Published:Updated:

`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’

`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’
`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’

பாலிவுட், டோலிவுட் மற்றும் மாலிவுட்டின் பாராளுமன்றத் தேர்தல் பரப்புரைகளுக்கு நடுவில், கோலிவுட்டின் அரசியல் விமர்சனப் படங்கள் குறித்த ஒரு ஃப்ளாஷ்பேக்.

பாராளுமன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிப்பதாக இருந்தாலும் சரி, இல்லை அவற்றைக் குறித்து அரசியல் சார்ந்த படங்களைப் படைத்தாலும் சரி, தமிழகத்தின் வழி என்றுமே தனி வழ! `உரி’, `நரேந்திர மோடி’, `கேசரி’, `ஆக்ஸிடென்டல் பிரைம் மினிஸ்டர்’ என பாராளுமன்றப் பரப்புரைக்காகவே படம் எடுத்துக்கொண்டிருக்கும் பாலிவுட்டுக்கும், பிற பிராந்திய மொழிகள் சார்ந்த திரைத் துறைகளுக்கும் இல்லாத ஒரு பண்பு கோலிவுட்டுக்கு என்றுமே இருக்கும். அதுதான், `அரசியல் நையாண்டி.’

அரசியலில் தெளிவான கருத்துகள் கொண்ட மாநிலம் எனக் கூறப்படும் கேரளாவில்கூட, அங்கே ஆளும் கட்சிகளாக இருப்பவர்களுக்குச் சாதகமான கருத்தியலைப் படமாக்குவது இன்றளவும் இயல்பாக உள்ளது. `சி.ஐ.ஏ’, `சகாவு’, `ராமலீலா’ என மலையாள சினிமா உலகில் கம்யூனிஸப் படங்கள் வந்துகொண்டிருக்கையில், `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ வரை நடப்பு அரசியலைக் கேலி செய்யும் படங்கள் அதிகம் வருவது தமிழ் சினிமாவில்தான்!

அமைதிப்படை :

`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’

இதற்கு முன்னும் பின்னும் நூற்றுக்கணக்கான அரசியல் நையாண்டிப் படங்கள் வந்துவிட்டன. ஆனாலும், இன்று வரை பலரால் சொல்லப்படுவது, `` `அமைதிப்படை’ மாதிரி ஒரு பொலிடிக்கல் சட்டையர் படம் எடுக்கணும்’’ என்பது. அதற்குப் பெரும் காரணமாகப் பார்க்கப்படுவது, காலங்கள் கடந்த இந்தப் படத்தின் திரைக்கதை. இதில் வரும் பெரும்பான்மைக் காட்சிகளை இன்றைய அரசியல் களத்தோடும் எளிதாகப் பொருத்திப் பார்த்துவிட முடியும். தேர்தலில் வெற்றி பெரும் அமாவாசை, நாகராஜ சோழனாக மாறுவதிலிருந்து, தலைவரின் அண்டர்வேரைத் துவைப்பது யார் எனப் போட்டிபோடும் தொண்டர்கள் வரை... `அமைதிப்படை’யின் ஒவ்வொரு காட்சியும் இயக்குநர் மணிவண்ணனாலும் நடிகர் சத்யராஜாலும் சேர்ந்து செதுக்கப்பட்டிருக்கும்.

ஜோக்கர் :

`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’

இப்படி ஒரு கேரக்டரை எப்படிப் படைத்திருப்பார் இயக்குநர் ராஜுமுருகன் என அனைவரையும் வியப்புக்குள்ளாக்கிய படம்`ஜோக்கர்.’ நீங்கள் அன்றாடம் சாலையில் கடந்துசெல்லும், கடிந்து செல்லும் போராட்டக்காரர்களெல்லாம் உங்களுக்கு ஜோக்கராகத்தான் தெரிவார்கள். ஆனால், எந்த அரசியல் புரிதலும் இல்லாமல், நடக்கும் அநியாயங்களைப் பொருட்டாகவே மதிக்காத, நீங்கள்தான் உண்மையில் ஜோக்கர் எனப் பொதுமக்கள் அனைவரின் மீதும் எந்தச் சமரசமும் இல்லாமல் விமர்சனம் வைத்த படம். ஹெலிகாப்டரைப் பார்த்துக் குனிந்து கும்பிடும் ஆளும் கட்சியினர், முப்பாட்டன் முருகனை (இந்தப் படத்தில் முப்பாட்டன் அல்லாஹ்!) வணங்கும் தமிழ் அரசியல்வாதி, சுத்தமான இந்தியாவை உருவாக்கக் கனவு காணும் அரசு என `ஜோக்கர்’ கேலி செய்யாத அரசியல் கட்சியே இல்லை.

நோட்டா :

`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’

`ஒருவேளை கடந்த ஐந்தாண்டுக் கால ஆட்சி நன்றாக இருந்திருந்தால்?’ - இந்தக் கேள்வி வாக்களித்த பலருக்குள் எழும் அடிப்படையான ஒன்று. அந்தக் கேள்விதான், `நோட்டா’ படத்தின் கதையும்கூட! வெள்ளப்பெருக்கு, கலவரம், நம்பிக்கையில்லா தீர்மானம் என எல்லா சூழ்நிலைகளிலும் ஆளும் கட்சி சரியான நிர்வாகத் திறனுடன் செயல்பட்டிருந்தால் எப்படி இருந்திருக்கும் எனக் கற்பனைக் குதிரையை ஓட்டிய படம். அரசியலமைப்புச் சட்டத்துக்கு அப்பாற்பட்டு சில நடைமுறைக்குப் புறம்பான காட்சிகள் நிரம்பியிருந்தாலும், இந்தப் படத்தைப் பார்த்த அனைவருக்கும் இப்படி ஓர் ஆட்சி அமைந்துவிடாதா என்ற ஆசையைத் தூண்டியதுதான் `நோட்டா’வின் வெற்றி.

எல்.கே.ஜி :

`` `அமைதிப்படை’ முதல் `எல்.கே.ஜி’ பேசிய அரசியல் வரை... இது கோலிவுட் கெத்து!’’

இந்தப் பட்டியலின் லேட்டஸ்ட் உறுப்பினர் `எல்.கே.ஜி.' `அமைதிப்படை’ பேட்டனில் எடுக்க முயன்றிருந்தாலும், அந்த அளவுக்கு இல்லை என்பதே பலரின் கருத்து. ராஜதந்திரம், காலை வாரிவிடும் திறமை, ஒரு டேட்டா அனாலிட்டிக்ஸ் நிறுவனம்... இந்தத் துணையிருந்தால், அரசியலில் எப்படி வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதைச் சொல்லும் படம். 

தவிர, `தரமணி’, `கண்ணே கலைமானே’ போன்ற உறவு முறை சார்ந்த படங்களில்கூட பண மதிப்பிழப்பு, நீட் போன்ற பிரச்னைகளைப் பற்றி தமிழ் சினிமாவில் எளிதாகப் பேச முடிகிறது. அரசியல் விமர்சனமும் நையாண்டியும் இந்த மண்ணின் பொதுப் பண்புகளில் ஒன்று எனும் அளவுக்கு தமிழ்சினிமா அவற்றைக் கையாண்டுவிட்டது. 

அடுத்த கட்டுரைக்கு