சினிமா
தொடர்கள்
Published:Updated:

100 - சினிமா விமர்சனம்

100 - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
News
100 - சினிமா விமர்சனம்

100 - சினிமா விமர்சனம்

பெண்களுக்கு எதிராய் நடக்கும் அநீதி; அதை அண்ணனாய்த் தட்டிக்கேட்கும் ஒரு காவல்துறை அதிகாரி!

எஸ்.ஐ போஸ்டிங் கிடைத்ததும், ஒட்டுமொத்த நகரத்தையும் கன்ட்ரோலில் வைத்திருக்கக் கனவு காண்கிறார் சத்யா. ஆனால், போஸ்டிங்கோ கன்ட்ரோல் ரூமில்... ஓடியாடிக் கடமையாற்ற நினைத்தவருக்கு, ஓர் அறைக்குள் அழைப்புகளை எடுக்கும் வேலை. கலங்கிப்போகிறார். அவர் எடுக்கும் நூறாவது அழைப்பு அவருடைய சுமார் வாழ்வை சூப்பர் ஹீரோ வாழ்வாக மாற்றுகிறது.

எஸ்.ஐ சத்யாவாக அதர்வா. மாஸ் ஹீரோ எனும் பிம்பத்துக்கு முறுக்குக் கம்பியாக, தன்னைத் தகவமைத்து க்கொண்டு நன்றாக நடித்திருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அனல் புயல்!

சத்யாவின் காதலி நிஷாவாக ஹன்சிகா மோத்வானி அவ்வப்போது வருகிறார்.  யோகிபாபுவின் கவுன்டர்களுக்கு அரங்கம் குலுங்குகிறது. ராதாரவி மற்றும் சீனுமோகனின் நடிப்பில் அவ்வளவு அனுபவம் தெறிக்கிறது! மகேஷ், ராஜ் ஐயப்பா, மைம் கோபி, சரவணன், நிரோஷா, விஜய், ஹரிஜா என எல்லோருமே சிறப்பு.

ஆரம்பத்தில் ஒட்டாமல் `மசமச’வென நகரும் கதை, சில நிமிடங்களிலேயே வேகமெடுக்கிறது. அதர்வாவுக்கு போஸ்டிங் கிடைத்தபின், அசுர வேகம்தான். இறுதிக்காட்சியில்தான் இளைப்பாறுகிறது. ஆங்காங்கே, நாயகன் செய்யும் சில சாமர்த்தியமான வேலைகள் செம்மை.

100 - சினிமா விமர்சனம்

கடைசி வரைக்கும் கணிக்கமுடியாத ஷார்ப்பான திரைக்கதையும்,  சின்னச்சின்ன நகைச்சுவை களும்தான் படத்தின் பலம்.

என்னதான் அதர்வா திடமான ஆள் என்றாலும், எல்லா இடங்களுக்கும் அதர்வாவே நேரடியாக ஓடோடி உதவிக்கொண்டி ருந்தால், மற்ற போலீஸ் எல்லாம் எதற்கு இருக்கிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. எல்லாவற்றையும் கனெக்ட் செய்கிறேன் என, ஒரு கதைக்குள் அத்தனை கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை, மாஸ் கூட்டியிருக்கிறது; கூடவே இரைச்சலையும். கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவு மாஸ் படங்களுக்கான டெம்ப்ளேட்டில் அச்சு பிசகாமல் சுழன்றிருக்கிறது. ரூபனின் படத்தொகுப்பில் பரபரக்கின்றன காட்சிகள். திலீப் சுப்பராயனின் சண்டைக் காட்சிகள் செம வெயிட்டு.

ராதாரவியின் பாத்திரத்தைப் பயன்படுத்திய விதம், பிரதான பாத்திரங்களுக்கு நடுவே இருக்கிற அந்தக் கண்ணுக்குத் தெரியாத தொடர்புகள், அந்த ‘டீ சாப்டுட்டு வரேன்’ டயலாக் என்று சின்னச் சின்னதாக எக்கச்சக்க விஷயங்களைச் சேர்த்து இயக்குநர் சாம் ஆன்டன் கட்டியிருப்பது த்ரில் தோரணம்!

போலீஸ் கதைகளில் புதுசாக... கன்ட்ரோல் ரூம் கோணத்திலிருந்து திக்திக் கதை சொன்னதில் கவர்கிறது இந்த 100..!

- விகடன் விமர்சனக் குழு