Published:Updated:

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”
பிரீமியம் ஸ்டோரி
“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

Published:Updated:
“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”
பிரீமியம் ஸ்டோரி
“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

ழுது பாவிய வயலில், கையிலிருக்கும் முறத்திலிருந்து விதைகளை அள்ளி, பயபக்தியோடு தூவிக்
கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. திரையில் விரியும் காட்சிகளில், புதுவயலின் சேற்று வாசனை நாசிக்குள் ஏறுகிறது. எடிட்டிங் வேலையிலிருந்த இயக்குநர் சுப்பிரமணிய சிவா உற்சாகமாகிறார்...

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

‘வெள்ளையானை’... படத்தின் தலைப்பின் வழியாக என்ன சொல்ல வருகிறீர்கள்?
                                                               
“வயலும் வயல் சார்ந்த நிலத்தையும் ‘மருதம்’ என்று வகுக்கிறது நம் திணை மரபு. மருதத்தின் தெய்வம் இந்திரன். சொர்க்கத்தின் தலைவனும் அவன்தான். இந்திரனின் வாகனம் ‘வெள்ளையானை.’ மொத்த உலகமும் உணவை நம்பி இருக்கிறது. உணவை உற்பத்தி செய்கிற விவசாயியோ, நீரை நம்பி இருக்கிறான். ஆனால் இன்றைக்கு நீர்..?

நீரில்லாத நிலம், வறட்சியைக் கொண்டுவருகிறது. வறட்சி, மனிதனிடம் பகைமையையும் வன்முறையையும் கொண்டுவருகிறது. அற்ப விஷயங்களுக்காக மனிதர்களின் மானம் பறிக்கப்படுகிறது. மானமிழப்பவன் தற்கொலை செய்வான் அல்லது இடம்பெயர்வான். அப்படியாக, வறட்சியைச் சந்திக்கும் ஒரு நிலத்தை, அதை எதிர்கொள்ளும் மனிதர்களின் வாழ்வைப் பற்றிப் பேசுவதுதான் படத்தின் மையக்களம். ‘வெள்ளையானை’ என்பது விவசாயிகளின் குறியீட்டுப் பெயர். எங்களுடையது விவசாயக் குடும்பம்தான். இது நான் வாழ்ந்த, என் நினைவுகளில் ஆழமாகப் பதிந்துள்ள என்னுடைய கிராமத்தைப் பற்றிய கதைதான்.”

 விவசாயப் பிரச்னை, இயற்கைச் சுரண்டல் சார்ந்து தொடர்ச்சியாகப் படங்கள் வந்துகொண்டிருக்கின்றன. எந்தவகையில் இது வேறுபட்ட படமாக இருக்கும்?

“பெரும்பாலும் படத்திற்கான ஒரு பின்னணியாக மட்டுமே விவசாயத்தைப் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். ஆனால், ‘வெள்ளையானை’ நேரடியாக விவசாய வாழ்வின் அன்பை, வியர்வையை, ஏமாற்றத்தை, கண்ணீரை, கோபத்தை, ரத்தத்தை அதன் உப்புச்சாரம் குறையாமல் பதிவுசெய்யும் படமாக இருக்கும்.”

மிக முக்கியமான விஷயத்தைப் பேசும் ஒரு ‘தீவிரமான படம்’ என்பதாகத் தோன்றுகிறது. படம் பார்வையாளர்களுக்கு என்ன மாதிரியான அனுபவத்தைத் தரும்?

“இது பாடல்கள், பின்னணி இசை, நகைச்சுவை என சினிமாவின் அனைத்து அனுபவங்களையும் தரக்கூடிய படம்தான். பல இடங்களில் வாய்விட்டுச் சிரிப்பீர்கள். ஆனால், அதற்குள் ஒரு வலி மறைந்திருக்கும். கிராமத்துப் பெரியவர்கள் தாங்கள் கஷ்டப்பட்ட கதைகளைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்வார்களே அதுபோலத்
தான் படம் இருக்கும். ஆனால், அதற்குள் பொதிந்துவைத்திருக்கும் வலியும் உங்களுக்குள் வந்துசேரும்.

