியதாகத் தெலுங்கு இணையதளங்களில் வெளியான செய்திகளை மறுத்திருக்கிறார் அமலா பால். இதுகுறித்து ட்விட்டரில், ‘முட்டாள்தனத்துக்கும் வதந்திக்கும் இடையிலான மெல்லிய கோடு உங்கள் கண்களுக்குத் தெரிவதில்லை’ எனப் பதிந்திருக்கிறார் அவர்.

மிஸ்டர் மியாவ்

• மில்க் நடிகையின் படங்கள் தோல்வியைத் தழுவினாலும், சம்பளத்தில் கொஞ்சம்கூட காம்ப்ரமைஸ் ஆகாமல், தேடிவரும் தயாரிப்பாளர், இயக்குநர்களுக்கெல்லாம் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கிறாராம். அவர் கேட்கும் சம்பளத்தைத் தரமுடியாமல், வருத்தத் தோடு திரும்பிக்கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும்!

• ஐஸ் நடிகை நடிக்கும் படத்தில், முன்னணி நடிகர் ஒருவரை கெஸ்ட் ரோலில் நடிக்கக் கேட்டிருக்கிறது தயாரிப்பு தரப்பு. கால்ஷீட் இல்லை என நடிகர் மறுக்க, சம்பந்தப்பட்ட நடிகையே நடிகருக்குப் போன் போட்டு ‘என் படத்தில் நீங்கள் இருந்தால், ஹிட் ஆகும்’ எனப் பேச, கால்ஷீட்டைக் காம்ப்ரமைஸ் செய்து, நடிக்க ஓ.கே சொன்னாராம் அவர்.

• ‘திறமையான நடிகையாக இருந்தும் என் அருமை இங்கிருக்கும் யாருக்கும் தெரியவில்லை’ எனத் ‘தன்னானா’ பாடிக்கொண்டிருக்கிறார் அந்த நடிகை. ஆனால், ‘தயாரிப்பாளர் அல்லது இயக்குநர், கதை சொல்ல வரும்போது திமிராக நடந்துகொள்வது, ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏகப்பட்ட கட்டளைகளை இடுவது போன்ற காரணங்களால்தான், இந்த நடிகையால் முன்னுக்கு வரமுடியவில்லை’ என்று காரணம் சொல்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism