பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

இன்பாக்ஸ்

இன்பாக்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
இன்பாக்ஸ்

படம்: கிரண் ஷா

1989-ல் பீஜிங்கின்  ‘தியானன்மென் சதுக்கம்’ பகுதியில் நடைபெற்ற மாணவர் போராட்டம் வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. கடந்த வாரம் ஹாங்காங்கில் மக்கள் திரளாகக் கூடி இந்நிகழ்வை நினைவு கூர்ந்தார்கள். பல்லாயிரம் மக்கள் கூடி நின்று மெழுகுவத்தி ஏந்திய இந்தப் புகைப்படம் ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என செம வைரல்.  படங்களைப் பார்த்த அந்தப் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள் பழைய நினைவுகளில் மூழ்கினர். வரலாறு முக்கியம்!  

இன்பாக்ஸ்

• நெட்ஃபிளிக்ஸில் நான்கு சீஸன்களாக சக்கைப்போடு போட்ட ‘பிளாக் மிரர் சீரிஸின்’ 5 வது சீஸன் வெளியாகியுள்ளது. ‘Sci-Fi’ ஜானர் ரசிகர்களுக்கு நல்ல தீனியாக வெளியாகிய இதற்கு, புதிய ரசிகர் படை உருவாகியுள்ளது. அமெரிக்கப் பாடகி மிலி சைரஸ்  5 வது சீஸனில் நடித்திருப்பது தான் புதிய ரசிகர்களின் வரவுக்குக் காரணம். மிலி ஆர்மி!

• அமெரிக்காவின் ‘அதிக செல்வமுடைய பெண்கள்’ பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் ரிஹானா. ஃபோர்ப்ஸ் பத்திரிகை நடத்திய இந்தக்  கணக்கெடுப்பில்  600 மில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார் இந்த 31 வயது  ‘பாப்  குயின்.’ 2017-ம் ஆண்டு LVMH எனும் பிரெஞ்சு பன்னாட்டு ஆடம்பரப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனத்தோடு இணைந்து இவர் தயாரித்த Fenty அழகுப் பொருள்தான் இவருக்கு அதீத லாபத்தைக் கொடுத்திருக்கிறது. 15 மாதத்தில் இந்த அழகுசாதனப் பொருள் ஈட்டிக் கொடுத்தது மட்டும் 570 மில்லியன் டாலர்.  அழகு வியாபாரம்!

• எவரெஸ்ட் சிகரத்தில் தேங்கிக் கிடந்த  11 டன் குப்பை, 4 மனித சடலங்கள் ஆகியவற்றை சுத்தம் செய்து அசத்தியுள்ளனர். நேபாள ராணுவத்துடன் நேபாள மலையேறுதல் சங்கம், சுற்றுலாத்துறை அமைச்சகம் மற்றும் எவரெஸ்ட் மாசுக் கட்டுப்பாட்டு அமைப்பு என ஒரு குழுவாகச் சேர்ந்து இந்தப் பணியைச் செய்து முடித்துள்ளனர். கடந்த மாதம் ஏப்ரலில் தொடங்கிய இந்தப் பணியை ஜூனில் முடித்துள்ளனர்.  மது பாட்டில்கள், பேட்டரிகள், உணவுப்பொருள்கள், சமையல் கழிவுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் எனச் சேகரித்த குப்பைகளை மறுசீரமைப்பு செய்யத் திட்டமிட்டுள்ளது இந்தக் குழு. சிகரம் ஏறு!

 

• சிவகாமியாக ‘பாகுபலி’யில் கலக்கிய ரம்யா கிருஷ்ணன், ராணியாக நடித்த வெப் சீரிஸுக்குத்தான் ரசிகர்கள் ஆவலுடன் வெய்ட்டிங். MX Player எனும் ஆன்லைன் சைட்டில் ஆகஸ்டில் வெளியாகவிருக்கும் அந்த வெப் சீரிஸை ரேஷ்மா கட்டாலா எழுத, கௌதம் மேனன் சில எபிசோடுகளையும், ‘கிடாரி’ இயக்குநர் பிரசாத் முருகேசன் சில எபிசோடுகளையும் இயக்கியிருக்கிறார்கள். கட்டளையே சாசனம்... சாசனமே சீரிஸ்!  

இன்பாக்ஸ்

• தென்னிந்திய சினிமாவுக்கு ராஷ்மிகா மந்தனாவை அறிமுகப்படுத்தியவர் கன்னட ஹீரோ ப்ளஸ் இயக்குநர் ரக்‌ஷித் ஷெட்டி. இருவரும் இணைந்து நடித்த ‘கிரிக் பார்ட்டி’ படப்பிடிப்பின்போது மலர்ந்த காதல், திருமணம் வரை சென்று பிரேக் அப் ஆனது. பின், தமிழ், தெலுங்கு என பிஸியான ராஷ்மிகா கன்னட சினிமாவுக்கு டிமிக்கி கொடுத்துவருகிறார். காரணம் ரக்‌ஷித் ஷெட்டி என்கிறார். சரிப்பட்டு வர மாட்டீங்க!

• கமல்ஹாசனின் ‘ஆளவந்தான்’ மூலம் தமிழில் அறிமுகமானவர் பாலிவுட் நடிகை  ரவீனா டாண்டன். பாலிவுட்டில் அவ்வப்போது தலைகாட்டும் இவர். கே.ஜி.எஃப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். கதையின் முக்கியக் கதாபாத்திரமான இந்திரா காந்தி வேடத்தில் நடிக்கவுள்ளார்.  ரவீனா காந்தி!

• ‘சாக்ரெட் கேம்ஸ்’ தொடருக்குப் பிறகு நவாசுதீன் சித்திக்கி மீண்டும் நெட்ஃபிளிக்ஸுக்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.  மனு ஜோசஃப் எழுதிய ‘சீரியஸ் மென்’ புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது இப்படம். இதில் நவாசுதீன் பத்து வயதுச் சிறுவனுக்குத் தந்தையாக நடிக்கிறார். முழுக்க முழுக்க மும்பையில் நடக்கும் இப்படத்தை சுதிர் மிஷ்ரா தயாரிக்கிறார். சிங்கார் சிங் ரிட்டர்ன்ஸ்! 

• தெலுங்கில் ரீமேக்காகும் ‘96’ படத்தில், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஷர்வானந்தும், த்ரிஷா கதாபாத்திரத்தில் சமந்தாவும் நடிக்கின்றனர். தமிழில் சிறுவயது ஜானுவாக நடித்த கௌரி கிஷன் தெலுங்கிலும் நடிக்கிறார். இதற்கிடையில், மலையாளத்தில் ‘அனுகிரகத்தின் ஆண்டனி’ என்ற படத்தில் அறிமுகமாகவிருக்கிறார் கௌரி. 96லு!

இன்பாக்ஸ்

• உச்ச நட்சத்திர அந்தஸ்தைத் தொட்ட கதாநாயகிகள் தற்போது, பெண்களை  மையமாகக் கொண்ட கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார்கள். அந்த வரிசையில் சமந்தா ‘யூ-டர்ன்’ படத்துக்குப் பிறகு, ‘டோரா’  இயக்குநர்  தாஸ் ராமசாமி இயக்கவுள்ள ஒரு த்ரில்லர் படத்தில்  நடிக்கவுள்ளார். ரெண்டு சமந்தா நியூஸ்!

இன்பாக்ஸ்

• “சேலைதான் இந்தியாவின் பாரம்பர்யமான, தனித்துவமான உடை. ஒவ்வொரு முறை நான் சேலை அணியும்போதும் பண்புடையவளாகவும், பெருமையாகவும் உணர்கிறேன்” எனத் தனது இன்ஸ்டா பக்கத்தில் சேலைப்புராணம் பாடியுள்ளார் பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் சேலை அணிந்தபடி எடுத்த போட்டோ ஷூட் செம ஹிட் அடிக்க, ஹார்ட்டின்கள் குவிந்தன பிரியங்காவுக்கு. சேலைகட்டும் பெண்ணுக்கொரு...