Published:Updated:

`புது லுக்கில் சிம்பு; இஸ்தான்புல் பறக்கும் படக்குழு!’ - ஹன்சிகாவின் `மஹா’ பட அப்டேட்ஸ்

`புது லுக்கில் சிம்பு; இஸ்தான்புல் பறக்கும் படக்குழு!’ - ஹன்சிகாவின் `மஹா’ பட அப்டேட்ஸ்
`புது லுக்கில் சிம்பு; இஸ்தான்புல் பறக்கும் படக்குழு!’ - ஹன்சிகாவின் `மஹா’ பட அப்டேட்ஸ்

'மஹா' படத்தில் நடித்துவரும் ஹன்சிகாவின் 'தம்' போட்டோ வெளியாகி பரபரப்பு தீயை பற்றவைத்து, கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. இப்போது, சிம்புவும் 'மஹா' படத்தில் நடிக்கிறார் என்கிற செய்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது.

'மெளனராகம்' படத்தில் ரேவதியுடன் படம்முழுக்க மோகன் நடித்திருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் கொஞ்ச நேரம் மட்டுமே தோன்றும் கார்த்திக் வேடம், அன்றும் இன்றும் பெரிதாகப் பேசப்பட்டுவருகிறது. 'மஹா' படத்திலும் கார்த்திக் பண்ணியதைப்போல மிரட்டலான கேரக்டரில் சிம்பு நடிக்க இருப்பதை ரகசியமாக வைத்துள்ளனர். ஶ்ரீகாந்த், ஹன்சிகா ஜோடியாக நடித்துவரும் இந்தப் படத்தில், முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்து மிரட்ட இருக்கிறார்.

சமீபத்தில் வெளிவந்த ' வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படத்தில், சிம்பு உடல் எடை கூடி குண்டான தோற்றத்துடன் காணப்பட்டார். இதனால், தற்போது உடல் எடையைக் குறைப்பதற்காக லண்டனில் உள்ள அதி நவீன ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சிசெய்து வருகிறார். 'மஹா' படத்தின் படப்பிடிப்பை துருக்கியின் இஸ்தான்புல் பகுதியில் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர்.

சிம்பு, 'மஹா' படத்துக்காக மொத்தம் 10 நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார். `ஷோயப்’ எனும் முஸ்லிம் இளைஞர் வேடத்தில் அவர் நடிக்கிறார். சென்னையிலிருந்து இயக்குநர் ஜமீல், படக்குழுவுடன் துருக்கிக்கு கிளம்ப, சிம்பு லண்டனில் இருந்து புறப்பட்டு இஸ்தான்புல் சென்று படப்பிடிப்பில் கலந்துகொள்கிறார். அங்கே சிம்பு, ஹன்சிகா சேர்ந்து நடிக்கும் காட்சிகளைப் படம் பிடிக்கின்றனர். ஒரு காலத்தில் காதல் வானில் சிறகடித்துப் பறந்த சிம்புவும், ஹன்சிகாவும் சில வருடங்களுக்கு முன் பிரிந்துவிட்டனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 'மஹா' படத்தில் இணைந்து நடிக்கும் சிம்பு, ஹன்சிகா இடையில் மீண்டும் காதல் கெமிஸ்ட்ரி கமகமக்கப் போகிறது என்று கண்சிமிட்டுகிறார்கள் படக்குழுவினர்.