நிறைய புதியவர்கள் நடித்திருக்கிறார்கள். ‘நடித்திருக்கிறார்கள்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதே அந்நியமாக இருக்கிறது.  ‘வெள்ளைக்குஞ்சு’வாக சமுத்திரக்கனி, ‘கொழுக்கட்டை’யாக யோகிபாபு, ‘அமுதா’வாக ஆத்மியா, ‘மருதுவாக’ இயக்குநர் மூர்த்தி, ‘வள்ளி’யாக சரண்யா ரவி... எல்லோருக்குமே ஸ்கிரிப்ட்டைப் படிக்கக் கொடுத்தேன். இந்தக் கதாபாத்திரங்களாக நீங்கள் அந்தக் கிராமத்தில் வாழ்ந்தால் எப்படி இருப்பீர்களோ அப்படி வந்துபோனால் போதும் என்று சொல்லிவிட்டேன். மிகச் சிறப்பாக உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பெரும்பாலான காட்சிகளை செஞ்சியில்தான் படம் பிடித்தோம். உழவு, நாத்து நடுதல், களை பறித்தல், அறுவடை என விவசாயத்தின் அத்தனை பருவ நிலைகளிலும் நிலக்காட்சிகளைப் பதிவுசெய்யும் வாய்ப்போடு அங்குதான் விவசாயம் நடந்துகொண்டிருக்கிறது. படத்தின் ஒளிப்பதிவாளர் விஷ்ணு, விகடனில் மாணவப் பத்திரிகையாளராக இருந்தவர். ராஜீவ் மேனன் இன்ஸ்டிட்யூட்டில் படித்தவர். வேல்ராஜிடம் உதவியாளராக இருந்தவர். ஒவ்வொரு பிரேமிலும் படத்தின் ஜீவனைக் கொண்டுவந்திருக்கிறார். எடிட்டர் ரமேஷ் ஐந்து மணிநேரப் படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைக்க உதவினார். கச்சிதமாக வந்திருக்கிறது.”

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

“வியர்வையும் ரத்தமும் உரமான விவசாய சினிமா!”

தனுஷ் படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார்?

“ ‘மிகச் சிறந்த படத்தை உருவாக்கியிருக்கிறீர்கள். ‘வெள்ளையானை’ உங்களுக்கு ஓர் அடையாளம். என்னால் செய்ய முடிந்த அனைத்தையும் இந்தப் படத்திற்குச் செய்வேன்’என்று சொன்னார். சந்தோஷப்பட்டார்.”

அகில இந்திய தனுஷ் ரசிகர் மன்றத் தலைவர் நீங்கள். மன்றத்தில் என்னதான் பிரச்னை?


“ரசிகர்களோடு நேரடித் தொடர்பில் இருப்பது எனக்குப் பிடித்திருக்கிறது. அது முக்கியமானதாகப் படுகிறது. அமைப்பு என்று வந்துவிட்டால், அதில் எல்லோரையும் திருப்திபடுத்த முடியாது. அடிப்படையான விதிமுறைகள், கட்டுப்பாடுகள் பொதுவானவை; கடைப்பிடிக்க வேண்டியவை. எந்த அமைப்பிற்குள்ளும் மீறல்கள் அனுமதிக்க முடியாதவை, அவ்வளவுதான். மேலும், பிரச்னை பிரச்னை என்று சொல்கிறவர்கள், அது குறித்துப் பேச முன்வந்தால், அதை விவாதித்துச் சரிசெய்ய நாங்கள் எப்போதும் தயாராகத்தான் இருக்கிறோம்.”

தனுஷின் மூன்றாவது படத்தை இயக்கியவர் நீங்கள். அன்றைய தனுஷ் - இன்றைய தனுஷ்... என்ன வித்தியாசத்தைப் பார்க்கிறீர்கள்?

“அன்றைக்கு அவர் வளர்ந்துகொண்டிருந்த நட்சத்திரம். இன்றைக்கு அவரிடம் எல்லா வகையிலும் அபாரமான முதிர்ச்சி தெரிகிறது. நடிப்பு, பாடல், வசனம், இயக்கம், தயாரிப்பு என  அத்தனை பாதையிலும் வெற்றிகரமாகப் பயணிப்பவராக இருக்கிறார். இன்றைய தனுஷைப் பற்றி என்னைவிட உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.”

ரசிகர் மன்றத்தைக் கட்சியாக மாற்றப்போவதாகச் செய்திகள் கேள்விப்படுகிறோமே?


“எதிர்காலத்தில் எந்த நகர்வும் சாத்தியப்படலாம்.” (சிரிக்கிறார்)

தனுஷும் நீங்களும் மீண்டும் எப்போது இணைவீர்கள்?


“விரைவில்!”

- வெய்யில், அலாவுதின் ஹுசைன்