Published:Updated:

13 வருடங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் தனுஷ் - சினேகா கூட்டணி! 

13 வருடங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் தனுஷ் - சினேகா கூட்டணி! 
13 வருடங்களுக்குப் பிறகு ஒன்றிணையும் தனுஷ் - சினேகா கூட்டணி! 

`வடசென்னை' படத்துக்குப் பிறகு, `வடசென்னை-2' படத்தில் நடிகர் தனுஷ் பிசியாக இருப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில், அவரது அடுத்த படத்தை பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

தனுஷின் 34-வது படத்தை `எதிர்நீச்சல்', `காக்கிச்சட்டை', `கொடி' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்குகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதற்கு தனுஷ் தனது 25 நாள்கள் கால்ஷீட்டை ஒதுக்கியிருக்கிறார் என்று படக்குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு விவேக்-மெர்வின் கூட்டணியினர் இசையமைக்கின்றனர். 

இதில் தனுஷ் அப்பா மற்றும் மகனாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். மேலும், இதில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சினேகா நடிக்கவிருக்கிறார். தவிர, ஒரு புதுமுக நடிகை ஒருவரையும் நடிக்க வைப்பதற்கான தேடுதல் வேட்டையும் படக்குழுவினரால் நடத்தப்பட்டு வருகிறது. `புதுப்பேட்டை' படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 13 வருடங்கள் கழித்து தனுஷ்-சினேகா ஜோடி இப்படம் மூலம் ஒன்றிணைவைதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.