Published:Updated:

கீ - சினிமா விமர்சனம்

கீ - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கீ - சினிமா விமர்சனம்

கீ - சினிமா விமர்சனம்

கீ - சினிமா விமர்சனம்

கீ - சினிமா விமர்சனம்

Published:Updated:
கீ - சினிமா விமர்சனம்
பிரீமியம் ஸ்டோரி
கீ - சினிமா விமர்சனம்

ஹேக்கருக்கும் ஹேக்கருக்கும் சண்டை, அதை ஊரே வேடிக்கை பார்க்கிறது. அதுதான் `கீ.’

தேர்வில் காப்பியடிப்பது, பெண்களை ஏமாற்றுவ தென சில்லறைச் செயல்களுக்காக ஹேக்கிங்கைப் பயன்படுத்தும் ஹேக்கர், சித்து; கொலை செய்யவும், கொள்ளையடிக்கவும் ஹேக்கிங்கைப் பயன்படுத்தும் ஹேக்கர், சிவா. இருவரும் ஒரு புள்ளியில் சந்தித்துக்கொள்ள, ஆரம்பமாகிறது அறிவுப்போர்!  ட்யூப் லைட், ஃபேன், அம்மிக்கல், ஆட்டுக்கல்லைத் தவிர எல்லாவற்றையும் ஹேக் செய்து சண்டை  போடுகிறார்கள். இறுதியில் வென்றது யார் என, பார்வையாளர்களை தர்ம அடி அடித்துக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் காளீஸ்.

கீ - சினிமா விமர்சனம்

சித்துவாக ஜீவா, தன்னால் முடிந்த அளவுக்குப் படத்தைத் தாங்கியிருக்கிறார். சித்துவின் காதலி தியாவாக நிக்கி கல்ராணி என்ற வரியை எழுத மட்டுமே நாயகி உதவியிருக்கிறார்.சித்துவின் நண்பன் மார்க்காக ஆர்.ஜே.பாலாஜி. காமெடியில் நல்ல மார்க் வாங்குகிறார். சித்துவின் அப்பாவாக நடித்திருக்கிறார் தெலுங்கு நடிகர் ராஜேந்திர பிரசாத். படத்தில் வில்லன் கொடுக்கும் டார்ச்சரைவிட, சென்டிமென்ட் கலந்த காமெடி என்ற பெயரில் இவர் பண்ணும் டார்ச்சர் கொடூரமாய் இருக்கிறது. வில்லன் சிவாவாக கோவிந்த் பத்மசூரியா. படம் முழுக்க, பாய் வீட்டுக் கல்யாணத்தில் பிரியாணியைப் பார்ப்பது போன்றதொரு லுக்கை வைத்துக்கொண்டு, வில்லன் லுக் என ஒப்பேற்றுகிறார்.

கீ - சினிமா விமர்சனம்

இழுத்து இழுத்து எடுத்தால்கூட இருபது நிமிடங்களே வரக்கூடிய கதை. அதை இரண்டு மணிநேரப் படமாக்கிய இயக்குநரின் மன தைரியத்துக்கு, ஒரு டிஜிட்டல் பூங்கொத்து. தேவையில்லாத காட்சிகளை எல்லாம் வெட்டி எறியாமல் விட்டுவைத்த தைரியத்தைப் பாராட்டி, படத்தொகுப்பாளருக்கு ஒரு டிஜிட்டல் கத்தரிக்கோல். காட்சிகளில் இல்லாத உணர்வுகளை எல்லாம், இசையால் ஊட்ட முயன்ற இசையமைப்பாளருக்கும், விஷுவலாய் தனி ஆளாய் நின்று டீ ஆத்திக்கொண்டிருந்த ஒளிப்பதிவாளருக்கும் டிஜிட்டல் வெஞ்சனக் கிண்ணங்கள். கிராஃபிக்ஸ் குழுவுக்கு மட்டும்தான் உண்மையான மனம் நிறைந்த பாராட்டுகள்.

படத்தின் கதைக்குக் கொஞ்சமும் சம்பந்தமில்லாத அத்தனை இரட்டை அர்த்த, ஆபாச வசனங்கள். அதில் சிலவற்றை குழந்தை நட்சத்திரங்களைக் கொண்டு பேசவைத்திருக்கிறார்கள். சைகை மொழியில் பேசியிருந்தால்கூட சுவாரஸ்யம் இருந்திருக்கும்போல. வசனங்கள், படத்தின் மிகப்பெரும் வைரஸ். அவ்வளவு எளிதாய்க் கணித்துவிடக்கூடிய திரைக்கதை அமைப்பு, கதைக்குள் செல்லமாட்டேன் என அடம்பிடிக்கும் காட்சிகள், கொஞ்சமும் யதார்த்தமற்ற ஹேக்கிங் வித்தைகள் என ஏராளமான மைனஸ்.

கடைசி இருபது நிமிடங்களில் இருந்த சுவாரஸ்யமும் யதார்த்தமும் பரபரப்பும் படம் முழுக்க இருந்திருக்கலாம்.

- விகடன் விமர்சனக் குழு