Published:Updated:

திருவிழாவாக மாறிய திரையரங்கம்; ரஜினி - அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்!

திருவிழாவாக மாறிய திரையரங்கம்; ரஜினி - அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்!
திருவிழாவாக மாறிய திரையரங்கம்; ரஜினி - அஜித் ரசிகர்களின் கொண்டாட்டம்!

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான `பேட்ட’ படமும் அஜித்குமார் நடிப்பில் சிவா இயக்கத்தில் வெளியான `விஸ்வாசம்’ படமும் நேற்று ஐம்பதாவது நாளை எட்டியுள்ளது. இதை முன்னிட்டு இரு நடிகர்களின் ரசிகர்களும் திரையரங்குகளை திருவிழாவாக்கியுள்ளனர்.

ரஜினி நடித்த `பேட்ட’ படத்தின் ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் சென்னை ஆல்பர்ட் தியேட்டரில் நேற்று மதியம் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா, `பேட்ட’ படத்தின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், மற்றும் படத்தில் நடித்திருந்த சனத், தீபக் பரமேஷ்வர் எனப் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கொண்டாட்டத்திலும் ரஜினி ரசிகர்கள் புல்வாமா தாக்குதலில் மறைந்த நம் நாட்டு ராணுவ வீரர்களுக்கு மெளன அஞ்சலி செலுத்தினர்.

அஜித் நடித்த `விஸ்வாசம்’ படத்தின் ஐம்பதாவது நாள் கொண்டாட்டம் சென்னை ரோகிணி தியேட்டரில் நேற்று மாலை நடைபெற்றது. இதில் பல ரசிகர்கள் கலந்துகொண்டு, ஆடி பாடி தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். `விஸ்வாசம்’ படம் ரிலீஸானபோது ரோகிணி  தியேட்டர் எப்படி இருந்ததோ, அதேபோல் இன்றும் பல அஜித் கட் அவுட்களால் தியேட்டரே நிரம்பி இருந்தது.