Published:Updated:

ஷ்ரத்தா கபூர் பிறந்தநாள் - 'சாஹோ' படக்குழு வெளியிட்ட அசத்தல் ப்ரோமோ!

ஷ்ரத்தா கபூர் பிறந்தநாள் - 'சாஹோ' படக்குழு வெளியிட்ட அசத்தல் ப்ரோமோ!
ஷ்ரத்தா கபூர் பிறந்தநாள் - 'சாஹோ' படக்குழு வெளியிட்ட அசத்தல் ப்ரோமோ!

'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு நடிகர் பிரபாஸ் நடித்திருக்கும் படம் 'சாஹோ'. பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு வரும் இந்தப் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக ஷ்ரத்தா கபூர் நடிக்கிறார். தவிர, நீல் நிதின் முகேஷ், அருண் விஜய், ஈவ்லின் ஷர்மா, ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர். 'ரன் ராஜா ரன்' எனும் தெலுங்குப் படத்தை இயக்கிய சுஜீத் ரெட்டி இப்படத்தை இயக்குகிறார். மதி ஒளிப்பதிவு செய்ய, `விஸ்வரூபம்' படத்துக்கு இசையமைத்த சங்கர்-இஷான்-லாய் இப்படத்துக்கு இசையமைக்கின்றனர்.

300 கோடி ரூபாய் பொருள் செலவில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பை மும்பை, ஹைதராபாத், துபாய் உள்ளிட்ட இடங்களில் நடத்தி உள்ளனர். இந்தப் படத்தின் டீசருக்கு இணையத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், பிரபாஸின் பிறந்தநாளுக்கு 'Shades of Saaho - Chapter 1' என்ற தலைப்பில் ஒரு வீடியோ வெளியிட்டனர். தற்போது, அப்படத்தின் நாயகி ஷ்ரத்தா கபூரின் பிறந்த நாளை முன்னிட்டு 'Shades of Saaho - Chapter 2' என்ற ஸ்னீக் பீக் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு. ஆக்‌ஷன் காட்சிகளும் அது உருவான விதத்தையும் அந்த வீடியோவில் காட்டியுள்ளனர். தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் உருவாகி வரும் இந்தப் படம் ஆகஸ்ட் 15, 2019 அன்று வெளியாக இருக்கிறது.