Published:Updated:

`கட்சி ஆரம்பிச்சா, காசு தானா வந்து தருவாங்க !'- நடிகை கஸ்தூரிக்கு கே.எஸ்.ரவிக்குமார் ஆலோசனை 

`கட்சி ஆரம்பிச்சா, காசு தானா வந்து தருவாங்க !'- நடிகை கஸ்தூரிக்கு கே.எஸ்.ரவிக்குமார் ஆலோசனை 
`கட்சி ஆரம்பிச்சா, காசு தானா வந்து தருவாங்க !'- நடிகை கஸ்தூரிக்கு கே.எஸ்.ரவிக்குமார் ஆலோசனை 

கே.சி. சுந்தரம் இயக்கத்தில் ஜோஷ்வா ஶ்ரீதர் இசையில் தயாராகியுள்ள 'ஜூலை காற்றில்' படத்தின் ஆடியோ ரிலீஸ் விழா இன்று நடந்தது. இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், நடிகர் கார்த்தி  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றிருந்த இந்நிகழ்ச்சியை நடிகை கஸ்தூரி  தொகுத்து வழங்கினார். 

கோடம்பாக்கத்து ஆட்கள் அரசியல் பேசுவது சர்வ சாதாரணமான ஒரு விஷயம். அமெரிக்காவில் வசித்துவந்த நடிகை கஸ்தூரி, கடந்த மூன்று வருடங்களாக சென்னையில் வசித்துவருகிறார்.  அவ்வப்போது இவர் அரசியல் பேசுவது பரபரப்பாகப் பேசப்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று நடந்த 'ஜூலை காற்றில்' ஆடியோ ரிலீஸ் விழாவில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமாரிடம் 'முத்து' படத்தில் நிஜ வாழ்க்கையில் 'இருக்கி அணைச்சது யாரை?' என 'குண்டக்கமண்டக்க' கேள்வி கேட்க, அதற்குப் பதிலளித்த கே.எஸ். ரவிக்குமார்," நான் நிஜ வாழ்க்கைல அப்படிலாம் இல்ல. நானும் கார்த்தி மாதிரிதான்' எனக் கூறி ஆரம்பித்தார்.

மேலும், கஸ்தூரியைப் பாராட்டிப் பேசிய ரவிக்குமார், "அரசியல் தளத்தில் மிகவும் தைரியமான கருத்துகளைக் கூறி இருக்கீங்க. உங்கள மாதிரி தைரியமாகக் கருத்துகளைச் சொல்ல முடியாத பெண்கள், உங்களமாதிரி ஆட்கள ரசிக்கிறாங்க.  நீங்க கட்சி ஆரம்பிக்கணும். ஏற்கெனவே, அதிமாயிருக்கிற கட்சிகள்ல இதுவும் சேரட்டுமே' என்றார்.

இதற்குப் பதிலளித்த கஸ்தூரி, "கொட்டாங்கச்சிகூட வாங்க காசு இல்லாத நான், எங்க கட்சி ஆரம்பிக்கப்போகிறேன்? என்ற சலிப்புடன் பேச, "ஆரம்பி, அவங்களா காசு தானா வந்து தருவாங்க" என ரவிக்குமார் ஆலோசனையும் கூறி அமர்ந்தார். "இங்க கலெக்‌ஷனுக்காகத்தான்  கட்சியே ஆரம்பிக்கப்படுகிறது" என அரசியல் பேசி நிகழ்ச்சியைத் தொடர்ந்தார், நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய நடிகை கஸ்தூரி