
வாசகர் மேடைக்கு சமூக வலைதளங்கள் மூலமும், கடிதங்கள் மூலமும் வந்த எக்க்கச்சக்க்கமான பதில்களுக்கு நன்றி! இதோ எங்கள் கேள்விகளுக்கு உங்கள் பதில்கள்!


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
கிரிக்கெட் உலகக் கோப்பையை இந்தியா கைப்பற்ற வேண்டுமானால் எந்த நடிகரை/ நடிகையை அணியில் சேர்த்துக்கொள்ளலாம், ஏன்?
(விக்ராந்தைச் சேர்க்கலாம் என்று நிறைய பேர் சொல்லியிருந்தார்கள். சிசிஎல்-லில் அவரது விளையாட்டு எந்த இண்டர்நேஷனல் மேட்ச்சுக்கும் இணையானது என்றிருந்தார்கள்)
அவென்ஞ்சர்ஸ் முதல் ஐ.பி.எல் வரை எந்த இடத்தில் பொருத்திப் பார்த்தாலும் பொருந்தி மக்கள் மகிழ்வோடு ஏற்கும் ஒரே நபர் வைகைப்புயல் மட்டுமே. அவரை நம் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாகக்கூட நியமிக்கலாம் .- selvachidambara
ராகவா லாரன்ஸ். ஏதாவது கிரிக்கெட் பிளேயர் பேயை உடம்புக்குள் புகுத்துனா, கப் நமக்குத்தான்! - mohanramko
சூர்யா!- ஏன்னா இவர் அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டு! - drezhilan
சீமான்தான்! கதை சொல்லியே ஜெயித்துவிடலாம்! - h_umarfarook
சமுத்திரக்கனிதான். அவரை ஸ்லிப்ல நிறுத்தி பேட்ஸ்மேனிடம் பேசவிடணும். ரன்னர் எண்ட்ல நிற்கும்போது எதிரணி பௌலரிடமும் பேச விடணும். இவரது அட்வைஸ் பேச்சால் கடுப்பாகிடுவாங்க. நாம ஜெயிச்சிடலாம். ஒரே கண்டிஷன்... நம்ப பிளேயர்களிடம் இவர் பேசவே கூடாது. - mekalapugazh
ஆக்ஷன் கிங் அர்ஜுன். அவர்தான் வெறித்தனமான தேசப்பற்றோடு விளையாடுவாரு... - Raja Dhurai

இன்றைய இன்டர்நெட் யுகத்துக்கு ஏற்றபடி நச்சுனு ஒரு பழமொழி, ஸாரி, புதுமொழி சொல்லுங்க!
ஆன்ட்ராய்டுசூடி
ட்வீட் செய்ய விரும்பு
ஆறுவது ரெட்மி
சார்ஜர் கரவேல்
பேடிஎம் விலக்கேல்
செல்ஃபி விளம்பேல்
ஃவைஃபையது கைவிடேல்
எமோஜி,ஸ்டிக்கர்ஸ் இகழேல்
பைரசி இகழ்ச்சி
ஸ்விகி இட்டு உண்
மீம்ஸ் ஒழுகு
கூகுள்ஸ் ஒழியேல்
டேட்டா சுருக்கேல் - IamJeevagan
இணையத்தில் ரொம்ப நேரம்,
இதயங்கள் ரொம்ப தூரம். - drkandaraghav
இணையத்தில் கதவுகள் இல்லை. விண்டோஸ்கள் மட்டுமே உண்டு - kumarfaculty
டவரில்லா நெட்வொர்க்கை கண்டபோதெல்லாம் வாடினேன் - selvachidambara
மாமியார் ஒடைச்சா ஜியோ போனு... மருமக ஒடைச்சா ஐ போனு! - IamJeevagan
கமல் நடிச்சா அது டிக் டிக் டிக்
ஊரே நடிச்சா அது டிக் டாக்! - Ramesh Rajendran

எடப்பாடியும் ஓ.பன்னீர்செல்வமும் தங்கள் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள இன்னும் என்னென்ன வித்தியாசமான முறைகளைக் கையாளலாம்?
சட்டசபை பதவிக்காலத்தை அவர்களின் ஆயுட்காலப் பதவியாக அங்கீகரிக்க ஜனாதிபதி அவசர சட்டம் கொண்டுவர பிரதமர் மோடியை அணுகலாம். - கே.அசோகன், மும்பை 89
அடுத்த சட்டமன்றத்துக்குத் தேர்வாகப்போகும் சட்டமன்ற உறுப்பினர்களையும் இப்போதே தகுதிநீக்கம் செய்துவிட்டால் இன்னுமோர் ஐந்தாண்டுகளை ஓட்டிவிடலாம். - கே.எஸ்.கவின், மணலூர்ப்பேட்டை
தி.மு.க வெற்றிபெற்ற சட்டமன்றத் தொகுதிகளை அருகிலுள்ள அ.தி.மு.க சட்டமன்றத் தொகுதியுடன் சேர்த்து ‘அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் மட்டும்தான் சட்டமன்றம் வரவேண்டும்’ என்று அறிவித்துவிடலாம். - ஜி.சத்தியமூர்த்தி, கும்பகோணம்.
தங்கள் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் தி.மு.க எம்.எல்.ஏக்களுக்கு சுழற்சி முறையில் ஒருநாள் முதல்வராகவும், அ.ம.மு.க எம்.எல்.ஏக்களுக்கு ஒருநாள் துணைமுதல்வராகவும் பதவி தருகிறோம் என்று பம்பர் ஆஃபர்களை அள்ளிவிட்டு ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள வழிவகை செய்துகொள்ளலாம். - இடைப்பாடி ஜெ. மாணிக்கவாசகம்

கமலுக்கு டார்ச்லைட் சின்னம். ரஜினி அரசியலுக்கு வந்தால் அவருக்கு என்ன சின்னம் தரலாம், ஏன்?
ரஜினிக்கு ரப்பர் சின்னம். கடைசி வரை இழுத்துக்கொண்டே இருக்கலாம். - எஸ்.ஷீரீன் தாஜ், திருச்சி.
கேட் சின்னம். பல படங்களில் அட்டகாசமாக அவர் திறந்தது கேட்டைத்தான். கோட்டையின் ‘கேட்’டைத் திறந்து உள்ளே போனால், என்ன செய்வார் என அவர் ஆட்டத்தையும் பார்க்கலாமே. - ராஜராஜா, சென்னை 41
ஃபோகஸ் லைட். சினிமாப் பக்கமும் அரசியல் பக்கமும் தேவைக்கேற்ப திருப்பிட்டே இருக்கலாம்! - பொ.மாரிமுத்துக்குமார், திருச்சி
பூதக்கண்ணாடி. அவரது வருகையைத் தேடவும், கொள்கைகளைத் தேடவும் வசதியாக இருக்கும். வி,எம்,முஹம்மது பஷீர், கோவை.
போர்வாள். அவர் அரசியலுக்கு வந்துட்டா போர் வந்துடுச்சுன்னுதானே பொருள்!
கே.சேவியர் அமல்ராஜ், திருநெல்வேலி
‘சிஸ்டம்’ சின்னம்தான்! சிஸ்டத்தைச் சரிசெய்யத்தானே அவர் தயாராகிட்டிருக்கார்?! - விண்மீன் மைந்தன், சென்னை
செல்போன் டவர்!
1. அடிக்கடி சிக்னல் வீக் ஆகிடும்,
2. யாரோ ஒருவர் பின்னால் இருந்து இயக்கினால் மட்டுமே இயங்கும்.
3. புதுசு புதுசா அறிவிப்பு வெளியாகும்.
4. அதன் கதிர்வீச்சு பாதிப்பு அடுத்தவருக்கு இருக்கும். அதுக்கு ஒண்ணும் ஆகாது... - Ganapathi Chidambaram Ganesh
மைக்கைப் பார்த்த உடனே அவருக்கும் தலைசுற்றி, நமக்கும் தலை சுற்ற வைப்பதால் மைக் சின்னம் வழங்கலாம். - Ahamed Fairose Deen
நீங்கள் போடும் ஒரு சட்டம் நாளையில் இருந்தே அமலுக்கு வரும்னா என்ன சட்டம் போடுவீங்க?
டாஸ்மாக்கில் சரக்கு வாங்க மனைவியின் ஒப்புதல் கடிதம் அவசியம் என சட்டம் இயற்றுவேன். - மலர் சூர்யா, புதுச்சேரி.
தேர்தலின்போது பாதிப்பேர் ஓட்டளித்து அதிலும் பாதிப்பேரின் மெஜாரிட்டியாக இருப்பவர் ஜெயித்துவருவது நியாயமாகப் படவில்லை. எனவே நடமாடும் ‘ஓட் பூத்’ நடைமுறைக்குக் கொண்டுவருவேன். இதன்மூலம் வாக்குப்பதிவு அதிகமாகும். - இலக்சித், மடிப்பாக்கம்.
சட்டம்: பெட்ரோல் ஒருலிட்டர் 10 ரூ / டீசல் 1 லிட்டர் 5 ரூ / காஸ் சிலிண்டர் 1 - 200 ரூபாய்) - இடைப்பாடி ஜெ. மாணிக்கவாசகம்
‘50 வயதுக்கு மேல் உள்ள நடிகர்கள் நடிகைகளுடன் டூயட் பாட தடை. நடிகைகளுடன் டூயட் பாட வயது நிர்ணயிக்கப்படும்’ என சட்டம் போடுவேன். - மலர் சூர்யா, புதுச்சேரி.
கல்யாணம் முடிஞ்சதும் பசங்க தான் பொண்ணுங்க வீட்டுக்கு வரணும்னு சட்டம் போடணும். - sinamika143
இனிமேல் யாரும் எந்தச் சட்டத்தையும் போடக்கூடாது, இதுவே கடைசிச் சட்டம். - கலீல்பாகவீ
நான் வெக்கிறதுதான்டா சட்டம்! - Sarvs Sagaa

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. கீழே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!
• ? 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததைப்போல, வேறு எவற்றையெல்லாம் செல்லாது என அறிவிக்கலாம்?
• ? பிரதமர் மோடி விமானப்படைக்கு ரேடார் ஐடியா கொடுத்ததுபோல, வேறு யார் யாருக்கு என்னென்ன ஐடியா கொடுக்கலாம்?
• ? டி.ஆர் சரித்திரப்படமெடுத்தால் மன்னர் எதிரிநாட்டு அரசனைப் பார்த்து என்ன வசனத்தை ரைமிங்காகப் பேசுவார்?
• ? மதுரை ரவுடி படங்கள் - சிறுகுறிப்பு வரைக...
• ? ஒரு ரன்னில் கோப்பையைத் தவறவிட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கவிதைகளால் ஆறுதல் சொல்லுங்க...
உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :
வாசகர் மேடை, ஆனந்த விகடன், 757, அண்ணா சாலை,
சென்னை 600 002.