Published:Updated:

தனஞ்செயன் - அனிதா உதீப் இடையே மோதலை உண்டாக்கிய `90 எம்.எல்'!

தனஞ்செயன் - அனிதா உதீப் இடையே மோதலை உண்டாக்கிய `90 எம்.எல்'!
தனஞ்செயன் - அனிதா உதீப் இடையே மோதலை உண்டாக்கிய `90 எம்.எல்'!

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் '90 எம்.எல்'. சென்சாரில் 'ஏ' சான்றிதழ் கிடைத்த இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்த வண்ணம் இருக்கின்றன. அதில் ஒரு விமர்சனத்தைப் பதிவிட்டு, `` `90 எம்.எல்' திரைப்படம் இந்தச் சமூகத்தை சீரழிக்கிறது. சமூகத்தின் மேல் அக்கறை வையுங்கள். நீங்கள் பணம் சம்பாதிக்க இளம் தலைமுறையினரிடம் நஞ்சை விதைக்காதீர்கள்" என்று ட்வீட் செய்துள்ளார், தனஞ்செயன்.

அதற்கு பதிலளித்த அனிதா உதீப், ``சமூக கருத்து சொல்லும்படியான ஆபாச பாடல்களைக் கொண்ட 'சந்திரமௌலி' படத்தை ஒன்றும் நான் இயக்கவில்லை' எனக் கூறியுள்ளார். அதற்கு, ``ஒரு பாடலை இயக்குவது இயக்குநரின் முடிவு. நான் இந்த மாதிரி பாடல்கள் வேண்டும் என்று ஒருபோதும் கேட்பதில்லை. இது கிளாமராக இருக்கிறதே தவிர வல்கராக இல்லை. இந்தப் பாடல் பல பாராட்டுகளை பெற்றது. அதனால்தான் இதற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்தது. உங்கள் படத்தைப்போல் `ஏ' சான்றிதழ் இல்லை. தவறாக ஒப்பிடாதீர்கள்" என்று கூறியுள்ளார். பிறகு, ``சார் உங்களுடன் விவாதிக்கிறதே போர் அடிக்குது. கொஞ்சம் சுவாரஸ்யமாகவோ ஸ்மார்ட்டாகவோ சொன்னால் இன்னும் உற்சாகமாக இருக்கும்" என்றார். அதற்கு அவரிடமிருந்து பதில் வராததால், ``ஓடாதீங்க ப்ளீஸ். உங்களை வெச்சு இன்னும் கொஞ்சம் காமெடி பண்ணலாம்னு இருக்கேன்" என்று ட்வீட் செய்துள்ளார், அனிதா உதீப்.