Published:Updated:

விஜய் சேதுபதிக்கு முன் சசிகுமாரை இயக்கும் பொன்ராம் -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதிக்கு முன் சசிகுமாரை இயக்கும் பொன்ராம் -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு
விஜய் சேதுபதிக்கு முன் சசிகுமாரை இயக்கும் பொன்ராம் -விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு

'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினிமுருகன்', 'சீமராஜா' என நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து, தொடர்ச்சியாக மூன்று படங்களில் பணியாற்றியிருந்த நிலையில், இயக்குநர் பொன்ராமின் அடுத்த படத்தில் சசிகுமார் நாயகனாகிறார்.

ஏற்கெனவே, விஜய் சேதுபதியிடம் ஒரு கதையைச் சொல்லி ஓ.கே வாங்கியிருந்த நிலையில், அவர் கால்ஷீட் அடுத்த வருடம்தான் கிடைக்கும் என்பதால், அதற்கிடையில் சசிகுமாரை வைத்து இந்தப் படத்தை இயக்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்தப் படத்தில் மூத்த நடிகர் ராஜ் கிரண்  ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பார் என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே

ரஜினிமுருகன் படத்தில், பொன்ராம் இயக்கத்தில் நடித்திருந்த ராஜ்கிரண், இந்தப் படத்திலும் அதேபோன்ற ஒரு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

இதுகுறித்துப் பேசிய பொன்ராம், "விஜய் சேதுபதியிடம் கதை சொன்னவுடனேயே அவர் என் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். அந்தப் படம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ஞ்ச் நிறுவனத்தால் தயாரிக்கப்படும். ஆனால், அடுத்த ஆண்டு தொடக்கம் வரை விஜய் சேதுபதி பிஸியாக இருப்பதால், மே 2020 -க்கு மேல் படப்பிடிப்பு தொடங்கும் என நம்புகிறேன்" என்றார்.

சசிகுமார்-ராஜ்கிரண் கூட்டணியுடன், படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறினார் பொன்ராம்.