பிரீமியம் ஸ்டோரி

விக்ரம் நடித்திருக்கும் ‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை ஜூன் இரண்டாம் வாரத்தில் வெளியிட முடிவெடுத்திருக்கிறது படக்குழு.

ரோலிங் சார்

விஜய்தேவரகொண்டா தன் பிறந்தநாளுக்கு அவர் படம் பொறித்த ஐஸ்கிரீம் ட்ரக் ஒன்றை ஊருக்குள் சுற்றவிட்டு ரசிகர்களுக்கு இலவச ஐஸ்க்ரீம் கொடுத்துக் கொண்டாடியிருக்கிறார்!

ரோலிங் சார்
ரோலிங் சார்

மூலிகை பெட்ரோல் ராமர்பிள்ளையின் வாழ்க்கைக் கதையை வெப்சீரிஸாக எடுக்கவிருக்கிறார்கள். இதில் ராமர்பிள்ளை பாத்திரத்தில் நடிக்கவிருப்பவர் பிரசன்னா.

‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் இதற்குமுன்பு எந்த ஹாலிவுட் படமும் வசூலிக்காத அளவுக்கு இந்தியாவில் மட்டுமே 400 கோடி சம்பாதித்திருக்கிறது.

ரோலிங் சார்

லக அழகி மனுஷிஷில்லார் அக்‌ஷய்கன்னாவுக்கு ஜோடியாக பாலிவுட்டில் அறிமுகமாகவிருக்கிறார்.

ரோலிங் சார்

ணிரத்னம் இயக்கும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்களோடு புதிதாக இணைந்திருப்பவர் அமலாபால்.

ரோலிங் சார்

னுஷ் நடித்த ஹாலிவுட் படமான `எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகீர்’ பார்சிலோனா திரைப்படவிழாவில் சிறந்த நகைச்சுவைப் படம் என்கிற விருதினை வென்றுள்ளது.

ரோலிங் சார்

‘தர்பார்’ படத்தில் இரண்டு வில்லன்கள். ஒருவர் பாலிவுட்டின் ப்ரதீக் பாபர், இன்னொருவர் மலையாள நடிகர் செம்பன் வினோத் ஜோஸ்.

ரோலிங் சார்

`இருட்டு அறையில் முரட்டு குத்து’ இயக்குநரின் அடுத்த படத்தில் அர்விந்த்சாமிதான் ஹீரோ. துப்பறியும் நிபுணர் பாத்திரமாம்.

ரோலிங் சார்

ஜேம்ஸ் கேமரூன் எடுத்துக்கொண்டிருக்கும் ‘அவதார்’ படத்தின் சீக்வெல் 2020 இறுதியில் வெளியாகும் என எதிர்பார்த்திருக்க... படம் 2021ல்தான் ரிலீஸாம். 

ரோலிங் சார்
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு