Published:Updated:

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!
பிரீமியம் ஸ்டோரி
கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

Published:Updated:
கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!
பிரீமியம் ஸ்டோரி
கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

ரே ஒரு படம்தான், தமிழ் சினிமா ரசிகர்களால் தேடப்படும் இயக்குநர்கள் பட்டியலில் இணைந்தவர் `மௌனகுரு’ சாந்தகுமார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ஆர்யா நடிப்பில் ‘மகாமுனி’யோடு  வரவிருக்கிறார். ஏழு வருட இடைவெளியில் கொஞ்சம் பருமனான உடல், வெட்டிய முடி என ஆளே மாறியிருக்கிறார், இந்தத் தனிமைக் காதலர்!


“தனிமை நீங்க விரும்பித் தேர்ந்தெடுத்துக்கிட்டதா, வாழ்வின் போக்கில் வந்ததா?”

“நான் இருந்தது மதுரைக்குப் பக்கத்துல ஒரு சின்ன டவுன். கெட்டுப்போயிடுவேன்னு எங்க அம்மா என்னைத் தெருவுல விளையாட விடமாட்டாங்க. எங்க வீடு ரொம்பப் பெருசு. கொல்லைப்புறத்துல தட்டான்பூச்சி புடிக்கிறதும், பட்டாம்பூச்சி புடிக்கிறதுமாவே பொழுது போயிடுச்சு. அது ஒன்பதாம் வகுப்புல பாம்பு பிடிக்கிறவரை கொண்டுபோயிடுச்சு. சுருக்கமா சொன்னா, இயல்பான குழந்தைத்தனத்தை நான் இழந்தேன்னுதான் சொல்லணும். வீட்டுல கட்டிப்போட்டிருக்கிற நாய், ரோட்டுல போற நாயைப் பார்த்துத் தவ்வுமே... அப்படித்தான் இருந்தது என்னோட சின்ன வயசு. எனக்கு அப்போ தனிமை பிடிக்காது; இப்போ எனக்கு அதுதான் தேவையாகிடுச்சு.”

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

“ ‘மகாமுனி’ என்ன மாதிரியான படம்?”  

“ ‘மௌனகுரு’ ஏகப்பட்ட பாராட்டு. ஆனா, படம் யாருக்கும் சரியா போய்ச்சேரல. தெரிஞ்ச சினிமா நண்பர் ஒருத்தர் வம்படியா கூப்பிட்டு, ‘இன்டஸ்ட்ரியில நீ இருக்கமாட்ட; நான் இருப்பேன்’னு நெகட்டிவா பேசினார். ‘இவன் வாயை நாம ஏன் கிழிக்கக்கூடாது’ன்னு எனக்குள்ளே இருக்கிற அரக்கன் சொல்றப்போ, ‘அவன் பேச்சைக் கேட்காதே’ன்னு கடவுள் காப்பாத்திக்கிட்டே இருந்தார். இப்படித்தான், எனக்குக் கோபம் அதிகமா வரும்.

எங்க அம்மா குடும்பத்துல பலரும் வேட்டையாடிகள். அப்பாவுக்கு அப்பா, சுபாஷ் சந்திர போஸுடைய INA-ல இருந்தார். ஈராக்ல 7 வருடம் ஜெயில் தண்டனை அனுபவிச்சார். செத்தே போயிருப்பார்னு நினைச்சுக்கிட்டு இருந்தப்போ, உயிரோடு திரும்ப வந்தார். இப்படிக் கொஞ்சம் கரடுமுரடான வாழ்க்கை முறையில இருந்ததனால, எனக்கும் கோபம் கொஞ்சம் அதிகமா வந்திருக்கலாம். இப்படிச் சில கோபமும் கொந்தளிப்பும்தான், ‘மகாமுனி’ ”

``என்ன மாதிரியான கதை?” 

``சீஸனுக்கு ஏத்த மாதிரி எல்லா வேலையும் செய்றவர் ஆர்யா. அவருக்கு மனைவியா இந்துஜா. இவங்களுக்கு ஒரு பையன். அமைதியான நடுத்தரக் குடும்பம். அவங்களுக்கு இருக்கிற பொருளாதாரப் பிரச்னையிலிருந்து, உயிருக்கு ஆபத்தா வர்ற ஒரு சூழல் வரை இந்தக் கதாபாத்திரங்கள் எப்படி எதிர்கொள்கின்றன என்பதுதான் கதை. ‘மெளன குரு’ ஆடியன்ஸ்கிட்ட ஒரு மேஜிக் பண்ணுச்சு இல்லையா... அப்படி ஆடியன்ஸைக் கட்டிப்போடுற திரைக்கதை ‘மகாமுனி’யிலும் இருக்கும். இது ஒரு குடும்பப் படம்.

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

“ஆர்யாவைத் தேர்ந்தெடுத்த காரணம்?”  

“ஆறேழு வருடத்துக்கு முன்னாடி இருந்த ஆர்யா இந்தக் கதாபாத்திரமா நடிச்சிருப்பாரான்னு தெரியல. ஆனா, இப்போ ‘சைக்கிளிஸ்ட்’ ஆர்யாவுக்கு இந்தக் கேரக்டர் புரியுது. நான் ரொம்ப தூரம் பைக்ல டிராவல் பண்ற ஆள். ஆர்யாவும் அப்படித்தான். யாருடைய துணையும் இல்லாம, அமைதியா 300, 400 கிலோ மீட்டருக்கு சைக்கிள், பைக்ல போகும்போது, ஒரு மனவுறுதி வரும். அப்படி ஒரு ஆள் இந்தக் கதைக்குத் தேவைப்பட்டார். ஆர்யா, அப்படியான நபர்தான். படத்துல அந்தக் கேரக்டரை சரியா பண்ணியிருக்கார். படத்துல மூணு லுக்ல வர்றார் ஆர்யா!”

“இந்துஜா, மஹிமா நம்பியார்... ரெண்டு ஹீரோயின்கள் இருக்காங்களே?”

“ `தீபா’ங்குற ஜர்னலிசம் ஸ்டூடன்ட்டா மஹிமா நடிச்சிருக்காங்க. வழக்கமான கேரக்டரா இல்லாம, இந்தப் படத்துல மஹிமாவைப் புதுசா பார்க்கலாம். இந்துஜாவுக்கு, ‘விஜி’ங்கிற கதாபாத்திரம். இந்துஜாவுக்குப் பதிலா வேற ஒரு நடிகை அந்தக் கேரக்டரைப் பண்ணியிருப்பாங்களான்னு தெரியல. இந்துஜா ஒரு நடிப்பு ராட்சஸி. படத்துல அஞ்சு வயசுப் பையனுக்கு அம்மாவா நடிச்சிருக்காங்க.”

“மற்ற நடிகர்கள், டெக்னீஷியன்கள்?”

“சிறுசும் பெருசுமா பல கேரக்டர்ஸ். மஹிமாவுக்கு அப்பாவாக ஜெயப்பிரகாஷ் சார், முக்கியமான கேரக்டர்ல இளவரசு சார் நடிச்சிருக்காங்க. ரெண்டுபேரும் நாம ரசிச்சுப் பார்க்கிற அளவுக்கு நடிக்கிறவங்க. தவிர, ரோகிணி மேடம், பாலாசிங், அருள்தாஸ், காளி வெங்கட், தீபா, ‘கலக்கப்போவது யாரு’ யோகி... படத்தோட ஒளிப்பதிவாளரா அருண் பத்மநாபன் அறிமுகமாகிறார். ‘மெளனகுரு’வுக்கு மியூசிக் பண்ணுன தமன்தான் இதுக்கும் மியூசிக். அவரை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவரோட முழுத் திறமை இன்னும் வெளியே வரலைன்னுதான் சொல்வேன். படத்துல மூணு பாட்டு இருக்கு, அதுல இரண்டு பாடலை அ.முத்துலிங்கம் ஐயா எழுதியிருக்கிறார். ஒரு அரசியல் பாடல் இருக்கு. அதை, என் உதவி இயக்குநர் எழுதியிருக்கார்.”
 
“ ‘தில்’, ‘தூள்’, ‘கில்லி’ படங்கள்ல உதவி இயக்குநரா வொர்க் பண்ணியிருக்கீங்க. ஆனா, உங்க படத்துல கமர்ஷியல் கம்மியா இருந்துச்சே!”

“சினிமா மேதாவிகளுக்கானதல்ல; பாமரனுக்கான ஊடகம். அதனால, நான் கதை எழுதும்போது ராமேஸ்வரத்துல கருவாடு விற்கிற பாட்டிக்கும், சிவகாசியில தீப்பெட்டி ஒட்டுற அக்காவுக்கும் புரியுமான்னு யோசிப்பேன்.  மத்தபடி, ‘மெளனகுரு’ ஒரு கமர்ஷியல் படம்தான். நீங்க எதிர்பார்க்கிற பாட்டு, ஃபைட்டு வெச்ச படங்களையெல்லாம் நான் சர்க்கஸ் மாதிரிதான் நினைக்கிறேன். ஒரு சர்க்கஸ் ஆர்டர்ல என் படத்தை நீங்க பார்க்க முடியாது.”

கோபம்... கொந்தளிப்பு... தவம்... - மிரட்டும் ‘மகாமுனி’!

“சமீபகால சினிமாவுல வன்முறை அதிகமா இருக்கே, ஓர் இயக்குநரா அதை எப்படிப் பார்க்கிறீங்க?”

“சினிமாவுல மட்டுமா வன்முறை இருக்கு... தூத்துக்குடில 13 பேரைச் சுட்டுக் கொன்னாங்களே, அதுவும் வன்முறைதானே?!”

“இந்த ஏழு வருட இடைவெளியில என்ன செய்தீங்க?”

“இந்த இடைவெளியில நிறைய டிராவல் பண்ணினேன். அந்த அனுபவங்கள் எல்லாம்தான் என் அடுத்தடுத்த படமா வரப்போகுது. பயணம்தான் என் படைப்புகளுக்கான மூலதனம். ஒரு படத்துக்குக் கதை எழுத ஆபீஸ் தேவையில்லை; பேப்பரும் பென்சிலும் போதும். என் வாழ்க்கையை அடுத்து எங்க நகர்த்தணும்னு தொடங்கி, இறுதியா எங்கே அடங்கணும்ங்கிற வரை நான் பயணங்கள் மூலமா முடிவெடுத்து வெச்சிருக்கேன்.”

“அடுத்து?”

“ ‘மகாமுனி’ தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சார்கூடதான் அடுத்த படமும் பண்ணப்போறேன்.’’

- வெய்யில், அலாவுதின் ஹுசைன், படம்: தி.குமரகுருபரன்