Election bannerElection banner
Published:Updated:

அடுத்த படம் யாருடன்? - எல்.கே.ஜி. வெற்றி விழாவில் அறிவித்த ஆர்.ஜே பாலாஜி

அடுத்த படம் யாருடன்? - எல்.கே.ஜி. வெற்றி விழாவில் அறிவித்த ஆர்.ஜே பாலாஜி
அடுத்த படம் யாருடன்? - எல்.கே.ஜி. வெற்றி விழாவில் அறிவித்த ஆர்.ஜே பாலாஜி

அடுத்த படம் யாருடன்? - எல்.கே.ஜி. வெற்றி விழாவில் அறிவித்த ஆர்.ஜே பாலாஜி

ஆர்.ஜே. பாலாஜி, நாஞ்சில் சம்பத், ப்ரியா ஆனந்த், ஜே.கே ரித்திஷ் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் எல்.கே.ஜி. இப்படத்தின் வெற்றி விழா நேற்று சென்னையிலுள்ள ஹயாத் ஹோட்டலில் நடைபெற்றது. விழாவில், ஆர்.ஜே பாலாஜி தனது அடுத்த படம் குறித்தும், தனது அனுபவம் குறித்தும் பகிர்ந்துகொண்டார்.  

அப்போது அவர் பேசுகையில், ``விஜயகாந்த் சார் ஃபேமிலியில இருந்து நேத்து எல்.கே சுதீஷ் சார் இந்தப் படத்தை பார்த்தார். விஜயகாந்த் சாரை வெச்சு `வல்லரசு' படத்தை எடுத்தப்போ, அந்தப் படத்தோட வெற்றியை நாங்க கொண்டாடவேயில்லை. அதன் சார்பா 'எல்.கே.ஜி'யோட வெற்றியை நீங்க கொண்டாடுங்க'ன்னு சொன்னார். யூடியூப் சேனல்ஸ், சோஷியல் மீடியா, பத்திரிகைகள், மீம் க்ரியேட்டர்ஸ் எல்லாரும் நாங்க எதிர்பார்த்ததைவிட அதிகமா இந்தப் படத்தை ப்ரமோட் பண்ணியிருக்கீங்க. என்னுடைய சில நண்பர்கள்கிட்ட, `நான் ஒரு கதை எழுதுறேன். அதை நாம எல்லாரும் சேர்ந்து படமா எடுக்கலாமா'னு சொன்னப்போ, `உன் பட்ஜெட் 3 கோடி. அவ்வளோ பணம் கிடைக்கிறது சாதாரண விஷயமா, தவிர, உன்னை வெச்சு யார் படம் எடுப்பா'னு நம்பிக்கையில்லாம பேசுனாங்க. என் நண்பர்கள் சிலருக்கு இல்லாத நம்பிக்கையை ஐசரி கே கணேஷ் சார் என்மேல வெச்சு இந்தப் படத்தை தயாரித்துக் கொடுத்துருக்கார். நன்றி சார். 

இந்தப் படத்தோட பட்ஜெட்டுக்கு ப்ரியா ஆனந்த் நடிப்பாங்களானு முதல்ல எங்களுக்கு சந்தேகமா இருந்துச்சு. நாங்க கம்மியான காசுக்கு ஒரு புதுமுக பாம்பே பொண்ணை நடிக்க வெச்சிருக்கலாம். ஆனா, அதெல்லாம் இல்லாம, இந்த ஹீரோயினை செலக்ட் பண்ணதுக்கு முக்கியக் காரணம், இவங்களுக்குத் தமிழ் தெரியும்ங்கிறது மட்டும்தான். மேலும், ப்ரியா ஆனந்த் ரொம்ப திறமையான நடிகையும்கூட. இவங்களை தமிழ் சினிமா இன்னும் அதிகமா பயன்படுத்தணும்னு நினைக்கிறேன். நான் செலவு பண்ண காசுக்கு ஒருநாள்கூட தயாரிப்பாளர் கணக்கு கேட்டதில்லை. முதல் படத்துக்கே இப்படியொரு கூலான தயாரிப்பாளர் கிடைக்கிறது கஷ்டம். 

