Published:Updated:

``பொண்ணு பார்க்கத்தான் அம்மா வந்திருக்காங்கனு நினைக்கிறேன்!" - யோகி பாபு

தார்மிக் லீ
``பொண்ணு பார்க்கத்தான் அம்மா வந்திருக்காங்கனு நினைக்கிறேன்!" - யோகி பாபு
``பொண்ணு பார்க்கத்தான் அம்மா வந்திருக்காங்கனு நினைக்கிறேன்!" - யோகி பாபு

விஜய், அஜித் உள்ளிட்ட பெரிய நடிகர்களுடன் நடித்த அனுபவம், நடித்துக்கொண்டிருக்கும் படங்கள், நடிகர் ஜெயம் ரவி இயக்கத்தில் நடிக்கவிருக்கும் படம்... எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார், காமெடி நடிகர் யோகி பாபு.

சின்னத்திரை நிகழ்ச்சியான `லொள்ளு சபா'வில் என்ட்ரி கொடுத்த யோகி பாபு, கிட்டத்தட்ட எல்லா நடிகர்களுடனும் இணைந்து லொள்ளு செய்துவிட்டார். தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் காமெடி நடிகர். ஒரு மாலைப் பொழுதில் அவரை சந்தித்துப் பேசினோம். 

``அஜித் - விஜய் உங்களுடைய பார்வையில் எப்படி?"

``பொண்ணு பார்க்கத்தான் அம்மா வந்திருக்காங்கனு நினைக்கிறேன்!" - யோகி பாபு

``அவங்க ரெண்டுபேருமே வேற!. கத்துக்க அவங்ககிட்ட நிறைய இருக்கு. சோம்பேறியா இருக்கிற சிலபேர் இவங்ககூட பத்து நிமிடம் உட்கார்ந்தா போதும். `வரேண்ணா'னு சொல்லி வேலையைப் பார்க்கப் போயிடுவாங்க. அந்தளவுக்கு எனர்ஜியான ஆளுங்க." 

``விஜய் சேதுபதி - சிவகார்த்திகேயன். இருவரைப் பற்றியும் சொல்லுங்க?"

``ரெண்டுபேரும் எனக்கு நல்ல நண்பர்கள். டிசம்பர் சமயம் 100 கால்ஷீட்டுக்கு மேல பண்ணேன். என்னை மறந்து தூங்கின சமயம் அது. என்னோட ஒரு படத்தின் போஸ்டரைப் பார்த்துட்டு விஜய் சேதுபதி எனக்கு போன் பண்ணார். `என்ன யோகி பாபு இப்படி இருக்கீங்க. உடம்பைப் பார்த்துக்கோங்க'னு சொல்லி, அவருக்குத் தெரிஞ்ச சில டாக்டர்களைப் பார்க்கச் சொன்னார். இவ்வளவு வேலைக்கு மத்தியிலும் அவர் என்னைக் கவனிச்சது சந்தோஷம். சிவகார்த்திகேயன்கூட `மான் கராத்தே' படத்துல இருந்து வொர்க் பண்றேன். இப்போகூட தொடர்ந்து மூணு படம் பண்ணிக்கிட்டிருக்கேன். `மான் கராத்தே' சமயத்துல, `உன்னை எப்படிக் கொண்டுபோறேன் பார்'னு சொன்னார். சொன்ன மாதிரியே, `வவ்வால்' கேரக்டர் நல்லா வந்துச்சு. என்னுடைய இந்த வெற்றிக்கு இந்த ரெண்டுபேரும் முக்கியக் காரணம்."  

``இது எல்லாத்துக்கும் முன்னாடி யோகி பாபுவுடைய வாழ்க்கை எப்படி இருந்தது?"

``காலையில 8 மணிக்கு வாய்ப்பு தேடி அலைய ஆரம்பிச்சா, எல்லாம் முடிய ராத்திரி ஆகிடும். இது தவிர, ஏரியா பசங்ககூட கிரிக்கெட் விளையாடப் போவேன். அதுக்குப் போகவும் சமயத்துல யோசிப்பேன். ஏன்னா, அப்போ `லொள்ளு சபா'வுல இருந்த டைம். வேலை பெருசா இல்லை. ஏதாவது கேட்பாங்கனு பாதி நாள் போகமாட்டேன். ஜெயிக்கணும்னு ஓடிக்கிட்டே இருந்தேன் அவ்வளவுதான்." 

``உங்களுக்குப் பொண்ணு பார்த்துட்டாங்களா?"

