Published:Updated:

'பூமராங்' படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

'பூமராங்' படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்!
'பூமராங்' படத்தைப் பாராட்டிய ரஜினிகாந்த்!

'இவன் தந்திரன்' படத்திற்குப் பிறகு, இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம், 'பூமராங்'. அதர்வா, மேகா ஆகாஷ், இந்துஜா, சதீஷ், ஆர்ஜே பாலாஜி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை, 'மசாலா பிக்ஸ்' தயாரிப்பு நிறுவனம் சார்பில், இயக்குநர் கண்ணன் தயாரித்திருக்கிறார். இன்று, இயக்குநர் கண்ணன் மற்றும் விநியோகஸ்தர், ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதுகுறித்து இயக்குநர் கண்ணனைத் தொடர்புகொண்டு பேசினோம். 

`பூமராங்' படம் விவசாயத்தைப் பற்றியும் நதிநீர் இணைப்பு பற்றியும் பேசியிருக்கிறது. நதிநீர் இணைப்புகுறித்து பல ஆண்டுகளாக ரஜினி சார் குரல் கொடுத்து வருகிறார். அதனால், அவரை சந்தித்து இந்தப் படத்தின் டிரெய்லர், பாடல்கள் ஆகியவற்றைக் காட்டினோம். மேலும், நதிநீர் இணைப்பில் என்ன தடையாக இருக்கிறது, அதைப் படத்தில் எப்படிக் காட்டியிருக்கிறோம் என அவரிடம் விவரித்தோம். அதை ஆர்வத்துடன் கேட்டவர், எங்கள் படக்குழுவைப் பாராட்டினார்.

விரைவில், அவருக்கு 'பூமராங்' படத்தை திரையிட்டுக் காட்ட காத்திருக்கிறோம். படம் வெளியாகும் முன்பே அவரிடம் வாழ்த்துப் பெற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது'' என்றார். தன் அடுத்த படத்தையும் அதர்வாவை வைத்து இயக்கவிருக்கிறார் கண்ணன். அதற்கான ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.