Published:Updated:

சூர்யா- இயக்குநர் சுதா இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் ஆரம்பம்!

சனா
சூர்யா- இயக்குநர் சுதா இணையும் படத்தின் ஷூட்டிங்  ஏப்ரலில் ஆரம்பம்!
சூர்யா- இயக்குநர் சுதா இணையும் படத்தின் ஷூட்டிங் ஏப்ரலில் ஆரம்பம்!

செல்வராகவனுடன் 'NGK', கே.வி.ஆனந்துடன் 'காப்பான்' படங்களில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இந்த இரண்டு படங்கள் மீதும் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர் தமிழ் சினிமா ரசிகர்கள். அதற்குக் காரணம், படத்தின் கதை; அதை இயக்கும் இயக்குநர்கள். 'அயன்' 'மாற்றான்' படத்தின் மூலம் ஏற்கெனவே ஒன்றாக இணைந்து கே.வி.ஆனந்தும், சூர்யாவும் வேலை பார்த்திருக்கின்றனர். 

அடுத்ததாக, இயக்குநர் சுதா எடுக்க இருக்கும் ஒரு பயோஃபிக் படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். 'இறுதிச்சுற்று' படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் தனது தடத்தை அழுத்தமாகப் பதித்தவர் சுதா. இப்போது இவர் எடுக்கப்போகும் இந்தப் படம், அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, இது ஒரு பயோஃபிக் கதை என்ற தகவலும் வந்துள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் படக்குழுவிடமிருந்து வரவில்லை. இவர்கள் இரண்டு பேரும் இணையும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, வரும் ஏப்ரலில் இருந்து தொடங்க இருக்கிறது. படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Period. End of Sentence'  என்ற குறும்படத்தைத் தயாரித்த இணை தயாரிப்பாளர் Guneet Monga, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் உடன் சேர்ந்து இந்தப் படத்தை தயாரிக்க இருக்கிறார்.