பேட்டி - கட்டுரைகள்
தொடர்கள்
Published:Updated:

“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”

“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”
பிரீமியம் ஸ்டோரி
News
“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”

“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”

“சாட்டை’ படம் முடிந்ததுமே இரண்டாம் பாகம் எடுக்கிற ஐடியாவில்தான் இருந்தோம். பிறகு, ஒரேமாதிரி கல்வி தொடர்பான படமாகவே எடுக்க வேணாம், வேற ஒரு படம் பண்ணிட்டு இதைப் பண்ணலாம்னு முடிவு பண்ணிட்டுதான் ‘ரூபாய்’ படம் பண்ணினேன். இப்ப, ‘அடுத்த சாட்டை’ படத்தைக் கல்லூரியில் நடக்கிற மாதிரி பண்ணியிருக்கேன் ” நிதானமாகப் பேச ஆரம்பித்தார், இயக்குநர் அன்பழகன்.

“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”

“ ‘சாட்டை’யில் பள்ளியில் இருக்கும் பிரச்னைகளைச் சொல்லியிருந்தீங்க. இதில் கல்லூரி. எந்தெந்தப் பிரச்னைகளைச் சொல்லப்போறீங்க?” 
 
``இந்தப் படம் ’சாட்டை’யின் தொடர்ச்சியா இருக்காது. ‘சாட்டை’யில் இருந்த கேரக்டர்களை வெச்சு கல்லூரியில் நடக்கிற கதையாக மாற்றியிருக்கேன். ‘சாட்டை’ படத்தில் தமிழகத்திலேயே பின்தங்கியிருக்கும் ஒரு அரசுப் பள்ளியை, அந்தப் பள்ளிக்குப் புதிய ஆசிரியராக வருபவர் எப்படி நம்பர் ஒன் பள்ளியாக மாற்றுகிறார்னு சொல்லியிருப்பேன். இதில், கும்பகோணம் மாவட்டத்திலேயே நம்பர் ஒன்னாக இருக்கும் ஒரு தனியார் கல்லூரி, அந்த நிலையைத் தக்கவைத்துக்கொள்ள எப்படியெல்லாம் பேராசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கிறார்கள், அதை அவர்கள் மாணவர்களுக்கு எப்படிக் கடத்துகிறார்கள், அதனால் மாணவர்கள் எப்படியெல்லாம் கஷ்டப்படுறாங்க, அதை அந்தக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக வேலைக்குச் சேரும் சமுத்திரக்கனி எப்படியெல்லாம் மாற்றுகிறார்னு சொல்லியிருக்கேன். கல்லூரியில் நடக்கும் சாதிப் பிரச்னை, ஆசிரியர்களுக்குள் நடக்கும் அரசியல், நீட் பிரச்னை, மாணவர்கள் தற்கொலைகள் இப்படி நிறைய விஷயங்களைத் தொட்டிருக்கோம்.

‘சாட்டை’ படம் போலவே சமுத்திரக்கனி சார் தயாளன் கேரக்டரிலும், தம்பி ராமையா சார் சிங்கபெருமாள் கேரக்டரிலும் நடிச்சிருக்காங்க. `சாட்டை’ படத்தோட ஹீரோ யுவன், இதில் கல்லூரி மாணவரா நடிச்சிருக்கார். மற்ற முக்கியமான கேரக்டர்களில் அதுல்யா ரவி, ‘பசங்க’ ஸ்ரீராம், `குங்குமப்பொட்டு கவுண்டர்’ படத்தில் சத்யராஜ் சாருக்குப் பையனா நடிச்ச கெளசிக், `வெடிகுண்டு முருகேசன்’ படத்தின் இயக்குநர் மூர்த்தி நடிச்சிருக்காங்க. கெஸ்ட் ரோலில் சசிகுமார் சார் வர்றார்.’’

“சமுத்திரக்கனி மெசேஜ் சொல்லுவார்னு `சாட்டை’ படத்திலிருந்துதான் சொல்ல ஆரம்பிச்சாங்க. அதுக்கப்புறம் அவர் அதே டைப்ல பல படங்கள் பண்ணிட்டார். இந்தப் படம் எப்படி அதிலிருந்து மாறுபடும்?”

“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”

``கனி சார் வில்லனா, குணச்சித்திர கேரக்டரா நிறைய படங்கள் நடிச்சிட்டாலும், அவர் மெசேஜ் சொன்ன `சாட்டை’, `அப்பா’, `தொண்டன்’ மாதிரியான படங்கள்தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்படுது. அதனால், இதிலும் அவர் மெசேஜ் சொல்லியிருக்கார். ஆனால், பிரசாரத் தொனியில் அது இருக்காது.  ‘அடுத்த சாட்டை’ ஆரம்பிக்கும்போதே கனி சார் என்கிட்ட, ‘நான் அதிகம் பேசிட்டேன். இந்தப் படத்தில் மத்தவங்க பேசட்டும்’னு சொன்னார். `சாட்டை’ படம் பண்ணும்போது, சில காட்சிகளை மக்கள் ஈஸியா கடந்துடக் கூடாதுன்னு அந்த இடங்களில் கனி சாரைப் பேச வெச்சேன். அது பிரசாரத் தொனியில் இருக்கணும்னு முடிவு பண்ணி வெச்ச காட்சிகள்தான். ஆனால், இதில் அந்தளவுக்கு இருக்காது.’’

“ `சாட்டை’ படத்தில் வருவதுபோலவே பகவான் என்கிற ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்றக்கூடாதுன்னு மாணவர்கள் போராடினார்கள். உங்கள் படத்தில் வைத்த காட்சி நிஜத்தில் நடந்தபோது எப்படி இருந்தது?”

“இதில் சமுத்திரக்கனி அதிகம் பேச மாட்டார்!”

``உண்மையாகவே அந்தக் காட்சி என் வாழ்க்கையில் நடந்தது. நான் பி.எட் முடிச்சுட்டு ஆசிரியர் பயிற்சிக்காக ஒரு அரசுப் பள்ளிக்குப் போயிருந்தேன். நான் பள்ளியில் படிக்கும்போது, ‘நமக்கு வர்ற வாத்தியார் இப்படியெல்லாம் இருக்கணும்’னு நான் ஒரு கனவு வெச்சிருந்தேன். அந்தமாதிரி எனக்கு நடக்கல. அதனால், நான் பயிற்சி ஆசிரியரா போனபோது, மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியரா இருக்கணும்னு முடிவு பண்ணினேன். ஜீன்ஸ், சர்ட் போட்டுதான் ஸ்கூலுக்குப் போனேன். பசங்க தோள்ல கைபோட்டுப் பேசினேன். ரொம்ப ஃபிரண்ட்லியா இருந்தேன். பயிற்சி முடிஞ்சு நான் கிளம்புன நாள், எல்லாப் பசங்களுக்கும் அழுதாங்க. அவங்களை சமாதானப்படுத்திட்டு வந்தேன். அந்தமாதிரி ஒரு சீன் என் படத்துல வைக்கணும்னு முடிவு பண்ணி வெச்சிருந்தேன். அது உண்மையில் நடக்கிறதைப் பார்த்தப்போ, ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. பகவான் மாதிரி பலபேர் வெளியே தெரியாம இருக்காங்க.’’


“ `சாட்டை’ படத்துக்கு முன், பின்-னு அரசுப் பள்ளிகள் சார்ந்து நடக்கிற விஷயங்களில் மாற்றம் ஏற்பட்டிருக்கா?”

``அப்படி எதுவும் பெருசா மாற்றம் நடந்த மாதிரி எனக்குத் தெரியல. இப்போதும், அரசுப் பள்ளியை மூடினாங்க, மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்தார்னு செய்திகள் வந்துகிட்டுதானே இருக்கு?”

 - மா.பாண்டியராஜன்