Published:Updated:

``நயன்தாரா மேடம் மாதிரி தைரியமா நடிக்கணும்!" - 'அறம்' சிறுமி மகாலட்சுமி

``நயன்தாரா மேடம் மாதிரி தைரியமா நடிக்கணும்!" - 'அறம்' சிறுமி மகாலட்சுமி
``நயன்தாரா மேடம் மாதிரி தைரியமா நடிக்கணும்!" - 'அறம்' சிறுமி மகாலட்சுமி

'அறம்' திரைப்படத்தில் அனைவரையும் ஈர்த்த சிறுமி மகாலட்சுமி. அந்தத் திரைப்படம் வெளிவந்ததற்குப் பின்னர் வெகுவாக அனைவரின் பாராட்டையும் பெற்றார். மகாலட்சுமியின் தந்தை கூலி வேலை பார்க்கிறார். தற்போது, 'அறம்' மகாலட்சுமி என்ன செய்கிறார் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவருடைய அப்பா மாணிக்கத்திடம் பேசினோம்.

அறம் படம் வெளிவந்ததுக்கு அப்புறம் நிறைய பேர் பாப்பாவுக்கு வாய்ப்பு கொடுக்கிறதா சொன்னாங்க. ஆனா, பெருசா எந்த வாய்ப்பும் அமையலை. பாப்பா நடிக்கிறதுக்கு ஆர்வமா இருக்கா.. நாங்களும் நடிக்க வைக்க பிரியமாகத்தான் இருக்கோம்.. வாய்ப்புக்காக மட்டும்தான் இப்போ காத்திருக்கோம். மகாகிட்ட திறமை இருக்கு.. அவ திறமையை வெளிக்கொண்டு வந்தது கோபி நயினார் சார் தான்.. அவர் 'தன்ஷிகா' கேரக்டருக்கு மட்டுமல்ல மகாவுக்கும் உயிர் கொடுத்திருக்கார். நயன்தாரா மேம் நடிச்சிருக்கிற 'ஐரா' படத்தில் மகா பாப்பாவும் நடிச்சிருக்கா. தொடர்ந்து வாய்ப்பு எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம் என்றதும் மகாலட்சுமி தொடர்ந்தார்.

``நான் இப்போ நான்காம் வகுப்பு படிக்கிறேன்.. நயன்தாரா மேடம் மாதிரி தைரியமா சூப்பரா நடிக்கணும். அதுதான் என் ஆசை' எனப் புன்னகைக்கிறார், மகாலட்சுமி.