‘தேவி 2’ படத்துக்குப் பிறகு, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படமான ‘தலைவி’ படத்தின் பணிகளில் தீவிரமாக இருக்கிறார் இயக்குநர் விஜய். ஜெயலலிதா கேரக்டரில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கவிருக்கும் இந்தப் படம், 100 கோடி ரூபாய் செலவில் உருவாகவிருப்பதாக அறிவித்திருக்கிறது படக்குழு.

‘என்.ஜி.கே’ படம் நேரெதிர் விமர்சனங்களை சந்தித்துக் கொண்டிருந்தாலும் வசூல்ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கிறது. படம் வெளியான ஒரு வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துக்கொண்டிருக்கும் படத்துக்கு, ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஆயிரம் ஜென்மங்கள்’ படத் தலைப்பை வைத்திருக்கிறார்கள். தெலுங்கு நடிகை ஈஷா ரெப்பா, நிகிஷா படேல், சாக்ஷி அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடிக்கும் இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

நயன்தாரா, த்ரிஷா வரிசையில் கதாநாயகிக்கு முக்கியத்துவமுள்ள படங்களில் நடிப்பதில் தீவிரமாக இருக்கிறார் சமந்தா. ‘யு-டர்ன்’ வெற்றியைத் தொடர்ந்து, ‘டோரா’ படத்தின் இயக்குநர் தாஸ் ராமசாமி இயக்கவிருக்கும் த்ரில்லர் படமொன்றில் நடிக்கிறார் சமந்தா.

சாய் பல்லவி, தற்போது தெலுங்கில் ‘விரத பர்வம் 1992’ என்ற படத்தில் ராணாவுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். முதன் முறையாக ஆக்ஷன் களத்தில், நக்ஸலைட் கேரக்டர் ஏற்று நடிக்கும் சாய் பல்லவிக்கு, நிறைய ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றனவாம்.

மு.மாறன் இயக்கத்தில், அருள்நிதி நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் பூமிகா. சென்னையில் பத்து வருடங்களுக்குப் பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்ட உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறாராம்.

பிரதர்ஸ் நடிகர்கள் இனி வெளி தயாரிப்பு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பது என்ற முடிவை எடுத்திருக்கிறார்களாம். உறவினர்களின் தயாரிப்பு நிறுவனங்களில் நடிக்கும்போது ஏற்படுகிற சில சங்கடங்களைத் தவிர்க்கவே இந்த முடிவாம்!

முன்னாள் ஸ்லிம் நடிகையும் இந்நாள் டாப் ஹீரோயினும் இணைந்து நடிக்கவிருக்கும் பெயரிடப்படாத படத்தில், ‘யாருடைய பெயரைப் போஸ்டரில் முன்னிலைப்படுத்துவீர்கள்’ என்ற பஞ்சாயத்து இப்போதே தொடங்கிவிட்டதால், அப்செட்டில் இருக்கிறது படக்குழு.

‘படிப்பைத் தொடர்வதால் நடிக்கவில்லை’ என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்த கேரள நடிகைக்குத் திருமணம் செய்து வைக்கும் யோசனையில் இருக்கிறாராம், அவரின் அம்மா.