
மதுரை: நகைச்சுவை நடிகர் செந்தில் மகன் திருமணம் இன்று மதுரையில் உள்ள ஒரு திருமண மஹாலில் நடந்தது.
நகைச்சுவை நடிகர் செந்திலின் இளைய மகன் ஹேமச்சந்திரபிரபு திருமணம் இன்று காலை மதுரை வில்லாபுரத்தில் உள்ள் எ.எஸ். திருமண மஹாலில் நடந்தது. மணமகள் ராஜராஜேஸ்வரி எம்.பி.பி.எஸ். படித்துக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க. தலைமைக் கழக பேச்சாளராக நடிகர் செந்தில் இருப்பதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் என அக்கட்சியைச் சேர்ந்த பலர் திருமண விழாவில் கலந்து கொண்டனர். இந்த திருமண விழாவில் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சார்பில் ராஜ்யசபா எம்.பி. ஆ.இளவரசன் கலந்து கொண்டு முதல்வரின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.
இந்த திருமணம் திரைப்பட நடிகரின் மகன் திருமணம் என்பதா, திரைத் துறையினர் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பில் மதுரைவாசிகள் பலர் திருமண மஹாலை சுற்றி சுற்றி வந்தனர். ஆனால், திரைப் பிரபலங்கள் யாரும் திருமண விழாவுக்கு வரவில்லை. வருகிற 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் வரவேற்பு நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
##~~## |
கே.கே.மகேஷ்
படங்கள்: