*தனக்குத் திருமணம் நடக்கவிருப்பதாகப் பரவிவரும் செய்தி வெறும் வதந்திதான் எனக் கூறியுள்ளார் சிம்பு.

*ராஷ்மிகா மந்தனா, அறிமுகமாகி ஒரு சில படங்களிலேயே தெலுங்கில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் ஒருவராகியிருக்கிறார். அடுத்து வரவிருக்கும் ‘டியர் காம்ரேட்’ படத்துக்கு, முந்தைய படத்தைவிட 50% உயர்ந்துள்ளதாம் அவரது சம்பளம்.

* பாலிவுட் பட வாய்ப்புகள் வரிசையாக வந்தவண்ணம் இருப்பதால், மும்பைக்குக் குடியேறிவிட்டார், கீர்த்தி சுரேஷ்.

* ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் பயோபிக்கான ‘யாத்ரா’வின் இரண்டாம் பாகத்தில் ஒய்.எஸ்.ஆரின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி வேடத்தில் நடிக்க சூர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

* வடிவேலுவின் `கான்ட்ராக்டர் நேசமணி’ உலக அளவில் டிரெண்டு ஆனது. இந்த வைரல் மேட்டரைப் பயன்படுத்திக்கொள்ள உடனே ‘கான்டிராக்டர் நேசமணி’ என்கிற தலைப்பைப் பதிவு செய்துவிட்டது ஒரு படக்குழு!

* சசிகுமார் அடுத்து நடிக்கும் தலைப்பிடப்படாத ஒரு படத்தில் துப்பறியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளார். இந்தப்படத்தை ‘காலேஜ் டேஸ்’ படத்தை இயக்கிய மலையாள இயக்குநர் ஜிஎன் கிருஷ்ணகுமார் இயக்கிவருகிறார்.

* ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்காகப் பரப்புரை செய்தார் ‘புகார்கள் புகழ்’ ஸ்ரீரெட்டி. அந்தக்கட்சி வெற்றிபெற்றதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார், அடுத்து தமிழக அரசியலில் இறங்கவும் ஆயத்தமாகிவருகிறாராம்!

* இயக்குநர் ஆகிறார் மோகன்லால். அடுத்து ‘பரோஸ்’ என்ற மலையாளப் படத்தை இயக்கவிருக்கிறார். இது ஒரு 3டி படமாகவும் இருக்கப்போகிறதாம். படத்துக்காக கடுமையாக உடற்பயிற்சிசெய்து உடல் எடையெல்லாம் குறைத்திருக்கிறார்!

* ஜெயராம் நடிக்கும் `மார்க்கோனி மத்தாய்’ எனும் படத்தின் மூலம் கேரளாவிலும் கால் வைக்கவிருக்கிறார் விஜய்சேதுபதி.

* 13 ஆண்டுகளாக சினிமாவிலிருந்து முழுக்க விலகி அரசியலில் பிஸியாக இருந்தார் விஜய்சாந்தி. மீண்டும் மகேஷ்பாபு நடிப்பில் தயாராகிவரும் ‘சரிலேரு நீக்கெவரு’ படத்தின் மூலம் கம்பேக் கொடுக்கவிருக்கிறார்!

* தோனியாக நடித்து அசத்தியவர் சுஷாந்த் சிங் ராஜ்புத். தற்போது வில்வித்தைப் பயிற்சியில் தீவிரமாக இருக்கிறார். அடுத்து ஏதோ ஸ்போர்ட்ஸ் படத்திற்காகவா என விசாரித்தால்... `அதெல்லாம் இல்லைங்க, பர்சனல் இன்ட்ரெஸ்ட்’ என்று சொல்லியிருக்கிறார்.

* `தோர்’ பாத்திரத்தில் நடித்துக் கலக்கியவர் கிரிஸ் ஹெம்ஸ்வொர்த், அடுத்து ‘மென் இன் பிளாக் : இன்டர்நேஷனல்’ படத்தில் நாயகனாக நடித்திருக்கிறார். சமீபத்திய பேட்டியில் தனக்குப் பிடித்த ஹீரோயின் பிரியங்கா சோப்ராதான் என்று கூறி வியப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

* கேன் திருவிழா முடிந்துவிட்டது. இந்த முறை கேன் திருவிழாவின் உயரிய விருதான பாம் டி ஓர் விருதினை கொரியத் திரைப்படமான `பாரசைட்’ பெற்றுள்ளது. `ஹோஸ்ட்’ படத்தை இயக்கிய போங் ஜூன் ஹூ இயக்கியிருக்கும் படம் இது.