Published:Updated:

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’
பிரீமியம் ஸ்டோரி
இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

ஷங்கர் - வடிவேலு - லைகா முக்கோணச் சிக்கலின் முடிச்சுகள்!

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

ஷங்கர் - வடிவேலு - லைகா முக்கோணச் சிக்கலின் முடிச்சுகள்!

Published:Updated:
இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’
பிரீமியம் ஸ்டோரி
இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

மிழ் சினிமாவில் ‘கத்தி’ படத்தின் மூலம் வலுவாகக் கால்பதித்தது, லண்டனைச் சேர்ந்த லைகா நிறுவனம். முதல்படமே மெகாஹிட். அடுத்தடுத்து ரஜினி, கமல் என மெகா காம்பினேஷனில் பெரிய அறிவிப்புகளை வெளியிட்டது.

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

‘2.0’ படப்பிடிப்பு 2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் நிர்ணயித்த ‘2.0’ படத்தின் பட்ஜெட், கிராஃபிக்ஸ் வேலைகள் உள்ளிட்டவற்றால் அதிகமானது. மேலும் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளால் தாமதமாகி, 2018-ல் படம் ரிலீஸ் ஆனது. பட்ஜெட் அதிகமானாலும் லைகா நிறுவனத்தை ‘2.0’ படத்தின் ரிலீஸ் ஏமாற்றவில்லை. உலகம் முழுக்க பலகோடி ரூபாய் வசூலித்துக் கொடுத்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

லைகா நிறுவனத்துக்கும், ஷங்கருக்கும் நல்ல நட்புறவு இருந்தபோது, ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் லைகா நிறுவனத்துக்குத் தயாரித்துக் கொடுக்க ஒப்புக்கொண்டார், ஷங்கர். வடிவேலு கதாநாயகனாக நடிக்க, சிம்புதேவன் இயக்க, சென்னை ஈ.வி.பி ஸ்டூடியோவில் சரித்திர கால செட் போடப்பட்டது. வடிவேலுவுக்கும் கணிசமான தொகை முன்பணமாகக் கொடுக்கப்பட்டது. ஆரம்பத்தில் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படப்பிடிப்பில் உற்சாகமாகக் கலந்துகொண்டார், வடிவேலு. இடையில் என்ன நடந்ததோ தெரியவில்லை, படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் வடிவேலுமீது புகார் கொடுத்தார் ஷங்கர்.  ‘வடிவேலு, ஷங்கர் படத்தில் தொடர்ந்து நடிக்க வேண்டும். இல்லையெனில், ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்துக்குச் செலவான தொகையை நஷ்டஈடாகத் தரவேண்டும். அதுவரை வடிவேலுவைப் புதிய படங்களில் யாரும் ஒப்பந்தம் செய்யக் கூடாது’ என்று தீர்மானம் நிறைவேற்றியது கவுன்சில். என்னதான் நடந்தது என்பது குறித்து வடிவேலுவிடம் பேசினோம்.

“நான் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்துல மூணு விதமான வேடத்துல நடிக்கிறேன். என்னோட அவுட்புட் இந்தப் படத்துக்கு ரொம்ப ரொம்ப முக்கியம். முழுப்படத்தையும் நான் ஒருத்தன்தான் சுமக்கணும். என்னோட சூழ்நிலை இப்படி இருக்க, ஒருநாள் ஷூட்டிங்ல என்னோட பாணியில் நடிக்கும்போது, இப்படி வேணாம், அப்படி நடிக்கணும்னு ஷங்கர் சார் சொன்னதா, டைரக்டர் சிம்புதேவன் என்கிட்ட சொன்னார். இதுவரை எல்லாப் படங்களிலுமே இயக்குநர் சொல்றதை உள்வாங்கிக்கொண்டு என் பாணியில்தான் நடித்திருக்கிறேன். அதுதான் மக்களிடம் வரவேற்பையும் பெற்றிருக்கு. ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக நடிக்கச் சொல்றதை நான் ஏத்துக்கலை. மேலும், இந்தப் பிரச்னையால என்னை எந்தப் படத்திலும் யாரும் புக் பண்ணக்கூடாதுன்னு கவுன்சில் சொல்லுது. இப்படி தமிழ்த் தயாரிப்பாளர்கள் சங்கமும், ஷங்கரும் சேர்ந்து என்னை அழிக்கப் பார்க்குறாங்க” என்றார், வடிவேலு.

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் இயக்குநர் சிம்புதேவனிடம் இதுகுறித்துப் பேசினோம்.

“ஏற்கெனவே ஐந்து படங்களை இயக்கியிருக்கேன். நான் எதுக்கு ஷங்கர் சார் பெயரைப் பயன்படுத்தணும்? நாங்கள் எடுப்பது வரலாற்றுப் புனைவுப் படம். எட்டு மாசம் டிஸ்கஷன் பண்ணி, பக்காவா ஸ்கிரிப்ட்டை ரெடி பண்ணி, வடிவேலு சார்கிட்ட காட்டி, ஒப்புதல் பெற்ற பிறகே படத்தின் ஷூட்டிங்கைத் தொடங்கினோம். முதலில் பாடல் காட்சியைப் படமாக்கும் முன், அதை வடிவேலு சாருக்குப் போட்டும் காட்டினோம். ஆஹா ஓஹோன்னு ரொம்ப ரசிச்சார். ஷூட்டிங் கிளம்புறதுக்கு முந்தைய நாள், ‘பாட்டு டியூனை மாத்துங்க; முதல் வரியை நீக்குங்க’ன்னு சொன்னார். தயாரிப்பாளர் தரப்பிலிருந்து நியமித்திருந்த ஆடை வடிவமைப்பாளரை மாற்றி, தன்னுடைய பர்சனல் காஸ்ட்யூம் டிசைனரை நியமிக்கச் சொன்னார். இந்த இரண்டும்தான், பிரச்னையின் மையப்புள்ளிகள்” என்று விளக்கமளித்தார். 

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்னைகள் குறித்து, படத் தயாரிப்பாளர் ஷங்கரின் ‘எஸ்.பிக்சர்ஸ்’ நிறுவனத் தரப்பினரிடம் பேசினோம்.  “வடிவேலு சாருக்கும், எங்களுக்கும் பிடித்துதான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். அவர் இதுவரை ஹீரோவா நடிச்சு ஹிட் ஆன ஒரே படம், ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’தான். இருந்தும், வடிவேலு சார் கதையில் 17 விஷயங்களை மாற்றச் சொன்னார். நாங்கள் கதைக்குப் பொருத்தமான 13 மாற்றங்களுக்கு ஒப்புக்கிட்டோம். ஆனால், மீதமுள்ள நான்கு விஷயங்கள் கதையின் தன்மையையே மாற்றக்கூடியவை.
மேலும் எங்களுக்கு 2016-ல் தந்த தேதிகளில் ‘மெர்சல்’, ‘கத்தி சண்டை’ படங்களின் ஷூட்டிங்கிற்குச் சென்றுவிட்டார். தவிர, இரண்டு கோடி ரூபாய் முன்பணம் பெற்றுக்கொண்டு 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடிக்க ஆரம்பித்தார். முதல் கட்டமாக, இரண்டு பாடல்களுடன் 23 நாள்கள் திட்டமிட்டு, படப்பிடிப்புக்கு வந்தார். ஆங்கிலேயர் கோட்டையில் நடப்பதுபோன்ற இரண்டாவது பாடலுக்காக வெளிநாட்டு நடனக்கலைஞர்கள் இருவர், கோவாவிலிருந்து வந்த துணை நடிகர்கள் என அனைவரும் சென்னையில் இருக்க, ‘நான் இந்தப் பாடலை இன்னும் கேட்கவே இல்லையே’ன்னு சொல்லி, மதுரைக்குக் கிளம்பிவிட்டார், வடிவேலு. கோடிக்கணக்கில் பணம் செலவழித்துப் போட்ட செட்டுகள் மழையில் நாசமாகிவிட, அதற்குப் பிறகு மூன்று மாதங்களுக்கும் மேலாக வடிவேலுவுக்காகக்  காத்துக்கொண்டிருந்தோம். எந்தவிதப் பதிலும் அவரிடமிருந்து வராத நிலையில்தான், தயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகினோம். நடிகர் சங்கத்துக்கும் வடிவேலு இதுவரை எந்தப் பதிலும் தரவில்லை. தற்போது, ‘இயக்குநர் சிம்புதேவனை மாற்றினால், இப்படத்தில் நடித்துத் தருகிறேன்’ என்கிறார். ‘இம்சை அரசன்’ படம் சிம்புதேவனின் படைப்பு. இரண்டாம் பாகத்திலும் வடிவேலு சார் நடித்தால்தான் சிறப்பாக இருக்கும் என்று இன்னும் நம்பிக்கையுடன் இருக்கிறார். அந்த நம்பிக்கை இருக்கும்வரை, ஷங்கர் சார் இப்படத்தைக் கைவிட மாட்டார்” என்கிறார்கள்.

