Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்

Published:Updated:
இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
இன்பாக்ஸ்

• அனுபமா பரமேஸ்வரனைக் காணோம் எனத் தேடினால் தெலுங்குப் படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருக்கிறார். அனுபமாவுக்குத் திரைப்பட இயக்கத்திலும் அதீத ஆர்வம் இருக்கிறது. படம் இயக்கியே தீருவேன் என்று துடிப்பாக இருந்த அனுபமா, இப்போது நடிப்புக்குச் சிறிது காலம் இடைவேளை விட்டிருக்கிறார். துல்கர் சல்மான் தயாரிக்கும் ஒரு மலையாளப் படத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிந்துவருகிறாராம். தமிழ்ப் படமா எடுமா!

இன்பாக்ஸ்

• ‘‘ஆலியா ரொம்ப குட் கேர்ள்’’ என்று பாராட்டியிருக்கிறார் சல்மான்கான். அடுத்து சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‘இன்ஷால்லா’ படத்தில் ஆலியாவோடு நடித்துவருகிறார் சல்மான். சமீபத்திய பேட்டியொன்றில் ‘‘நடிப்பில் அவர் மிகப்பெரிய ஆள். இயற்கையாகவும் துடிப்பாகவும் நடிப்பதில் அவர்தான் டாப்’’ என்று புகழோ புகழென்று ஆலியாவைப் புகழ்ந்து தள்ள,  புள்ள நாக் அவுட்டாம்! சல்மான் சர்ட்டிஃபைடு! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இன்பாக்ஸ்

• திரையிடல் தொழில்நுட்பம் 70 எம்.எம்மில் தொடங்கி அனகிலிஃப் 3டி, ஸ்டீரியோ ஸ்கோபிக் 3டி, ஐமேக்ஸ் என நாளுக்கு நாள் வெவ்வேறு விதமான வளர்ச்சியையும் அடைந்து வருகிறது. அந்த வகையில் தற்போதைய வரவு 270 டிகிரி கோணத் திரை! ‘ஸ்கிரீன் எக்ஸ்’ (ScreenX) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையிடல் வசதி பார்வையாளர்களைச் சுற்றிக் காட்சி நிகழ்வதுபோன்ற உணர்வைத் தருமாம். இந்த மாதம் வெளியாகும் ‘ஸ்பைடர்மேன் : ஃபார் ஃப்ரம் ஹோம்’ படம் உலகிலேயே முதல்முதலாக ‘ஸ்கிரீன் எக்ஸ்’ வடிவில் திரையிடப்படவுள்ளது. சிறப்பு!

• இந்த ஆண்டு மிக அதிக வெப்பநிலை பதிவு செய்யப்பட்ட நகரமாகியிருக்கிறது மகாராஷ்டிராவின் சந்திராபூர். மே-28 ஆம் தேதி மகாராஷ்டிராவில் வெப்ப அலை உருவானது. இதனால் நாக்பூர் உள்ளிட்ட நகரங்கள் பலவும் 47டிகிரி அளவுக்கு வெப்பத்தால் தகித்தது. இதில் சந்திராபூரில் 47.8 என்கிற அளவுக்கு உச்சத்தை எட்டிச் சுட்டெரித்திருக்கிறார் மிஸ்டர். சூரியர். கருணைகாட்டுங்க ஜி!

• எவரெஸ்டில்கூட டிராபிக்ஜாம் ஆகியிருக்கிறது. 200-க்கும் அதிகமான மலையேற்ற வீரர்கள் ஒரேநேரத்தில் மலையேற்றத்தில் ஈடுபட்டதால் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும் பாதையில் கிட்டத்தட்ட 2 மணிநேரம் அளவுக்கு வரிசையாக மலையேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் பலரும் மூச்சுத்திணறல் உள்ளிட்ட பிரச்னைகளால் தவித்திருக்கிறார்கள். எப்போதும் இல்லாத அளவுக்கு இந்தமுறை எவரெஸ்ட் ஏறுகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்ததால் இந்தக் கூட்டநெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே இந்த நெரிசலால் நான்கு பேர் மரணமடைந்திருக்கிறார்கள். சிலர் கவலைக்கிடமாக உள்ளனர். க்யூவிலா இடமில்லை!

• 1982-ல் அமிதாப் நடிப்பில் வெளியான சூப்பர்ஹிட் படம் `சட்டா பே சட்டா.’ அந்தப் படத்தை ரீமேக் செய்யும் முயற்சியில் இருக்கிறார் இயக்குநர் பரா கான். படத்தில் நாயகனாக ஷாருக் கான் நடிக்கச் சம்மதித்துள்ளார் என்கிறார்கள். சமீபமாக ஷாருக் நடித்த படங்கள் சரியாகப் போகாததால் அடுத்து ஒரு ஹிட் கொடுத்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் ஷாருக்... அவருக்குப் பல ஹிட்டுகள் கொடுத்த பரா கானோடு மீண்டும் இணைவதில் ஆர்வமாக இருக்கிறாராம். ரீமேக்கே துணை!

இன்பாக்ஸ்

• தமிழ் சினிமாவில் நாய், குரங்கு, யானை, புலி, எலி, பாம்பு என ஏராளமான அனிமல் ஜானர் படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. இதில் அடுத்து களமிறங்க இருப்பது முதலை. சிம்ரன், த்ரிஷா இணைந்து நடிக்கும் படத்தில் முதலை ஒன்று முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறது. ஏஜ் ஆஃப் ராம.நாராயணன்

• பப்ஜி விளையாட்டில் தொடர்ந்து ஆறு மணிநேரம் விளையாடிக்கொண்டிருந்த ஃபர்க்கான் எனும் மத்தியப்பிரதேசத்தின் நீமுச் பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுவன் மாரடைப்பால் மரணமடைந்திருக்கிறார். ‘‘அதை வெடிக்க வை... அதை வெடிக்கவை...’’ என்று அதிக சத்தத்தில் கத்திக்கொண்டிருந்தவர், தலைவலிப்பதாகத் தன் தங்கையிடம் சொல்லிவிட்டு, சரிந்துவிழுந்து இறந்துபோயிருக்கிறார். கன்ட்ரோல் பண்ணுங்கப்பா!