Published:Updated:

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

மிஸ்டர் மியாவ்

Published:Updated:
மிஸ்டர் மியாவ்
பிரீமியம் ஸ்டோரி
மிஸ்டர் மியாவ்

* அஜய் ஞானமுத்து, விக்ரமை வைத்து தயாரிக்கும் படத்தை ‘வயாகாம் 18 ஸ்டூடியோஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறது. அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ‘லூசிஃபர்’. இதன் ஐம்பதாவது நாளை பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் குடும்பத்தினர் இணைந்து கொண்டாடியுள்ளனர்.

மிஸ்டர் மியாவ்

* ஹாலிவுட்டில் தனுஷ் நடித்த, ‘THE EXTRAORDINARY JOURNEY OF THE FAKIR’ படம் வரும் ஜூன் 21-ம் தேதி தமிழ் வெர்ஷனில் ரிலீஸாக இருக்கிறது. முன்பு தமிழ் வெர்ஷனுக்கு ‘வாழ்க்கையைத் தேடி நானும் போறேன்’ என்று பெயர் வைத்திருந்தனர். தற்போது அதை ‘பக்கிரி’ என்று பெயர் மாற்றம் செய்துள்ளனர்.

* இயக்குநர் சிம்புதேவன் தற்போது வெங்கட்பிரபு தயாரிப்பில், ‘கசடதபற’ என்ற படத்தை இயக்குகிறார். ஆறு கதைகள் நகரும் ஆந்தாலஜி படமாக இதை உருவாக்கி இருக்கிறார் சிம்புதேவன். மிர்ச்சி சிவா, வைபவ், ஜெய், பிரேம்ஜி, பிரியா பவானி சங்கர், விஜயலட்சுமி உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

* சிம்பு 14 வருடங்களுக்கு முன் இயக்கிய திரைப்படம் ‘வல்லவன்’. இந்தப் படத்துக்குப் பிறகு, அவர் எந்தப் படத்தையும் இயக்காமல் இருந்தார். தற்போது சிம்பு இயக்கும் படத்துக்கான வேலைகள் ஆரம்பித்துவிட்டன. இதில் சிம்புவுடன் சந்தானமும் இணைந்து நடிக்கிறார்.

* அஜித், ஷர்த்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, அஜித்தை மறுபடியும் இயக்குவதற்குக் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் வினோத். அஜித்துக்குக் கதை பிடித்துவிட்டதாம். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மிஸ்டர் மியாவ்

* விஜய் மில்டன் தற்போது கன்னடப் படம் ஒன்றை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அர்ஜுனின் மருமகன் துருவா சர்ஜா ஹீரோவாக நடிக்கவிருக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருக்கிறது.

மிஸ்டர் மியாவ்

* தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் ‘ஹீரோ’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், இவருக்கு ஜோடியாக நடிப்பவர் (‘பேட்ட’ படத்தில் நடிகர் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தவர்) மாளவிகா மோகன். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மூன்று மொழிகளில் தயாராகிறது.

ம்யூட்

* முருகன் பெயர் கொண்ட நடிகர் நடித்து வரும் புதிய படத்தின் கதை, அந்த இயக்குநரின் முந்தையப் படத்தின் அதே  சாயல்தானாம். நாயகனின் கடைசி படம் தோல்வி அடைந்திருப்பதால், நாயகனின் அடுத்த படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்படும் என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.

* எங்கு தேர்தல் நடந்தாலும் போட்டியிடத் துடிக்கும் நடிகரை எப்படியாவது முடக்கிவிட வேண்டும் என்று ஆளும் கட்சி முடிவு செய்திருக்கிறதாம். தற்போது நடிகருக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் இருப்பதால், சிறிது நாள்களுக்கு அமைதியாக இருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்திருக்கிறது நடிகரின் நட்பு வட்டாரம். 

* தற்போது திருமணம் முடித்த மாப்பிள்ளை நடிகர், எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் தன் மனைவியைத்தான் கேட்கிறாராம். முக்கியமாகக் கதை கேட்கும்போது மனைவியையும் அருகில் இருக்கச் சொல்கிறாராம் நடிகர். 

* சிங்கம் நடிகருக்கு மாஸ் ஹிட் கொடுத்த அரிவாள் இயக்குநரின் கடைசி திரைப்படம் தோல்வியில் முடிந்தது. இதனால், இயக்குநர் படத்தில் தற்போது நடிக்க வேண்டாம் என்று சிங்கம் நடிகர் முடிவு செய்துவிட்டாராம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism