Published:Updated:

`` 'பாகுபலி-3' எடுத்தால் நான் நடிக்கிறேன்" - விருப்பம் தெரிவித்த ஹாலிவுட் நடிகர்

தெலுங்கு, தமிழ், இந்தியில் வெளியான 'பாகுபலி' படம், இந்தியா தாண்டி சீனா, ஐரோப்பா எனப் பல நாடுகளில் வசூலைக் குவித்தது நாம் எல்லோரும் அறிந்த ஒன்று. ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், ராணா டகுபதி, சத்யராஜ், தமன்னா, அனுஷ்கா, ரம்யா கிருஷ்ணன் நடித்த அந்தப் படம், சுமார் 1000 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. ஆனால், அந்தப் படம் வணிக ரீதியான வெற்றியைக் கடந்து, இப்போது மற்றுமொரு வகையில் உலக அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது.

க்வன்டின் டரண்டினோவின் 'பல்ப் ஃபிக்‌ஷன்', 'மார்வெல் சினிமாட்டிக் யூனிவெர்ஸின்' படங்களான 'அவெஞ்சர்ஸ்', 'கேப்டன் மார்வெல்' போன்றவற்றில், நிக் ஃபியூரி கதாபாத்திரம் ஏற்று நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சன், 'பாகுபலி' படத்தின் மூன்றாம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

 சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், ஏதேனும் பாலிவுட் படத்தில் நடிக்க ஆசை இருக்கிறதா என்ற கேள்விக்கு, "ஆம். 'பாகுபலி-3' எடுத்தால் அதில் நடிக்க விருப்பம் இருக்கிறது" என்றார். மேலும், இந்தியாவுக்கு வந்து ஒரு பாலிவுட் படத்தை எடுக்கவும் ஆசை இருக்கிறது என சாமுவேல் கூறியுள்ளார்.

சாமுவேல் கூறிய பதில், ஒரு வகையில் பெருமையாகப் பார்க்கப்பட்டாலும், ட்விட்டரில் பல தெலுங்கு ரசிகர்கள், பாகுபலி பாலிவுட் படம் அல்ல, டோலிவுட் படம் எனும் கருத்தில் அவரை டாக் செய்து பதிவிட்டுவருகின்றனர்.

ஏற்கெனவே, 'ஹே ராம்', 'எந்திரன்', '2.0', 'ஈகா' (தமிழில் 'நான் ஈ') போன்ற தமிழ் அல்லது தெலுங்கு படங்களை உலக அளவில் பேசும்போது பாலிவுட் படங்கள் எனக் கூறிவந்த வரிசையில், இப்போது பாகுபலியையும் இணைத்திருப்பது, பல பிராந்திய மொழி சினிமா ரசிகர்களைக் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.