Published:Updated:

"எனக்குப் பொருத்தமான கதைகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்" - திண்டுக்கல் லியோனி!

"எனக்குப் பொருத்தமான கதைகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்" - திண்டுக்கல் லியோனி!
"எனக்குப் பொருத்தமான கதைகள் வந்தால் நிச்சயமாக நடிப்பேன்" - திண்டுக்கல் லியோனி!

பட்டிமன்றத்தில் தனது பேச்சால் அரங்கையே அதகளப்படுத்துபவர் திண்டுக்கல் லியோனி. இவரது நகைச்சுவையான பேச்சு கல் நெஞ்சுக்காரர்களைகூட கலகலவென சிரிக்க வைக்கும். பட்டிமன்ற பேச்சுகளைத் தொடர்ந்து 1997ல் வெளியான 'கங்கா கெளரி' எனும் படத்தில் அருண் விஜய், வடிவேலு ஆகியோருக்கு அப்பாவாக நடித்தார். ஆனால் அதன் பிறகு அவரைப் பெரிய திரைகளில் பார்க்க முடியவில்லை. பல வருடங்கள் கழித்து லைகா நிறுவனம்  தயாரிக்கும் 'பன்னிக்குட்டி' எனும் படத்தில் நடிக்கிறார். அது குறித்து அவரிடம் பேசினேன். 

" 'கங்கா கெளரி' படத்துக்குப் பிறகு, எனக்குச் சினிமாவில் நடிக்கும் எண்ணமே இல்லாமல் இருந்தது. 'பன்னிக்குட்டி' படத்தில் நடிக்க வேண்டுமென லைகா தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து என்னிடம் பேசினார்கள். எனக்கு ஆர்வமில்லை எனச் சொல்லிவிட்டேன். அந்தப் படத்தை இயக்கும் அனுசரண் எனக்கு நல்ல பழக்கம். அவரின் 'கிருமி' திரைப்படம் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரே வீட்டிற்கு வந்து படத்தின் முழுக் கதையையும் சொன்னார். அவர் எனக்கான கேரக்டர் பத்தி சொல்லும்போது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. உடனே ஓகே சொல்லிவிட்டேன். யோகிபாபு, கருணாகரன் ஆகியோருடன் நடித்தது உண்மையில் நல்ல அனுபவமாக இருந்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். எனக்குப் பொருத்தமான மக்களும் ரசிக்கும்படியான கேரக்டர்கள் அமைந்தால் நிச்சயம் தொடர்ந்து படங்களில் நடிப்பேன்" என்றார் மகிழ்ச்சியுடன்.