Published:Updated:

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”
பிரீமியம் ஸ்டோரி
“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

Published:Updated:
“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”
பிரீமியம் ஸ்டோரி
“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

“உங்கள் குருநாதர் இயக்குநர் பாக்யராஜ் திரையுலகில் காலடிவைத்து 40 ஆண்டுகள் நிறைவு செய்வதையொட்டி குருவை நீங்கள் பேட்டி எடுக்க வேண்டும்” என சிஷ்யர் பாண்டியராஜனைக் கேட்டுக்கொண்டோம். உடனே உற்சாகமாக ஒப்புக்கொண்டார். பாக்யராஜ் அலுவலகத்தில் நுழைந்ததும் “வாய்யா பாண்டியா” என்று சிஷ்யனை குரு வாஞ்சையோடு அழைக்க... பேட்டி  தொடங்குகிறது.

பாண்டியராஜன் : “சார், உங்க டைரக்டர் பாரதிராஜா சார்கிட்ட உங்களுக்குப் பிடித்தது என்ன, பிடிக்காதது என்ன?”

பாக்யராஜ் :  “ எங்க டைரக்டர்கிட்டே  எனக்குப் பிடிச்சது தேனீப்போல சுறுசுறுப்பான அவர் உழைப்பும், எந்தச் சூழ்நிலையிலேயும் தளராத   தன்னம்பிக்கையும். ‘என் படம் இதுதான், இப்படித்தான் வரும்’  என்று முழுத்தெளிவோட இருப்பார். ‘16 வயதினிலே’ படத்தோட எடிட்டிங். ஒரு சீன் சொல்லி ‘ஷூட்டிங்குல அந்த சீன் எடுத்திருந்தோமே, அது எங்க?’ன்னு  டைரக்டர்  கேட்க, ‘நீங்க அப்படி ஒரு காட்சிய ஷூட் பண்ணவே  இல்லை’ன்னு நானும், பாலகுருவும் சொன்னோம். நாங்கள் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் அவர் கேட்கவே இல்லை.  நான் கிளம்பிட்டேன்.  டைரக்டரும், பாலகுருவும் தேடுறத நிறுத்தல. எப்படியோ நைட்டு முழுக்கத் தேடிக் கண்டுபிடிச்சுட்டாரு. அந்த அளவுக்கு, தான் என்ன வேலை செஞ்சோம்ங்கிறதுல அவருக்குத் தெளிவு இருந்தது. பிடிக்காததுன்னு கேட்டா, ஒரு விஷயத்துல தனியா முடிவெடுத்துட்டா அதிலுள்ள குறைநிறைகளை யார் எவ்வளவு எடுத்துச் சொன்னாலும் ஏத்துக்கவே மாட்டார். பிடிவாதமா இருப்பார். மனசுக்கு என்ன தோணுதோ அதைத்தான் எடுப்பார். இது தப்புன்னு சொல்லலை. ஆனா, எனக்கு இது மாதிரி விஷயத்துல  உடன்பாடில்லை என்பது என்னோட தனிப்பட்ட கருத்து.”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

பாண்டியராஜன் :  “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் சார் எப்போலாம் உங்க வீட்டுக்கு வருவார், எப்படியெல்லாம் உங்ககிட்ட பேசுவார்னு உங்க அசிஸ்டென்டான எனக்கு  நல்லாவே தெரியும்.  உங்களுக்கு, எம்.ஜி.ஆர் கிட்ட ஏதாவது  கேட்கணும்னு நினைச்சு, கடைசிவரை கேட்க முடியாமப்போன கேள்வி ஏதாவது இருக்குதா?”

