Published:Updated:

``இந்தப் பாராட்டு எனக்கு ரொம்பவே புதுசு!’’ - `தடம்’ வித்யா பிரதீப்

``இந்தப் பாராட்டு எனக்கு ரொம்பவே புதுசு!’’ - `தடம்’ வித்யா பிரதீப்
``இந்தப் பாராட்டு எனக்கு ரொம்பவே புதுசு!’’ - `தடம்’ வித்யா பிரதீப்

அருண் விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள `தடம்' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்தப் படத்தில் மலர்விழி கேரக்டரில் நடித்திருப்பவர், `நாயகி' சீரியலில் நடித்துவரும் வித்யா பிரதீப் கோப்பக்குமார்.

``நிஜமாகவே ரொம்ப சந்தோஷமாக இருந்தது. என் நடிப்பிற்கான முழு அங்கீகாரம் மக்களிடமிருந்து கிடைக்காதா எனப் பல நாள்கள் எதிர்பார்த்திருக்கிறேன். `நாயகி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இடம்பிடித்திருந்த நான், இப்போது `தடம்' படத்தின் வாயிலாகப் பலரின் பாராட்டையும் பெற்றுள்ளேன். மகிழ் திருமேனி சாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!" - `தடம்' படத்தில் நடித்த அனுபவத்தை உற்சாகமாகப் பகிந்துகொள்கிறார், வித்யா பிரதீப். 

`` `தடம்' போலீஸ் கதாபாத்திரம் மாதிரி, எப்போவும் மிடுக்காதான் இருப்பீங்களா?" 

``அப்படியெல்லாம் இல்லைங்க. செம ஜாலியான ஆள் நான். என் முகத்திற்கு ஜாலியான கேரக்டர்ஸ்தான் செட் ஆகும்னு நினைச்சிருந்தேன். நிஜத்தில் நான் அப்படித்தானே! ஆனா, மகிழ் திருமேனி சார் அதை மாத்திட்டார். முதல் முறையா போலீஸ் கேரக்டரில் நடிச்சிருக்கேன். அதுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது, சந்தோஷமா இருக்கு. படத்தைப் பற்றி பலரும் பாசிட்டிவா பேசுறாங்க. ஒரே நாள்ல அத்தனை போன் கால்ஸ் வந்தது. இந்தப் பாராட்டு எல்லாம் எனக்கு ரொம்பவே புதுசு."  

``அதிகம் விரும்பிப் பார்க்கும் படங்கள்?''

``எனக்கு சயின்ஸ் ஃபிக்‌ஷன், ரொமான்டிக் படங்கள் ரொம்பப் பிடிக்கும். சமீபத்தில் பார்த்தது `96'. இந்தப் படத்தின் திரைக்கதை எனக்குப் பிடித்திருந்தது.''

``நீங்கள் அனுஷ்காவின் தீவிர ரசிகையாமே?''

``அனுஷ்காவின் பல பேட்டிகளைப் பார்த்திருக்கேன். நடிச்ச படங்களைப் பார்த்து ரசிச்சிருக்கேன். ரொம்ப போல்டா, ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டா பேசுவாங்க. `பாகுபலி'யில் அவங்க நடிப்பு வேற லெவல். அனுஷ்கா மாதிரி, எனக்கும் ஹிஸ்டாரிகல் படத்துல நடிக்கணும்னு ஆசை இருக்கு. பார்ப்போம்..." 

``டயட் கான்சியஸ் அதிகம் உள்ளவரா நீங்கள்?''

``அப்படிச் சொல்ல முடியாது. ஷூட்டிங் சமயத்தில் கான்சியஸாக இருப்பேன். மற்றபடி டைம் கிடைக்கிறப்போ, `என்ன சாப்பிடலாம்'னு இஷ்டத்துக்கும் யோசிப்பேன். பிரியாணி என் ஆல்டைம் ஃபேவரைட்!." 

``உங்கள் வாழ்க்கையில நடந்த மேஜிக் மொமென்ட்?!''

`` `நாயகி' சீரியல்ல கமிட் ஆனதுதான்!. திடீர்னு ஒருநாள் விகடனிலிருந்து போன் வந்தது. `நாயகி' சீரியல்ல ஹீரோயினா கேட்டாங்க. ஓகே சொல்லி அடுத்தநாளே ஷூட்டிங் போனோம்."

``பிடித்த ஹீரோ?''

``இதுவரை ரெண்டு ஹீரோக்கள்கூட வொர்க் பண்ணியிருக்கேன். `பசங்க 2' படத்தில் சூர்யா சார்கூட நடிச்சேன். அதனால சூர்யா சாரைப் பிடிக்கும். `தடம்'ல நடிச்ச பிறகு, அருண் விஜய்யைப் பிடிச்சிருக்கு." 

``ஒரு ஆர்மி ஆபீஸரின் மகளா, அபிநந்தன் விஷயத்தை எப்படிப் பார்க்குறீங்க?" 

``அப்பா பிரதீப் கோப்பக்குமார். கார்கில் போரில் கலந்துக்கிட்டவர். கேப்டனா இருந்திருக்கார். நான் பிறந்ததே பெங்களூர் கமாண்டோ ஹாஸ்பிட்டல்லதான். கேந்திர வித்யாலயாவுல படிச்சேன். எப்போவும் இந்த மாதிரி செய்திகளைப் பார்க்கிறப்போவோ, படிக்கிறப்போவோ அவங்களுக்காக ப்ரே பண்ணுவேன். அபிநந்தன் வீடியோவைப் பார்க்கிறப்போ, புல்லரிச்சிடுச்சு!  

அவர் நல்லபடியா திரும்பி வந்ததில், எனக்கு ரொம்ப சந்தோஷம். அப்பா ஆர்மியில நடக்கிறதையெல்லாம் ஷேர் பண்ணிக்கமாட்டார். ஆர்மி ரூல்ஸ்படி, வீட்டுல ஷேர் பண்ணவும் கூடாது. `உரி' இந்திப் படத்தில் சர்ஜிகல் ஸ்டிரைக் பத்தி காட்டியிருப்பாங்க. அப்பாவும் அது மாதிரி சர்ஜிகல் ஸ்டிரைக்ல இருந்திருக்கார். ஆலப்புழாதான் என் சொந்த ஊர். அப்பா ஆர்மியில இருந்ததால, ஹைதராபாத், புனே, பெங்களூர்னு பல ஊர்கள்ல படிச்சேன். ஆர்மியில் இருக்கிறவங்களோட வலி என்னனு எங்களுக்கு நல்லாவே தெரியும்."  

``உங்க பொழுதுபோக்கு என்ன?''

``எனக்குப் புத்தகம் படிக்கிற பழக்கம் அதிகம். எப்போவும் என் ஹாண்ட் பேக்ல ரெண்டு புத்தகம் இருக்கும். ஃபிலாசபி புத்தகங்கள் அதிகமா படிப்பேன். paulo coelho, robin sharma போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்கள்னா, எனக்கு அவ்ளோ பிடிக்கும்." 

அடுத்த கட்டுரைக்கு