Published:Updated:

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

"`விஸ்வாசம்'ல வொர்க் பண்றப்போ பழைய விஷயங்களையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். நான் ஏதோ ஒரு ஜோக் சொல்ல, அதைக் கேட்ட அஜித் ரொம்ப நேரம் நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தார். அஜித்கிட்ட ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்." 

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

"`விஸ்வாசம்'ல வொர்க் பண்றப்போ பழைய விஷயங்களையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். நான் ஏதோ ஒரு ஜோக் சொல்ல, அதைக் கேட்ட அஜித் ரொம்ப நேரம் நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தார். அஜித்கிட்ட ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்." 

Published:Updated:
``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

`டான்ஸ் vs டான்ஸ்' நிகழ்ச்சியின் நடுவர்களாக இருந்தவர்கள், பிருந்தா மாஸ்டர் மற்றும் நகுல். ஒவ்வொரு வாரமும் சிறப்பு விருந்தினர்களாக பல நடிகர், நடிகைகள் வந்து சென்றார்கள். பிருந்தா மாஸ்டர் பல வருடங்களுக்குப் பிறகு இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு டான்ஸராக வந்து அமர்ந்திருந்தார். அவரிடம் பேசினேன். 

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

```டான்ஸ் vs டான்ஸ்' நிகழ்ச்சி எனக்கு நல்ல அனுபவத்தைக் கொடுத்தது. ஒவ்வொருத்தருமே தங்களுடைய திறமையைக் காட்டியிருந்தார்கள். இப்போதைய ஜெனரேஷன் செம்ம டேலன்டா இருக்காங்க. ஒரு நடுவர் என்பதைத் தாண்டி, அவர்களுடைய நடனத்தை ரசித்தேன். முதல் பரிசை வென்ற பூஜா, அங்கிதாவிற்கு என் வாழ்த்துகள். அந்த மேடையில் ஆடிய அனைவருமே திறமைசாலிகள்தான். அவர்களுக்கான மேடை எப்போதுமே காத்துக்கிட்டுத்தான் இருக்கு.'' என்றவரிடம், அவருடைய திரைப் பயணத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கும்போது இருவரின் கையிலும் காபி இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``என் கரியர் ஆரம்பித்ததே ஒரு தற்செயல்தான். அப்போ, நான் பத்தாம் வகுப்புப் படிச்சிட்டு இருந்தேன். ரகுராம் மாஸ்டருக்கு கலாதான் உதவியாளர். ஒருமுறை கலாவுக்குக் கால்ல அடி. அந்த நேரத்தில் ஸ்கூல் முடிந்து வீட்டுக்கு வந்தேன். வீட்டுக்குள் நுழைந்ததும், பெரிய அக்காதான், `ரகுராம் மாஸ்டர்கூட கிளம்பிப் போ'னு சொன்னாங்க. அதுதான், சினிமாவில் என் முதல் படம். நாகார்ஜூனா படம் என்னுடைய முதல் படம். இதுவரை கிட்டத்தட்ட 100 மேடை நாடகங்கள் பண்ணியிருப்பேன். பிறகு, வேலை பார்த்துக்கிட்டே படிச்சு முடிச்சேன். எங்க குடும்பத்துல நான் ஏழாவது பெண். இப்போகூட சமைக்கத் தெரியாது. ஏன்னா, ரொம்ப செல்லமா வளர்ந்த பொண்ணு. எங்க போனாலும் என் அக்காக்களில் யாராவது என் கூடவே இருப்பாங்க. என்னைக் குழந்தை மாதிரி பார்த்துப்பாங்க, எல்லோரும்!" என்றவர், தொடர்ந்தார்.  

``இதுவரை ஆயிரம் பாடல்களுக்குமேல் டான்ஸ் மாஸ்டராக இருந்திருக்கேன். `ராவணா' படத்தின் `கோடு போட்டா' பாடல்தான் இதுவரை நான் வொர்க் பண்ணதுல ரொம்பக் கஷ்டமான பாட்டு. பின்னணியில் மழை, செட்... அதுக்கிடையில டான்ஸர்ஸ் ஆடினாங்க. பொதுவா எல்லாப் பாடலையும் என்ஜாய் பண்ணி சொல்லிக்கொடுப்பேன். ஆனா, இந்தப் பாட்டுக்கு டான்ஸ் பண்றப்போ, யாருக்கும் அடிபட்டுடக் கூடாதுனு ரொம்பக் கவனமா இருந்தேன். விக்ரம் எனக்கு அவ்ளோ ஒத்துழைப்பு தந்தார். என்னுடைய ஒன்லி `ராக்கி பிரதர்' அவர். லைஃப்ல அவ்வளவு சீக்கிரம் யாரையும் பிரதரா ஏத்துக்க முடியாதில்லையா... அப்படி ஒரு இடம் விக்ரமுக்குக் கொடுத்திருக்கேன்." என்று முடித்தவரிடம் சில கேள்விகள் கேட்டேன். 

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

