Published:Updated:

`ஆர்யா நடிக்கும் புதிய படம்!’ - வெளியான `டெடி’ பட போஸ்டர்

சந்தோஷ் மாதேவன்
`ஆர்யா நடிக்கும் புதிய படம்!’ - வெளியான `டெடி’ பட போஸ்டர்
`ஆர்யா நடிக்கும் புதிய படம்!’ - வெளியான `டெடி’ பட போஸ்டர்

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம், சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யாவை வைத்துத் தயாரிக்கும் அடுத்த படத்துக்கு 'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இன்று ட்விட்டரில் அந்த நிறுவனம் இதை ஒரு போஸ்டர் மூலம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

`ஆர்யா நடிக்கும் புதிய படம்!’ - வெளியான `டெடி’ பட போஸ்டர்

வித்தியாசமான ஜானர் படங்களைத் தமிழுக்கு அறிமுகம் செய்வதில் கை தேர்ந்த இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன். தமிழின் முதல் ஜாம்பி படமான 'மிருதன்', முதல் விண்வெளிக் கதைக்களப் படமான 'டிக்:டிக்:டிக்' இவர் உருவாக்கியது தான். அது போக ராமநாராயணன் காலத்து அனிமல் ஜானரை, 'நாய்கள் ஜாக்கிரதை' படம் மூலமாக மீண்டும் அறிமுகப்படுத்தியவரும் சக்தி தான்.

`ஆர்யா நடிக்கும் புதிய படம்!’ - வெளியான `டெடி’ பட போஸ்டர்

அந்த வரிசையில் 'டெடி' என்ன ஜானரில் இருக்கும் என சினிமா ரசிகர்களிடையே பெரும் ஆர்வம் நிலவிவருகிறது. பொதுவாக ஹாலிவுட்டின் பிரபலமான ஜானர்களைத் தழுவி படம் எடுப்பதால், இதுவும் அப்படிப்பட்ட ஒரு கதையம்சத்தில் தான் இருக்கும் எனக் கருத்துகள் பதிவாகின்றன.

அதுமட்டுமல்லாது, 'டெடி' எனப் பெயரிடப்பட்டுள்ளதால், இது பொம்மைகளை வைத்து எடுக்கப்படும் த்ரில்லர் படமாக இருக்கலாம் என்றும் சினிமா ரசிகர்களால் கணிக்கப்படுகிறது.