``அதுக்குதான் அம்மா வந்திருக்காங்கனு நினைக்கிறேன். உங்களுக்குத் தெரியாம எப்படிங்க கல்யாணம் பண்ணுவேன். கண்டிப்பா உங்களுக்குத் தெரியவரும்."

``உங்களுக்கு இப்படிதான் பொண்ணு அமையணும்னு ஆசை இருக்கா?"

``அப்படிக் கேட்டா, `எங்களுக்கு நல்ல மாப்பிள்ளை வேணும்'னுல கேட்குறாங்க. அப்படியெல்லாம் இல்லை. நமக்கு என்ன தகுதி இருக்கோ, அதுக்குத் தகுந்த மாதிரி கிடைச்சாப் போதும்."

``சின்ன கதாபாத்திரங்களுக்குக் கமிட்டாகி, அப்புறம் படம் முழுக்க வந்த படங்கள்னு ஏதாவது இருக்கா?"

``நான் பெரிய படங்கள் பண்ணும்போதே சின்னச் சின்ன கேரக்டர்களும் பண்னேன். இப்போகூட விஷால் சார் படத்துல ரெண்டு சீன் வர்ற ரோல்தான். இப்போனு இல்லை, எப்போவும் எனக்கு நடிப்பு வேலைதான். ஒரு சீனா இருந்தாலும், அது நமக்குக் கைகொடுக்கும். `யாமிருக்க பயமேன்' படத்துலகூட ரெண்டு சீன்தான். ஆனா, அந்த கதாபாத்திரம் நல்லா பேசப்பட்டது. இண்டஸ்ட்ரியில இருக்கிற எல்லோரும் நண்பர்கள்தான். அவங்க கூப்பிட்டா, கண்டிப்பா நடிக்கப் போயிடுவேன்." 

``பெரிய ஹீரோக்கள் எல்லாம் உங்க கால்ஷீட்டுக்குக் காத்திருக்காங்களாமே... இதைக் கேட்கும்போது, எப்படி இருக்கு?”

``ஒரு பக்கம் பயமா இருக்கு, இன்னொரு பக்கம் சந்தோஷமா இருக்கு. விஜய் சார் ஆகட்டும், அஜித் சார் ஆகட்டும்... அவங்களுக்கும் இது தெரியும். `விஸ்வாசம்’ பண்ணும்போது, `உங்களுக்கு இன்னொரு பட ஷூட்டிங் இருக்குல்ல. முடிச்சுட்டு வந்திடுங்க’னு சொல்லி அனுப்பி வெச்சார், அஜித் சார். விஜய் சார்கூட என்னை இப்படிச் சொல்லி அனுப்பி வெச்சிருக்கார். ஜெயம் ரவி சார் எனக்கு ரொம்ப க்ளோஸ். என்னை வெச்சு டைரக்‌ஷன் பண்ணப்போறதாச் சொல்லியிருக்கார். அதுக்காக ரெண்டு மாசமா வீட்டுலதான் இருக்கார். `என்னய்யா இப்படி உட்கார வெச்சிட்டே’னு அப்பப்போ ஜாலியா கலாய்ப்பார். ஆனா, என் கண்டிஷன் என்னன்னு அவருக்குத் தெரியும். `நல்லபடியா எல்லாத்தையும் முடிச்சுட்டு வாங்க, பண்ணுவோம்’னு சொல்லியிருக்கார். பல நடிகர்கள், `அவரை அனுப்பிவிடுங்க, போயிட்டு வரட்டும்’னு சொல்வாங்க. இப்போகூட விஷால் சார் பட ஷூட்டிங்கை முடிச்சிட்டு, இன்னொரு படத்துக்கான ஷூட்டிங் கிளம்பிட்டேன். அதை முடிச்சுட்டு ஜோதிகா மேடம் படத்தின் ஷூட்டிங் போகணும். இப்படித்தான் வண்டி ஓடிக்கிட்டிருக்கு!” 

``ஏ.ஆர்.முருகதாஸ் - ரஜினி இணையும் படத்திலும் நடிக்கிறீங்களாமே?!” 

``இதுவரை நடிச்ச கேரக்டர்களில், பர்சனலா உங்களுக்குப் பிடிச்ச கேரக்டர் எது?” 

``இப்போ எத்தனை படத்துல ஹீரோவா நடிக்கிறீங்க?” 

இது போன்ற பல கேள்விகளுக்கு இந்த வார ஆனந்த விகடனில் பதில் அளித்திருக்கிறார். படிக்க க்ளிக் செய்யவும் ``திருந்தியவர்களுக்கு நன்றி!”

யோகி பாபுவின் பேட்டியை வீடியோவாகப் பார்க்க..

அடுத்த கட்டுரைக்கு