``குஷ்புவுக்கும், உங்களுக்குமான் ஃப்ரெண்ட்ஷிப்?"

``இப்போவரைக்கும் குஷ்பு என் பெஸ்ட் ஃப்ரெண்ட்! என்னைப் பொறுத்தவரை, அவங்க எவர்கிரீன் ஹீரோயின். குஷ்பு, த்ரிஷா, நயன்தாரா... இவங்கெல்லாம் என்னை `மோல்'னு கூப்பிடுவாங்க. குஷ்புவின் சிம்பிளிசிட்டி எனக்குப் பிடிக்கும்." 

``திருமணம், குடும்பம் பற்றி?" 

``எனக்கு 2005-ல் கல்யாணம் ஆச்சு. கணவர் பரமேஷ்வர். எனக்கும் அவருக்கும் நல்ல அன்டர்ஸ்டேண்டிங் இருக்கு. இவர் கிடைத்ததற்கு காயத்ரிக்கும், கீர்த்திக்கும்தான் நன்றி சொல்லணும். ஏன்னா, இவங்ககிட்டதான் `மாப்பிள்ளை ஓகேயா?'னு கேட்டேன். `வெரி க்யூட்'னு சர்டிஃபிகேட் கொடுத்தாங்க. பிறகு, அவர் மட்டும் என்னைப் பார்க்க வந்தார். அவருடைய அப்பா அமெரிக்காவில் இருந்தார். அவர் என்னைப் பெண் பார்க்க வருகிறார் என்றதும், அம்மா என்னை சேலை கட்டச் சொல்லி வற்புறுத்தினாங்க. கட்டிக்கிட்டுப் போனேன். ஒருமுறை எனக்கும், அவருக்கும் சண்டை ஆகிடுச்சு. அம்மா, குஷ்புவுக்கு போன் பண்ணிச் சொல்லிட்டாங்க. `கார்ல போய் நீயே விட்டுட்டு வா'னு குஷ்பு சொன்னாங்க. அப்போ, ஓரிரு வார்த்தைகள் பேசினோம். கல்யாணத்துக்கு ஆறுமாதம் டைம் கேட்டேன். எனக்கு ஆடம்பரமா கல்யாணம் பண்ணிக்கப் பிடிக்காது. குருவாயூர்லதான் கல்யாணம் பண்ணிக்கணும். ரிசப்ஷன் வைக்கக் கூடாது... இப்படிச் சில கண்டிஷன்ஸ் போட்டு கல்யாணம் பண்ணிக்கிட்டேன். இப்போ, எங்களுக்கு ரெண்டு பசங்க, ட்வின்ஸ்! ஆதவ் கிருஷ்ணா, மாதவ் கிருஷ்ணா. ரெண்டுபேரும் 4-ம் வகுப்பு படிக்கிறாங்க. கணவர் டிராவல்ஸ் கம்பெனி வெச்சிருக்கார்.'' 

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

``நீங்கள் பார்த்து வியந்த டான்ஸர் யார்?"

``ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், பானுப்ரியா. டான்ஸ் என்றால் இவங்கதான் எனக்கு ஞாபகத்துக்கு வருவாங்க." 

``தமிழ் சினிமாவில் உங்களுக்கு நெருக்கமான நடிகைகள், அவர்களுடனான நட்பு?" 

``த்ரிஷா, என்னைக்கும் மாறாம ஒரே இயல்போட இருப்பாங்க. வேலைனு வந்துட்டா, சொல்றதைச் செஞ்சுகொடுக்கிற நடிகை. `எனக்கு டான்ஸ் வரலை'னு போயிருக்க வேண்டியவ... அது புரிஞ்ச பிறகுதான், ஜொலிக்க ஆரம்பிச்சா! ஸ்பாட்ல இருக்கிற எல்லோரையும் ஒரே மாதிரி நடத்துவா. கீர்த்தி சுரேஷ், குழந்தை மாதிரி!. அவளையும் எனக்குக் குழந்தையா இருந்தப்போ இருந்தே தெரியும். நயன்தாரா, கடின உழைப்பாளி, `தனி ஒருவன்' பட ஷூட்டிங் கோவாவில் நடந்தது. கொளுத்தும் வெயிலில் காத்திருப்பாள். கேரவனுக்குப் போகவேமாட்டாள். சமீபத்தில் வெளியான `விஸ்வாசம்' படத்தில் அவளுடன் வொர்க் பண்ணேன்."

``விக்ரம், த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா... இவங்க எல்லார் பத்தியும் ஒரு விஷயம்!'' - பிருந்தா

``விஜய், அஜீத் பற்றி தெரியாத விஷயம் ஏதாவது பகிர முடியுமா?" 

``விஜய் அமைதியான ஆள்னுதான் தெரியும். ஆனால், அவரை மாதிரி ஹியூமர் சென்ஸான ஆளைப் பார்க்கவே முடியாது. அஜித்தும் அப்படித்தான். `முகவரி'யிலிருந்து பல படங்கள்ல வொர்க் பண்ணியிருக்கேன். இப்போ, `விஸ்வாசம்'ல வொர்க் பண்றப்போ பழைய விஷயங்களையெல்லாம் பேசிக்கிட்டு இருந்தோம். நான் ஏதோ ஒரு ஜோக் சொல்ல, அதைக் கேட்ட அஜித் ரொம்ப நேரம் நினைச்சு நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருந்தார். அஜித்கிட்ட ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் இருக்கும்." 

``உங்க மைனஸ்?''

``தப்பு நடந்தா, கோபம் வரும். நேருக்கு நேராப் பேசிடுவேன். ஷூட்டிங்ல டான்ஸர்கிட்ட டெடிகேஷன் இல்லைனா கோபம் வரும். டைமிங் ரொம்ப முக்கியம்னு நினைப்பேன். `டைமிங்'கை நான் என் குரு மணிரத்னம்கிட்ட கத்துக்கிட்டேன். முக்கியமா, நான் ப்ளஸ் டூ வரைக்கும்தான் படிச்சிருக்கேன். அதுவும் என் மைனஸ்தான்!"