Published:Updated:

`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்!'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு

`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்!'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு
`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்!'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு
`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்!'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு

கடந்த சில நாள்களுக்கு முன்பு நித்யா, `தன்னை பாலாஜி தொடந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பதாக போலீஸில் புகார் கொடுத்திருந்தார். இதற்கிடையில் போஷிகாவை பார்க்க இதுவரை நித்யா தன்னை அனுமதிப்பதில்லை என பாலாஜி மீடியாவில் சொல்லியிருந்தார். 

இந்த நிலையில், இன்று காலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நித்யா மீதான குற்றச்சாட்டுகளை பாலாஜி வெளியிட்டார். அதில், 

`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்!'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு

``எஸ்.ஐ., மனோஜூம், பாசிலும்தான் நித்யாவைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். அதனால் நித்யா அதிலிருந்து வெளிவர முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளி வந்ததில் இருந்து போஷிகாவைப் பார்க்கவிடவில்லை. மேலும், பார்க்க முயற்சி செய்தால், எதாவது ஒரு காரணம் காட்டித் தவிர்த்தே வருகிறார். போஷிகாவின் எதிர்காலம் மிக மிக அவசியம் எனக் கருதுகிறேன். என் பெண்ணுக்கு ஏதாவது நேர்ந்தால் அது எங்களைத்தான் பாதிக்கும், நாங்கள் இருவரும்தான் அதற்குப் பொறுப்பாவோம். போஷிகாவை இப்போது படித்துக்கொண்டிருக்கும் பள்ளியிலிருந்து வேறு பள்ளிக்கு மாற்ற முயன்ற வேளையில் திடீரென நித்யா பின் வாங்கிக்கொண்டார். 

`என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளனர்!'‍- நடிகர் பாலாஜி குற்றச்சாட்டு

போஷிகாவின் எதிர்காலப் படிப்புக்குத் தேவையான செலவுகளை ஏற்றுக்கொள்ள தயாராகவே இருக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகு கொஞ்சமும் நித்யா மாறவில்லை. என் மனைவியை மூளைச்சலவை செய்துள்ளார்கள். அந்தப் பிடியிலிருந்து நித்யா திரும்பி வரவேண்டும். இதுவரை மனோஜ் நித்யாவுக்கு ஐந்து சிம் வாங்கிக் கொடுத்துள்ளார். 'உன் நம்பரை இனி பயன்படுத்த வேண்டாம். நான் கொடுக்கும் எண்ணைப் பயன்படுத்து' எனவும் கூறியிருக்கிறார். அதற்கான ஆடியோ சாட்சிகள் எல்லாம் இருக்கிறது. இந்தக் கடைசி நிமிடம் வரை அவரைப் போல நாமும் தொடர்ந்து கம்ப்ளைன்ட் செய்தால் தவறாக இருக்கும் என இத்தனை நாள்கள் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இப்படி எத்தனை நாள்கள்தான் நான் பொறுத்துப் போவது. அதனால்தான் எல்லாவற்றையும் இன்று வெளிப்படையாகப் பேச வேண்டும் என்று நினைத்தேன். மனோஜ் மாதிரியான நண்பர்கள் தொடர்பு, தேவையில்லாத போன் கால்கள் இவற்றை எல்லாம் விட்டு வெளியில் வந்தால் அவருடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கிறேன். மேலும், மனோஜ் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை எனில் என் அடுத்த நடவடிக்கை அதிரடியாக இருக்கும்' என போஷிகாவின் ஸ்கூல் ஃபீஸ், புகார்கள் எனப் பல ஆதாரங்களைக் காண்பித்தார் பாலாஜி.