1994 ஆம் ஆண்டு வரையில் கைகளில் வரைந்த ஓவியங்களைத்தான் அனிமேஷன் படமாக ஓட்டி காட்டினார்கள். ஒரு நொடிக்கான அத்தனை ஃப்ரேம்களையும் தனித்தனி ஓவியங்களாக வரைந்தே அனிமேஷன் படம் எடுப்பார்கள். பிக்ஸார் (Pixar) என்ற புது நிறுவனம் இதை மாற்ற நினைத்தது.

1995 ஆம் ஆண்டு நவம்பர் 22, உலகிலேயே முதன்முதலாக கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முழுநீள அனிமேஷன் படமாக ‘டாய் ஸ்டோரி' வெளியானது.

‘தொழில்நுட்பத்தில்தான் அசத்திவிட்டோமே, கதை எப்படியிருந்தால் என்ன?' என்று நினைக்காமல் வித்தியாசமாக, குழந்தைகளைக் கவரும் ஒரு கதையைப் பிடித்தது பிக்ஸார்.

‘பொம்மைகளுக்கும் உயிர் இருக்கிறது, ஓர் உலகம் இருக்கிறது. நாம் பார்க்கும்போது மட்டுமே அவை பொம்மைகளாக நடிக்கின்றன என்ற ஒற்றை வரியில் சுவாரஸ்யமான திரைக்கதை அமைத்தார்கள்.

ஆண்டி டாவிஸ் (Andy Davis) என்கிற சிறுவன், பஸ் லைட்டியர் (Buzz Lightyear) என்ற புது பொம்மையை வாங்குகிறான். அது, அவனிடம் ஏற்கெனவே இருக்கும் வுட்டி என்கிற ஷெரிஃப் பொம்மைக்குப் பொறாமையைக் கிளப்புகிறது. ஒரு கைகலப்பில் புதிய பொம்மையை, தன்னை அறியாமல் ஜன்னலுக்கு வெளியே தள்ளிவிடுகிறான் வுட்டி. மற்ற பொம்மைகள் ஒன்று சேர்ந்து திட்டமிட்டு செய்ததாகக் குற்றம் சாட்டுகின்றன. அந்தப் பழியிலிருந்து நீங்குவதற்கு ஷெரிஃப் பொம்மை முயற்சி செய்வதே முதல் பாகம்.

1999-ல் வெளியான இரண்டாம் பாகத்தில், ஷெரிஃப் வுட்டியை பொறாமைக் குணம் கொண்ட மனிதர் ஒருவர் திருடிவிடுகிறார். சும்மா விட்டுவிடுமா ஆண்டியின் மற்ற பொம்மைகள்? பஸ் லைட்டியருடன் சேர்ந்து எப்படி ஷெரிஃப்பை மீட்கிறார்கள்.

11 ஆண்டுகளுக்குப் பிறகு, 2010-ல் வெளியான மூன்றாம் பாகத்தில், சிறுவன் ஆண்டி வளர்ந்து கல்லூரி வயதுக்கு வந்துவிடுவான். அவனின் பழைய பொம்மைகள் அனைத்தும் ஒரு குழந்தைகள் நல மையத்துக்குச் சென்றுவிடும். அங்கே லாட்ஸோ என்ற கரடி பொம்மைதான் ராஜா. அதனிடமிருந்து தப்பி, எப்படி மீண்டும் ஆண்டியின் மூலமாக போணி என்ற சிறுமியிடம் சென்றடைகிறார்கள் என்பதாக இருந்தது.

நவீனத் தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்ட அந்தப் படம், இன்று வரை பிக்ஸார் நிறுவனத்தின் தயாரிப்புகளில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற பெருமையைத் தக்கவைத்துள்ளது. அதை, தற்போதைய ‘டாய் ஸ்டோரி 4’ முறியடிக்குமா?

ஜூன் 21 ஆம் தேதி வெளியாகவிருக்கும் 4-ம் பாகத்தில் என்ன ஸ்பெஷல்? சென்ற பாகத்தைவிடச் சிறந்த தொழில்நுட்பத்துடன் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், 3D மற்றும் IMAX 3D-யில் வெளியாகிறது.

சிறுமி போணியிடம் வந்துசேர்ந்துள்ள பொம்மைகளுக்கு மத்தியில், ஃபோர்க்கி என்ற புதிய பொம்மையும் இணைகிறது. இது மற்ற பொம்மைகளைப் போலின்றி கலை மற்றும் கைவினை மூலம் சொந்தமாகத் தயாரிக்கப்பட்ட பொம்மை.

தான் எதற்காக இருக்கிறோம் என்று புரியாமல் தவிக்கும் ஃபோர்க்கிக்கு ஆதரவாக இருக்கிறார்கள் பழைய பொம்மைகள். பாணி தன் குடும்பத்துடனும் பொம்மைகளுடனும் சுற்றுலா செல்லும்போது, ஃபோர்க்கி மட்டும் அங்கிருந்து ஓடிவிடுகிறது. அதைக் காப்பாற்றி மீட்டு வரச் செல்லும் நம் ஷெரிஃப் வுட்டி, வழித் தவறி நண்பர்களைப் பிரிந்துவிடுகிறார்.

ஷெரிஃப்பைத் தேடி பொம்மைகள் படையே செல்கிறது. நகரத்தில் இந்தப் பொம்மைகள் செய்யும் சாகசங்களே கதை.

டாய் ஸ்டோரியின் புகழ்பெற்ற கதாபாத்திரங்களான ஜெஸ்ஸி, ரெக்ஸ் என்ற டைனோசர், ஹேம், போட்டேடோ ஹெட் ஜோடிகள், பார்பி, ஏலியன்ஸ், டிரிக்ஸி, மிஸ்டர்.ப்ரிக்கிள் பேன்ட்ஸ், பட்டர்கப், டக்கி, போணி என ஒரு பெருங்கூட்டமே இந்தப் பாகத்தில் ஆஜர்.

எப்போதும் பொம்மைகளுக்கு டாப் ஹாலிவுட் நட்சத்திரங்கள் குரல் கொடுப்பது வழக்கம். இந்த முறையும் டாம் ஹேங்க்ஸ், ஆனி பாட்ஸ், ஜான் குசாக், ஜோர்டன் பீலே, கீணு ரீவ்ஸ் மற்றும் புதிய பொம்மையான ஃபோர்க்கிக்கு புகழ்பெற்ற காமெடியன் டோனி ஹேல் ஆகியோர் குரல் கொடுத்துள்ளனர்.

90-களில் டாய் ஸ்டோரியின் இரண்டு பாகங்களைப் பார்த்து வளர்ந்த குழந்தைகளுக்கு மூன்றாம் பாகம் பழைய ஞாபகங்களைக் கிளறி, குழந்தைகளாக மாற்றின. அதுபோல இந்த நான்காம் பாகமும் செய்யும். அத்துடன் இன்றைய குழந்தைகளையும் தனது சேட்டைகளால் சுண்டி இழுக்கும்.

டாய் ஸ்டோரி படத்தொடரின் கடைசி பாகமும் இதுதானாம். அதனால், வுட்டி நண்பர்களுக்கு மோஸ்ட் வெல்கம் சொல்வோம்!