`ராக்கெட்டரி : தி நம்பி எஃபெக்ட்’ படத்தில் நடிப்பதற்காக இரண்டு ஆண்டுகளாக வளர்த்துவந்த தாடியை எடுத்து க்ளீன் ஷேவ் கெட்டப்புக்கு மாறியிருக்கிறார் மாதவன். இளம் நம்பிநாராயணனாக நடிக்க இந்தப் புது கெட்டப்!

ராணா டகுபதி 50 வயது முதியவராக நடிக்கும் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார் பிரபுசாலமன். ‘காடன்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படம் இந்தி. தமிழ், தெலுங்கு என மும்மொழிகளில் தயாராகிறது. விஷ்ணு விஷாலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

தமிழில் வெற்றிபெற்ற `காஞ்சனா’வை இந்தியில் இயக்கிக்கொண்டிருந்தார் ராகவா லாரன்ஸ்.
‘LAXMMI BOMB’ எனப் பெயரிடப்பட்டிருந்த இப்படத்திலிருந்து தயாரிப்பாளருடனான மோதலால் விலகியுள்ளார் லாரன்ஸ்.

விஜய் இப்போது அட்லி இயக்கும் ஃபுட்பால் படத்தை முடித்துவிட்டு அடுத்து `மாநகரம்’ லோகேஷ் இயக்கத்தில் கேங்ஸ்டர் படத்தில் நடிக்கவிருக்கிறார்.

தமிழில் முக்கிய நாயகர்களுக்கு வில்லியாக நடித்த வரலட்சுமி, முதல்முறையாகத் தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் ‘ரூலர்’ படத்தில் வில்லியாகிறார்.

பேய்வேகத்தில் நடக்கிறது ரஜினி நடிக்கும் `தர்பார்’ ஷூட்டிங். மும்பையில் முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு, சென்னையில் அடுத்த ஷெட்யூலுக்குத் தயாராகிவிட்டார்கள்.

விக்னேஷ் சிவன், பாண்டிராஜ், மித்ரன் என மூன்று இயக்குநர்களோடு அடுத்தடுத்து நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஜானராம்!

‘பாக்ஸர்’ படத்திற்காக அருண்விஜய் மிக்ஸ்ட் மார்ஷியல் ஆர்ட்ஸ் கற்றுக்கொள்கிறார். இதற்காக வியட்நாமில் இருக்கும் லியன்பாங்கில் தீவிர பயிற்சி மேற்கொண்டுள்ளார்.

தயாரிப்பாளரோடு லடாய் என `உயர்ந்த மனிதன்’ படத்திலிருந்து அமிதாப் விலகிக்கொண்டதாக தகவல்கள் வெளியாக, ``பேச்சுவார்த்தை நடக்கிறது, அமிதாப் நடிக்கிறார்’’ என்கிறது தயாரிப்பாளர் தரப்பு.

விக்ரம் பிரபு அடுத்து நடிக்கும் ‘அசுரகுரு’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் மஹிமா நம்பியார். இந்தப் படத்திற்காக மூன்று மாதங்கள் விற்பயிற்சியெல்லாம் எடுத்திருக்கிறார்!