Published:Updated:

`கோதாவுல குதிச்சமா...கோப்பையைப் புடிச்சமானு போய்க்கிட்டே இருக்கணும்!’ - ஜி.வி.பிரகாஷின் `குப்பத்து ராஜா’ டிரெய்லர்

அலாவுதின் ஹுசைன்

மொரட்டு சிங்கிள்களின் பிரதிநிதியாக மாறியுள்ள  நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள குப்பத்துராஜா படத்தின்  டிரெய்லர் வெளியாகியுள்ளது. 

சர்வம் தாளம் மயம் படத்திற்கு கிடைத்த  நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, அடங்காதே, 100% காதல், ஐங்கரன், 4ஜி', ரைசாவுடன் 'காதலிக்க யாருமில்லை', சசி இயக்கத்தில் சித்தார்த்துடன் 'சிவப்பு மஞ்சள் பச்சை', ஏ.எல். விஜய் இயக்கத்தில் 'வாட்ச்மேன்'  எனப் பல படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ். அது மட்டுமில்லாமல் தனுஷ் நடித்துள்ள' அசுரன்' படத்திற்கும் இசையமைத்து இருக்கிறார். 

தற்போது, நடன இயக்குநர் பாபா பாஸ்கர் இயக்கியுள்ள 'குப்பத்து ராஜா' படத்திலும் நடித்து முடித்திருக்கிறார். அப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியானது.  ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துமுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுக நாயகி பாலக் லால்வாணி நடித்துள்ளார். ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் பூனம் பாஜ்வாவும்,  வில்லனாக பார்த்திபனும் நடித்துள்ளனர். ஏப்ரல் 5ம் தேதி இப்படம்  திரைக்கு வரவிருக்கிறது.