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

‘இம்சை அரசன்’ பிரச்னை இப்படி என்றால் ‘இந்தியன் 2’ படத்துக்கு வேறு பிரச்னைகள்.

‘பிக் பாஸ் சீஸன் 2’ நிகழ்ச்சியில் ஷங்கர் கலந்துகொண்டு, ‘இந்தியன் 2’ படத்தின் அறிவிப்பை வெளியிட, கமல் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு. கமல் - ஷங்கர் காம்பினேஷனில் உருவாகவிருக்கும் படத்தைத் தெலுங்குத் திரைப்படத் தயாரிப்பாளர் தில்ராஜ் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின், சில மாறுதல்கள் ஏற்பட ‘இந்தியன் 2’ படம் லைகா வசம் போனது. ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், கலை இயக்குநர் முத்துராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு, உக்ரைன், நெதர்லாந்து, போலந்து நாடுகளுக்குச் சென்று படப்பிடிப்புக்கான லொகேஷன்களைத் தேர்வுசெய்தனர்.

ஆரம்பகட்டத்திலேயே மொத்த பட்ஜெட் எவ்வளவு என்று லைகா நிறுவனம் ஒப்பந்தத்தில் கையெழுத்து போடச்சொல்ல, ஷங்கர் தயக்கம் காட்டியிருக்கிறார். ஒருபக்கம் ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ படத்தின் பிரச்னை, இன்னொரு பக்கம் ‘இந்தியன் 2’ விவகாரம் என இரண்டு பிரச்னைகளால் ஷங்கர்மீது வருத்தத்தில் இருக்கிறது, லைகா நிறுவனம்.

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

ஆனால் ஷங்கர் தரப்போ, “சென்ற வருடம் டிசம்பர் மாதம், `20 மாத படப்பிடிப்புக் காலம், 4 மாத போஸ்ட் புரொடக்‌ஷன் காலம்’ என்று வணிகரீதியாக யோசித்து, லைகா நிறுவனம் சொன்ன பட்ஜெட்டில் எவ்வளவு பணம் எப்போது தரவேண்டும் என அனைத்தையும் இறுதி செய்துதான் படப்பிடிப்பைத் தொடங்கினார் ஷங்கர். ஆனால், மேக்கப் டெஸ்ட் செய்தபோது, கமலுக்கு ஏற்பட்ட அலர்ஜியால் படப்பிடிப்பு  தள்ளிப்போனது. இதனால், பட்ஜெட்டையும், படப்பிடிப்புக் காலத்தையும் குறைக்கச் சொன்னது லைகா. அதற்கும் சரியென்றே சொல்லியிருந்தார், ஷங்கர். ஜனவரி, பிப்ரவரி மாதம் படத்தின் சின்ன ஷெட்யூல்கள், ஏப்ரல், மே மாதங்களுக்குப் பிறகு பெரிய ஷெட்யூல்கள் மற்றும் வெளிநாட்டுப் படப்பிடிப்பு என்பதுதான் லைகாவின் திட்டம்.

