Published:Updated:

மொரட்டு சிங்கிளாக மாறுகிறாரா ஜி.வி.பிரகாஷ் குமார்?!

உ. சுதர்சன் காந்தி.
மொரட்டு சிங்கிளாக மாறுகிறாரா ஜி.வி.பிரகாஷ் குமார்?!
மொரட்டு சிங்கிளாக மாறுகிறாரா ஜி.வி.பிரகாஷ் குமார்?!

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வெளியான படம் `சர்வம் தாளமயம்'. இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, `த்ரிஷா இல்லனா நயன்தாரா' பட இயக்குநர் ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் `காதலைத் தேடி நித்யானந்தா' எனும் 3டி படத்தில் நடித்து வருகிறார்.

இயக்குநர் எழில் இயக்கவிருக்கும் படத்திலும் நடிக்க இருக்கிறார். தவிர, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி ஜானரில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் அறிவிப்பு வரும்போதெல்லாம் முரட்டு `சிங்கிள்'களுக்கான படம் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில், ஆரா சினிமாஸ் சார்பாக மகேஷ் கோவிந்தராஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு `ஐ எம் சிங்கிள்' எனப் பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எழில் இயக்கத்தில் அவர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பும் இந்த மாதம் தொடங்குகிறது. 100% காதல்', `ஐங்கரன்', `4ஜி', `அடங்காதே', `குப்பத்து ராஜா', `ஜெயில்', `வாட்ச்மேன்' உள்ளிட்ட படங்கள் ஜி.வி.பிரகாஷின் கைவசம் உள்ளன.