பாக்யராஜ் :“தலைவருக்கு திடீர்னு  உடல்நிலை சரியில்லாமப்போனவுடனே முதல்ல  சென்னை அப்போலோவில் அட்மிட் பண்ணியிருந்தோம். விஷயம் தெரிஞ்சு பிரதமர் இந்திரா காந்தி  நேரடியா ஆஸ்பத்திரிக்கே வந்துட்டாங்க. வெளிநாட்டுக்கு  உடனே சிகிச்சைக்கு அனுப்பச் சொல்லி மத்திய அரசாங்கச் செலவுலேயே தலைவரோட மொத்த ட்ரீட்மென்ட்டையும் பார்த்துக்கிட்டாங்க. அமெரிக்காவிலிருந்து  தலைவர் குணமாகி வர்றதுக்கு முன்னாடியே இந்திரா காந்தியம்மாவ சுட்டுக் கொன்னுட்டாங்க. தலைவர் சென்னை திரும்பியதும் இந்திராகாந்தி  உதவி செய்த விஷயத்தைச் சொன்னோம். அப்போதான் குணமாகி வந்திருக்காரேன்னு  இந்திரா அம்மா இறந்ததைப்பத்தி மட்டும் சொல்லல. இந்திரா காந்தி எடுத்துக்கிட்ட மெனக்கெடல்களுக்காக நன்றி சொல்லணும்னு தலைவர் விரும்பினார். என்னிடம் இந்திராகாந்திக்கு போன் போடச்சொல்லி வற்புறுத்திக்கிட்டே இருந்தார். ஒரு கட்டத்துல சமாளிக்க முடியாம இந்திராகாந்தி இறந்த விஷயத்தைப் பொறுமையா எடுத்துச் சொல்லிட்டேன். அடுத்த நிமிஷமே நொறுங்கிட்டார்.  அதன்பிறகு ரெண்டுநாளா சரியா தூங்காம, சாப்பிடாம அந்தம்மா இறந்த  துக்கத்திலேயேதான் இருந்தார்.

புரட்சித்தலைவர்  வழக்கமா ஜிப்பா, குல்லா, கூலிங்கிளாஸ் சகிதமான தோற்றத்தோடுதான் எல்லோரையுமே சந்திச்சுப் பேசுவார். அவர் இறக்கிறதுக்கு முன்னாடி ஒருமுறை தோட்டத்துக்கு தலைவரைப் பார்க்கப் போயிருந்தேன், மாடியில பெட்ரூம்ல படுத்திருந்தவர்கிட்ட தகவல் சொன்னதும் என்னை மாடிக்கு வரச்சொன்னார். உள்ளே போனதும் தொப்பி அணியாம, கண்ணாடி போடாம, சில்க்ஜிப்பா இல்லாம, பனியன் போட்டு, கைலி கட்டிக்கிட்டு படுத்துட்டிருந்தார். எதிரே இருந்த  சேர்ல உட்காரப்போன என்னை தன் பெட்டுக்குப் பக்கத்துல வந்து உட்காரச் சொன்னார். தலைவரோட காலைப் பார்த்ததும் எனக்கு அதிர்ச்சி. “தலைவரே... கால் ரொம்ப வீங்கியிருக்கு. ஏன் எல்லா வேலையையும் நீங்களே இழுத்துப்போட்டுச் செய்யுறீங்க.  நம்பிக்கையான ஒருத்தரை வெச்சிக்கிட்டு அவருகிட்ட பொறுப்பை ஒப்படைக்க வேண்டியது தானே”ன்னு  உரிமையா கேட்டேன்.  “என் வேலையை நான்தான் பார்க்கணும் வேற யார் இருக்காங்க, சொல்லுங்க?’ன்னு திருப்பிக் கேட்டார்.  பதில் சொல்ல முடியாம திணறிப் போயிட்டேன். ‘நான் இருக்கேன் தலைவரே’ன்னு அப்ப நான் ஏன் சொல்லலன்னு இப்பவும் நினைக்கிறதுண்டு.

அப்போ ஆர்.எம்.வீரப்பன், ஜெயலலிதான்னு ரெண்டு பேருக்கும் அதிமு.க-வில் கடுமையான போட்டி இருந்துச்சு. நான் தலைவரிடம் ‘நீங்க யாரையாவது ஒருத்தரை அடையாளம் காட்ட லாமே’ன்னேன். “நான் எப்படி சுயமா போராடி வந்தேனோ அதேமாதிரி அவங்களும்  வரட்டும். நான் யாரையுமே அடையாளம் காட்ட மாட்டேன்’னு சொல்லிட்டார். ”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

பாண்டியராஜன் : சினிமாவில் சிலசமயம் நாம எழுதுற வசனம் வாழ்க்கையில் பலிச்சுடும்னு சொல்வாங்க. அதுபோல உங்களுக்கு ஏதாவது நடந்திருக்கா?’’

பாக்யராஜ் :“நான் ‘புதிய வார்ப்புகள்’ படத்துல ஹீரோவா அறிமுகமானேன். அந்தப்படத்துக்கு நான்தான் வசனம் எழுதினேன். ஒரு காட்சியில் வயசான அம்மா, `ஏம்பா... உனக்குக் கல்யாணம் பண்ணிவைக்க அம்மா இல்லையாப்பா?’ன்னு கேட்பாங்க. நான் ‘அம்மா வெளியூர்ல இருக்காங்க’ன்னு வசனம் எழுதியிருக்கலாம். ஆனா ‘என் அம்மா செத்துப் போயிட்டாங்க’ன்னு எழுதி ருப்பேன். ‘புதிய வார்ப்புகள்’ ரிலீஸானப்போ என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாமப்போய், 16-வதுநாள் இறந்துபோய்ட்டாங்க. சினிமாவுல எப்படியும் ஜெயிச்சிடுவேன்னு கனவு கண்ட என் அம்மா  கடைசிவரை ‘புதிய வார்ப்புகள்’ படத்தைப் பார்க்காமலே இறந்து போயிட்டாங்க.”

பாண்டியராஜன் : “உங்கள் வாழ்க்கையிலே ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டுச் செய்யும் நீங்கள், அவசரத்தில் எடுத்த முடிவு என்ன? அதனால் ஏற்பட்ட  விளைவு என்ன?’’ 

பாக்யராஜ் : ``பாண்டியா... என்ன பதில்  சொல்லப்போறேன்னு தெரிஞ்சே கேக்குற மாதிரி இருக்கே ” என்றவர் தொடர்ந்து “நான் அவசரமாக ரெண்டு விஷயத்தில முடிவெடுத்தேன்.  ஒண்ணு அரசியல் கட்சி ஆரம்பித்தது. அப்போ சினிமா ஷூட்டிங்கில் பிஸியா இருந்ததால, என் கட்சியில் இருந்த இரண்டாம் கட்டத் தலைவர்கள் என்னைக் கலந்து ஆலோசிக்காமலே தப்புத்தப்பான முடிவுகளை எடுத்தாங்க. நான் வெளியூர்ல ஷூட்டிங்குல இருந்தப்போ என்கிட்ட கேட்காமலே அப்போ நடந்த தேர்தல்ல தி.மு.க-வுக்கு ஆதரவு தெரிவித்து அறிக்கை விட்டாங்க.

தி.மு.க-வினரும் என் கட்சிக்கொடியோட எம்.ஜி.ஆர் படத்தை ஏந்திக்கிட்டு ஓட்டுகேட்க ஆரம்பிச்சுட்டாங்க. அப்போவரை என்னை எம்.ஜி.ஆர் ஆளுன்னு பார்த்த ஜெயலலிதா, அதுக்கப்புறம் எதிரியா பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. ரெண்டாவதாக நான் எடுத்த முடிவு பூர்ணிமாவ கல்யாணம் செஞ்சுட்டது. நான் பூர்ணிமாவைக் கல்யாணம் செய்ததுக்கு காரணம் மூன்று முதலமைச்சர்கள்” என்று சொல்லவும், பாண்டியராஜன் ஷாக்காகி “இது என்ன புதுசா இருக்கு?” என்று கேட்க, பாக்யராஜ் தொடர்ந்தார்,

 “ப்ரவீனா மறைவுக்குப் பிறகு கொஞ்ச நாள் தனிமையில  இருந்தேன். அப்போ சினிமாவுல இயக்குநரா உச்சத்துல இருந்த  நேரம்.  அந்தச்  சமயத்துல  சேலத்துல ஒரு அரசியல்கட்சி மீட்டிங். மேடையில எம்.ஜி.ஆர், ஆந்திர சி.எம் என்.டி.ஆர், கர்நாடக முதல்வர்  ஹெக்டேன்னு  மூணுபேரும் இருந்தாங்க. நான் எம்.ஜி.ஆருக்கும், என்.டி.ஆருக்கும் நடுவில உட்கார்ந்திருந்தேன். என்.டி.ஆர் என் காதுல, ‘சினிமாவுல உச்சத்துல இருக்குற ஒரு கலைஞன் தனியா இருக்கக் கூடாது. சீக்கிரமா இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோங்க’ன்னு சொன்னதைக் கேட்ட எம்.ஜி.ஆர், ‘நான் சொல்லணும்னு நினைச்சு க்கிட்டே இருந்தேன். நீங்க கரெக்டா சொல்லிட்டீங்க’ என்று சொல்ல, அவர்களோடு ஹெக்டேவும் சேர்ந்துகொண்டார்.  டக்னு முடிவெடுத்து பூர்ணிமாவைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு மகிழ்ச்சியா இருக்கேன். அப்போ மட்டும் நான் கல்யாணம் செய்யாமல் இருந்திருந்தால்  தனிமையில இருந்த நான் என்னவாகி யிருப்பேன்னு என்னால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை.” 

பாண்டியராஜன் : “ஜாம்பவான்  இயக்குநர், இப்பவும் பிஸியான நடிகர். எப்படி சார் நீங்க மட்டும் எப்பவுமே லைம் லைட்டுலேயே இருக்கீங்க?”

பாக்யராஜ் : “அது ஒண்ணும் கம்பசூத்திரம் இல்லை. ரொம்ப ரொம்ப  சிம்பிளான விஷயம். எதையும் சாதாரணமா நெனைக்கக்கூடாது; எல்லாத்து க்கும் மதிப்பு இருக்கு. அதுக்குரிய மரியாதையை நாம் கொடுத்தா, நமக்குரிய மரியாதை தானா கிடைக்கும்.”

பாண்டியராஜன் :   “இந்தியாவிலேயே ‘திரைக்கதைத் திலகம்’னு உங்களைத்தான் சொல்றாங்க, இன்னிக்குவரைக்கும். இப்போ இருக்கும் தமிழ் சினிமாவில் உங்களுக்குப் பிடிச்ச மாதிரி திரைக்கதை அமைக்கிறவங்க யாராவது இருக்காங்களா?”

பாக்யராஜ் :  “அது எப்படி இல்லாம இருப்பாங்க. பலபேர் இருக்காங்க. உதாரணத்துக்கு, மாரி செல்வராஜ்! ‘பரியேறும் பெருமாள்’படத்துல செத்துப்போய்ட்டான்னு நெனச்ச பொண்ணு  இன்னும் உயிர்த் துடிப்போடதான் இருக்கான்னு தெரிஞ்சதும், துணியைப் போர்த்திக்  கொல்லுற ஒரு காட்சில மொத்தப் படத்தோட எமோஷனையும்   வெச்சி ருப்பார். ஆணவக்கொலையை அதைவிடச் சிறப்பா உணர்த்திட முடியாது. அப்பா-பொண்ணுக்கு நடுவுல இருந்த பாசத்தை மனசைத் தொடுகிற மாதிரி திரைக்கதைல டைரக்டர் சிவா கொடுத்த துதான் விஸ்வாசம் வெற்றிக்கு காரணம். ‘தடம்’ ‘இமைக்கா நொடிகள்,’ ‘கோலமாவு கோகிலா’ன்னு ஒவ்வொரு ஜானர்லயும் பல  படங்களை அடுக்கிக்கிட்டே போவேன்.”

பாண்டியராஜன் :  “இயக்குநரா உங்க செகண்ட் இன்னிங்ஸ் எப்போ?”

பாக்யராஜ் : “நான் எழுதின, இயக்கிய, நடிச்ச படங்கள்ல ‘விடியும்வரை காத்திரு’, ‘ஒரு கைதியின் டைரி’ன்னு ரெண்டு படம்தான் க்ரைம் ஜானர்ல பண்ணியிருக்கேன். இனிமே நிறைய க்ரைம் படம் செய்யணும்னு  திட்டமிட்டி ருக்கேன். அதேசமயத்துல நம்ம ஸ்பெஷலான காமெடி யையும் விட முடியாதே” என்றவர், “இந்த வருஷக் கடைசிக்குள்ள பாக்யராஜோட செகண்ட் ரவுண்டு தொடங்கிடும்” என உற்சாகமாக உறுதியளித்தார்.

பாண்டியராஜன் : “இப்போ உள்ள பசங்க நாம வீட்டில் இருக்கும்போது டிவியிலே கிளாமர் சீன் ஓடுச்சுன்னா `சேனலை மாத்துடா’ன்னு சொன்னாக்கூட கேட்க மாட்டீங்கறாங்க.”

“எம்.ஜி.ஆரிடம் சொல்லாத அந்த பதில்!”

பாக்யராஜ் :“பசங்க பயங்கர ஷார்ப். வகுப்புல ஒரு வாத்தியார், ‘கம்சன், தங்கச்சி தேவகியையும், வசுதேவரையும் ஒரே சிறையில் அடைச்சு வெச்சிருக்கார். தேவகிக்கு பொறக்குற கிருஷ்ண னால்தான் கம்சன் உயிருக்கு ஆபத்து. தேவகிக்கு பொறக்குற ஒவ்வொரு குழந்தையையும் சுவரில் அடித்து கம்சன் கொன்னுடறான்’னு பாடம் நடத்திட்டிருக்கார். அப்போ ஒருத்தன் எழுந்து, ‘ஏன் சார், தேவகியையும் வசுதேவரையும் தனித்தனி செல்லுல அடைச்சிட்டா குழந்தையே பிறக்காதே’ன்னு சொன்னானாம்.”

- எம்.குணா, சந்தோஷ் மாதேவன், படங்கள்: க.பாலாஜி