ஆனால், ஷங்கர் படத்தையே தொடங்க முடியாத அளவுக்கு மாறி மாறி புதுப் புது ஒப்பந்தங்களை அனுப்பிக்கொண்டிருக்கிறது லைகா நிறுவனம். குறிப்பிட்ட நேரத்தில் ஷூட்டிங்கைத் தொடங்காத அவர்கள், சொன்ன நேரத்தில் முடிக்கச் சொல்கிறார்கள். ‘இந்தியன் 2’ படத்திற்காக, தனக்கு வந்த மற்ற வாய்ப்புகளையும் புறக்கணித்தார் ஷங்கர். ஆனால் லைகா நிறுவனத்தின் குளறுபடிகளால்தான் ‘இந்தியன் 2’ வேலைகள் தடைப்படுகின்றன.” என்கிறது.

மேலும் “இந்தப் பிரச்னைகள் குறித்து சென்னையில் இருக்கும் லைகா அலுவலகத்தில் யாரும் இது குறித்துப் பேசத் தயாராக இல்லை. லண்டன் அலுவலகத்தில் இருப்பவர்களோ இங்கிருக்கும் சினிமா நடைமுறைகள் தெரியாமல் பேசுகிறார்கள். மேலும், இந்தப் பிரச்னைகள் லைகாவின் தலைவர் சுபாஷ்கரனுக்குத் தெரியுமா என்பதுகூடத் தெரியவில்லை” என்றும் ஷங்கர் தரப்பிலிருந்து ஆதங்கப்படுகிறார்கள். இதுகுறித்துப் பேசுவதற்காக நாமும் லைகா நிறுவனத்தின் இணை தயாரிப்பாளர் கருணாவைத் தொடர்பு கொள்ள முயன்றோம். ஆனால் அவர் கிடைக்கவில்லை. லைகா நிறுவனத்தைச் சேர்ந்த மேலும் சிலரைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் பதில் அளிக்கத் தயாராக இல்லை.

இழுபறியில் ‘இம்சை அரசன்’, ‘இந்தியன்-2’

இது ஒருபுறம் இருக்க, கமலின் இன்னொரு பட விவகாரத்திலும் லைகா நிறுவனம் சம்பந்தப்பட்டிருக்கிறது. கமலின் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் தொடக்க விழாவைப் பிரமாண்டமாகக் கொண்டாடியது, லைகா நிறுவனம். வெளிநாட்டில் கமல், ஸ்ருதிஹாசன் நடிக்கும் காட்சிகளும் படமாக்கப்பட்டு ஜரூராக வேலைகள் தொடங்கின. இந்தச் சூழ்நிலையில், கமல் விபத்தில் சிக்க, ‘சபாஷ் நாயுடு’ படப்பிடிப்பு தடைப்பட்டது. பிறகு பிக்பாஸ், அரசியல் என்ட்ரி என்று கமலும் பிஸி ஆனார். ‘சபாஷ் நாயுடு’ படம் கைவிடப்பட்டதாகவே தெரிகிறது.

பிரமாண்ட இயக்குநர், புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனம், தமிழ் சினிமாவின் மகத்தான இரு கலைஞர்கள்... இவ்வளவு இருந்தும் இந்தப் படங்கள் இழுபறியில் சிக்கியிருப்பது தமிழ் சினிமாவுலகத்தைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. பணம், ஈகோ, சொன்ன சொல் தவறுவது, பேசித் தீர்க்காமல் பிரச்னைகளைப் பெரிதாக்குவது என்று பல காரணங்களால் இந்தப் படங்கள் மட்டுமல்ல, இன்னும் பல படங்கள் இழுபறியில் சிக்கித் தவிக்கின்றன.

இந்தப் பிரச்னைகள் முடியும் புள்ளி, தமிழ் சினிமாவின் உற்சாக ஓட்டம் தொடங்கும் புள்ளி.

- எம்.குணா, அலாவுதின் ஹுசைன்