இந்தப் படத்துக்கு ஜே.கே ரித்தீஷ் நடித்த கேரக்டர்ல முதல்ல ராமராஜன் சார்தான் வேணும்னு கேட்டேன். அவர் இல்லைனா ஜே.கே ரித்தீஷை நடிக்க வைக்கலாம்னு சொன்னேன். ஏன்னா, ரஜினி, கமல் பீக்ல இருந்தப்போ அவங்களுக்கு இணையா மக்கள் மனசை கவர்ந்த இன்னொரு சூப்பர் ஹீரோதான் ராமராஜன் சார். அவர் இந்த ரோல்ல நடிச்சிருந்தா நல்லாயிருக்கும்னு நெனச்சோம். ஆனா, ஜே.கே ரித்தீஷ் சாரும் எந்தவொரு குறையுமில்லாம நடிச்சுக் கொடுத்திருக்கார். சமீபத்துல ரித்தீஷ் ஒரு டிவி நிகழ்ச்சி அட்டென்ட் பண்ணப்போ, அங்க ஒரு குழந்தை கஷ்டப்படுறதை பார்த்ததும், 7 லட்சம் ருபாய் கொடுத்து உதவி பண்ணியிருக்கார். அவ்வளவு நல்ல மனுஷன்!  

இந்தப் படத்துல மட்டுமில்ல, ரியலாகவே நாஞ்சில் சார் என்னுடை அப்பாதான்! கடந்த 40 வருடமா அவருக்கு இருந்த கலரை இந்தப் படம் துடைச்சு எடுத்திருச்சுனு நினைக்கும்போது பெருமையா இருக்கு. ரொம்ப நல்ல மனுஷனை இத்தனை நாளா தவறா புரிஞ்சு வெச்சிட்டு இருந்தோம். இப்போ இவர் எப்படிப்பட்டவர்னு இந்த உலகத்துக்கே தெரியும். நான் பார்த்து ரசித்த வெள்ளந்தியான மனிதர்கள்ல இவரும் ஒருத்தர். ஏற்கெனவே நான்கு படங்கள்ல நடிக்க ஒப்பந்தம் பண்ணியிருக்கார்னு கேள்விப்பட்டோம். இன்னும் நிறைய படம் பண்ண வாழ்த்துகள் சார்! இத்தனை நாள் சம்பாதிக்காததை இனிமேல் சம்பாதிச்சுக்கோங்க!  

இந்தப் படத்தை 45 நாள்கள் ஷூட் பண்ண திட்டமிட்டு, 37 நாள்களிலேயே முடிச்சிட்டோம். படத்தை பார்த்ததும் இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர்கள்ல ஒருவரான ரவி வர்மன் சார் போன் பண்ணி பாராட்டினார். இனி, நாங்க சேர்ந்து எத்தனை படங்கள் பண்ணினாலும் பா. விஜய்தான் கட்டாயம் பாடல்கள் எழுதுவார். இந்தப் படத்துக்கு ஆண்டனி சார் எந்தளவுக்கு எடிட்டிங் வேலைகள் செய்தாரோ அந்தளவுக்கு `பரியேறும் பெருமாள்' படத்தோட எடிட்டர் செல்வா சாரும் வேலை பார்த்திருக்கிறார். மேலும், இந்தப் படத்திலிருந்த முக்கியமான காட்சிகளையும், வசனங்களையும் கட் பண்ணாம இருந்ததுக்காக சென்சார் போர்டுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஜே.கே ரித்திஷோட ஃப்ரெண்ட் மஸ்தான் மாஸ்டர்தான் `பேச்சி பேச்சி...நீ பெருமையுள்ள பேச்சி' பாடலுக்கு கோரியோக்ராஃப் பண்ணவர். 1980-கள்ல பீக்ல இருந்த டான்ஸ் மாஸ்டர் இவர். அவர்தான் இந்தப் படத்துக்கும் கோரியோக்ராஃப் பண்ணியிருக்கார்.

இப்போலாம் சினிமாவுல இருக்குற சீனியர் மனுஷங்களை நாம ஒதுக்குறோம். இந்தப் படத்துல மயில்சாமி சார்ல இருந்து மஸ்தான் மாஸ்டர் வரை நிறைய சீனியர்ஸ் வேலை பார்த்திருக்குறதுதான் படத்தோட வெற்றிக்கு முக்கியக் காரணம்! இந்தப் படத்தோட டிரெய்லர் ரிலீஸானதுமே நிறைய பெரிய படத்தோட தயாரிப்பாளர்கள் எல்லாரும் என்னை படம் பண்ணச் சொல்லிக் கேட்டாங்க. படம் ரிலீஸானதும் நான்கைந்து பெரிய வாய்ப்புகள் என்னைத் தேடி வந்துச்சு. இனி, நான் எந்தப் படத்துல கமிட்டானாலும், அதை முதல்ல ஐசரி கணேஷ் சார்கிட்டதான் பகிர்ந்துக்குவேன். என்னுடைய அடுத்தப் படம் ஐசரி சாருக்கு விருப்பம் இருந்தா, அவருக்குத்தான் பண்ணுவேன்ங்கிறதை இந்த மேடையில பதிவு பண்ண விரும்புறேன்" என்று அழுத்தமாக முடித்தார் ஆர்.ஜே பாலாஜி. 

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு