Published:Updated:

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

Published:Updated:
“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”
பிரீமியம் ஸ்டோரி
“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

'பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’யைத் தொடர்ந்து ‘சிந்துபாத்’ மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் கைகோத்துள்ளார் இயக்குநர் அருண் குமார். இருவருமே தோளில் கைபோட்டு ஜாலியாகப் பேசிக்கொள்ளும் நண்பர்கள் என அருண் குமாரிடம் பேசும்போதே தெரிந்தது.

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“உங்களுக்கும் விஜய் சேதுபதிக்கும் உள்ள கெமிஸ்ட்ரி பற்றி..?”

“ ‘பண்ணையாரும் பத்மினியும்’ பண்ணும்போதே விஜய் சேதுபதியும், நானும் நல்லாப் பழகிட்டோம். எனக்கு அவர் அண்ணன் மாதிரி.

‘வியாபாரரீதியா படம் ஓடலைன்னா என்ன, நாம மறுபடியும் ஒரு படம் பண்ணலாம்’னு சேது அண்ணா சொல்லியிருந்தார். ‘சேதுபதி’ கதையை எழுதினேன். படப்பிடிப்பு ஆரம்பிச்சது, வெளிவந்த பிறகு ஹிட்டும் ஆகிடுச்சு. என்னுடைய அடுத்த படத்துக்கான கதையை எழுதினேன். நிறைய ஹீரோகிட்ட கதையைச் சொன்னேன். சரியா அமையல. சேதுவும் நிறைய ஹீரோக்களை ரெஃபர் பண்ணினார். படம் அடுத்த கட்டத்துக்கு நகரவே இல்லை. ‘சரி நானே பண்றேன்’ன்னு சேது ஆரம்பிச்சதுதான், இந்தப் படம். ‘பண்ணையாரும் பத்மினியும்’ படத்துக்கு மட்டும்தான் அவர் என்கிட்ட கதை கேட்டார். ‘சேதுபதி’ கதையை டப்பிங் அப்போதான் சொன்னேன். ‘சிந்துபாத்’ கதையையும் 20 நிமிடம்தான் சொன்னேன். ஷூட்டிங்கும் ஆரம்பிச்சு நல்லபடியா முடிஞ்சது.”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“ ‘சிந்துபாத்’ என்ன மாதிரியான கதை?”

“நகரங்கள்ல இருக்கிறவங்களை விடுங்க. தென்காசி மாதிரியான ஒரு கிராமத்துல இருக்கிறவங்க ஆத்துல குளிச்சுட்டு, கறிச்சோறு சாப்பிட்டு, நிம்மதியா ஒரு வாழ்க்கை வாழாம... வெளிநாட்டுக்குப் போய் வேலை செய்றதுக்கான முக்கிய காரணம், பணம். அந்தக் காசுக்காக ஒரு சாமானியன் எந்த நிலைக்குத் தள்ளப்படுறான், ஒரு திருடனுக்குள்ள இருக்கிற நேர்மை, இந்த ரெண்டையும்தான் படம் முக்கியமா பேசும். சிம்பிளா சொல்லணும்னா, சொந்த ஊர்ல திருடிட்டு போலீஸ்கிட்ட அடிவாங்கிட்டு இருக்கும்போதுகூட வாழ்க்கையை நிம்மதியா வாழ்ந்துகிட்டிருந்தவங்க, சில காரணங்களால வெளிநாட்டுக்குப் போய் வாழ நினைச்சா எவ்வளோ கஷ்டப்படுவோம்ங்கிறதுதான் படத்தின் களம். முதல் பாதி செம ஜாலி; இரண்டாம் பாதி அப்படியே நேரெதிர். விறுவிறுன்னு போகும். தாய்லாந்து, கம்போடியா, மலேசியான்னு படத்துல ஒரு டிராவல் இருக்கும். தாய்லாந்து மக்களுடைய வாழ்க்கையும் இந்தப் படத்தில் இருக்கும்.”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“எந்தெந்த ஹீரோக்களிடம் கதை சொன்னீங்க?”

“நீங்க குறிப்பிட்டு ஒரு ஹீரோ பெயரைச் சொல்லுங்க... அவர்கிட்ட கண்டிப்பா கதையைச் சொல்லியிருப்பேன். அஜித், விஜய் தவிர விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பிரபு தேவா, ஜீவா, சசிகுமார், உதயநிதி ஸ்டாலின்... இன்னும் சில பெயர்கள் மறந்துபோயிடுச்சு. மொத்தம் 11 ஹீரோகிட்ட இந்தக் கதையைச் சொன்னேன். சில காரணங்களால செட் ஆகல.”
 
“விஜய் சேதுபதி மகன் சூர்யாவுக்கு என்ன ரோல்?”

“அவனை எனக்கு எட்டு வருஷமா தெரியும். அவன் எனக்கு மகன் மாதிரி. ‘சிந்துபாத்’தை வேற எந்த ஹீரோவை வெச்சுப் பண்ணியிருந்தாலும், இவனைத்தான் அந்த ரோல்ல நடிக்க வெச்சிருப்பேன். கதை எழுதும்போதே இவனைத்தான் மைண்ட்ல வெச்சு எழுதினேன். படத்துல விஜய் சேதுபதி திருடன். இவனும் ஒரு திருடன். முழுக்கவே அவர்கூட டிராவல் பண்ணுவான். படத்துல இவங்க ரெண்டுபேரும் அப்பா - மகன் கிடையாது. திருடர்கள்.” 

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“ ‘சேதுபதி’ கமர்ஷியல் படமா இருந்தாலும், அதுல ஒரு யதார்த்தம் இருக்கும். இந்தப் படத்தையும் அப்படி எதிர்பார்க்கலாமா?”

“கண்டிப்பா. சில மாஸ் எலமென்ட்ஸும், சினிமாத்தன்மையும் இந்தப் படத்துல இருக்கும். ஆனா, அதுவும் நம்பகத்தன்மையோடுதான் இருக்கும். படத்துக்கு இதுதான் பெரிய பலம். பொதுவா படம் பார்க்கிற எல்லோரும் ஹீரோவைப் பார்க்கத்தான் வர்றாங்க. அந்த ஹீரோ எறும்பா இருக்கலாம், ஈயா இருக்கலாம், அஜித்தா இருக்கலாம், விஜய்யா இருக்கலாம், விஜய் சேதுபதியாகக்கூட இருக்கலாம். ஹீரோ பண்றதைப் பார்த்துட்டு, ‘நம்மளைப் பார்க்கிற மாதிரியே இருக்கே’ன்னு நினைக்கிறவங்க ஒரு வகை, ‘இப்படியெல்லாம் நாம இருக்க முடியலையே’ன்னு நினைக்கிறவங்க இன்னொரு வகை. இதுல, நான் ரெண்டாவது வகை ஆடியன்ஸுக்குப் படம் பண்ணியிருக்கேன்.”

“படத்துல என்னென்ன ஸ்பெஷல்”

“முழுப் படமுமே க்ளைமாக்ஸை நோக்கித்தான் நகரும். அந்தக் க்ளைமாக்ஸ் காட்சியை சிங்கிள் ஷாட்ல எடுத்தோம். மொத்தம் 10 நிமிடம். நெருக்கமான ஒரு குடோன்ல நடக்கற காட்சி அது. 100 பொண்ணுங்களோட சேர்த்து, மொத்தம் 110 பேர் அதுக்குள்ள இருப்பாங்க. மொத்தக் காட்சியுமே ஆக்‌ஷன்தான். அதைப் படமாக்குறதுதான் எனக்கு ரொம்ப சவாலா இருந்தது. இதைவிட, படத்துல ஒரு ஸ்பெஷல் இருக்கு. இந்தப் படத்துல விஜய் சேதுபதிக்குக் காது அரைகுறையாகத்தான் கேட்கும். குறிப்பிட்ட அளவு சத்தத்தை மட்டும்தான் அவரால கேட்க முடியும். டெக்னிக்கலா சொல்லணும்னா, அவருக்குக் கம்மியான டெசிபெல்லதான் (Decibel) கேட்கும். அஞ்சலியால குறிப்பிட்ட சத்தத்துக்குமேலதான் பேச முடியும். கதாபாத்திரப்படி, ‘இவனுடைய காதுக்குக் கேட்கிற மாதிரி பேசினது அவளாதான் இருந்திருப்பா. அவளை அமைதியா பேசுன்னு உலகத்துலே சொல்லாத ஆள் இவனாதான் இருப்பான்.’ -  படத்துல இதுதான் இவங்க காதல் கெமிஸ்ட்ரி.

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

படத்தின் கதையை நகர்த்துறதே அஞ்சலிதான். ‘வெண்பா’ங்கிற கேரக்டர்ல நடிச்சிருக்காங்க. விஜய் சேதுபதிக்குப் பெயர், திரு. குட்டி விஜய்சேதுபதிக்குப் பெயர், சூப்பர். இவங்களைத் தவிர காமெடி ரோல்ல ஜார்ஜ், வில்லனா லிங்கா நடிச்சிருக் காங்க. இந்தப் படத்துக்காக 17 கிலோ வெயிட் போட்டி ருக்கார், விவேக் பிரசன்னா.”

“டெக்னிகல் டீம்?”

 “விஜய் கார்த்திக், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு. இரண்டாம் பாதியில வர்ற ஆக்‌ஷன், ரன்னிங், சேஸிங் காட்சிகளைத் தத்ரூபமா ஒளிப்பதிவு பண்ணியிருக்கார். யுவன் ஷங்கர் ராஜா இசை, படத்தின் பலம்.

 பொதுவா நான் பெரிய இசையமைப்பாளர்கூட வொர்க் பண்ண பயப்படுவேன். ஆனா, யுவன் ரொம்ப ஜாலியான ஆள். மொத்தம் அஞ்சு பாட்டு. எல்லாமே வேற லெவல்ல வந்திருக்கு.” 

“ஒரு இயக்குநரா, ஒரு படத்தை ரிலீஸ் பண்றதுக்கு என்னென்ன சவால்களை சந்திக்கிறீங்க?”

“அப்பா, மகன் ரெண்டுபேரும் திருடர்கள்!”

“கதை எழுதுறதும், அதைப் படமாக்குறதும் சுலபம். ஏன்னா, அது தனிநபர் உழைப்பு. ஆனா ஒரு ஹீரோகிட்ட கதை சொல்லி ஓகே வாங்குறதுக்குத்தான் சிரமப்படணும். அடுத்து பட ரிலீஸ், ஒரு வலிமிகுந்த வேலை. அது பலபேர் சம்பந்தப் பட்டது. தயாரிப்பாளர்களுக்கு இதைவிடப் பெரிய வலி இருக்கும்.

‘சிந்துபாத்’ படத்தை சொன்ன தேதிக்கு முன்னாடியே முடிச் சிட்டோம். இயக்குநரால ஒரு தயாரிப் பாளரை இப்படித்தான் காப்பாத்த முடியும். படத்துடைய வெற்றி ஆடியன்ஸ் கையிலதான் இருக்கு.”

- தார்மிக் லீ