எஸ்.ஜே. சூர்யாவும் மிஸ்டர் எலியும் ஆடும் ‘டாம் அண்டு ஜெர்ரி’ ஆட்டமே இந்த ‘மான்ஸ்டர்.’

மின்சார வாரிய ஊழியர் எஸ்.ஜே. சூர்யாவுக்கு, சரியாக வரன் அமையவில்லை. ‘ஒரு வீடு வாங்கிட்டா பொண்ணு கிடைச்சுடும்’ என பேச்சுலர்களைத் துரத்தும் அதே பேச்சு அவரையும் துரத்த, அடித்துப் பிடித்து வீடு வாங்குகிறார். வழக்கமாக இப்படி படம் ஆரம்பித்த இருபதாவது நிமிடம் வீட்டிற்குக் குடிபெயரும் ஆட்களை பேய்தானே பாடாய்ப் படுத்தும்? அந்த ட்ரெண்டிற்கு ஒரு ஃபுல் ஸ்டாப் போட்டு, ஒரு க்யூட் குட்டி எலியைக்கொண்டு புள்ளி வைத்துக் கோலம் போட்டு ரகளையாய்க் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன்.

பாடி லாங்குவேஜில் சிரிப்பைக் கடத்தும் எஸ்.ஜே. சூர்யா ஸ்பெஷல் இந்தப் படம் முழுக்கவே வொர்க்கவுட் ஆகிறது. கருணாகரனிடம் திருதிருவென முழிப்பது, ப்ரியா பவானிசங்கரிடம் அசடு வழிவது, எலிக்கு ஸ்கெட்ச் போடுவது, க்ளைமாக்ஸில் கரைவது என ‘பார்யா’ சொல்லவைத்திருக்கிறார் சூர்யா. பாந்தமான பக்கத்துவீட்டுப் பொண்ணாக ப்ரியா பவானிசங்கர். அழகான புன்னகையில் நாம் மயங்கும்போது, நடிப்பிலும் மயக்குகிறார். கருணாகரனுக்கு காமெடி செய்ய கொஞ்சமே கொஞ்சம் வாய்ப்பு. அதைச் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். டீ போடும் ஒரு சீக்வென்ஸில் மொத்தமாய்க் குலுங்கி அதிர்கிறது தியேட்டர்.
வில்லனார் எலியின் சேட்டைகளைப் பார்த்து குஷியாவதா, எஸ்.ஜே. சூர்யாவின் நிலைமையை நினைத்துப் பாவப்படுவதா என இரட்டை மன நிலையில் யோசிக்கும் அளவிற்கு இருவருக்குமான காம்பினேஷன் காட்சிகள் பார்ப்பவர்களை இழுக்கின்றன. உறுத்தல் இல்லாத சில சி.ஜி காட்சிகளும் ப்ளஸ். கடத்தல்காரராக வரும் அனில்குமார் நடிப்பும் கச்சிதம்.

கோகுல் பினோயின் கேமரா, எஸ்.ஜே. சூர்யாவோடு பந்தாவாய்ப் பயணிப்பது, எலியின் முதுகில் ஏறி பம்மிப் பதுங்கி முன்னேறுவது என வித்தை காட்டுகிறது. காதுகளில் சதா குடைந்துகொண்டே இருக்கும் எலியின் உருட்டல்களை, `க்றீச்’களை அப்படியே திரைக்குக் கடத்துகிறது சிறப்பான சவுண்டு மிக்ஸிங்.

காமெடி, விறுவிறுப்பு இரண்டையும் தக்கவைக்கும் பின்னணி இசையில் மின்னுகிறார் ஜஸ்டின் பிரபாகரன். சாபு ஜோசப்பின் எடிட்டிங் ஒரு வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வரும் கதையை போரடிக்காமல் இழுத்துப் போகிறது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு நீண்டகாலமாகத் திருமணம் ஆகாதது ஏன் என்பதற்கான சரியான காரணங்கள் இல்லை. வைரக்கடத்தல், எலி தானே எலிப்பொறியில் ஏறி அமரும் சினிமாத் தனங்கள் மைனஸ்.

ஆனால் ‘இந்த உலகம் வெறுமனே மனிதர்களுக் கானது மட்டுமல்ல’ என்று மென்மையான குரலில் சொன்னதற்கு அழுத்தமான பாராட்டுகள்.

- விகடன் விமர்சனக் குழு