பிரீமியம் ஸ்டோரி

•  இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு ‘லாபம்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார், ஸ்ருதி ஹாசன். விஜய் சேதுபதியுடன் நடிக்கும் இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஒரு தெலுங்குப் படத்திலும் கமிட் ஆகியிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• ‘லாபம்’ படத்தைத் தொடர்ந்து, அறிமுக இயக்குநர் விருமாண்டியின் ‘க/பெ.ரணசிங்கம்’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய் சேதுபதி. இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார்.

• தமிழில் ‘கொடி’ படத்தில் நடித்த மலையாள நடிகை அனுபமா கிரிக்கெட் வீரர் பும்ராவைக் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வருகின்றன. ஆனால், இதற்கு இதுவரை இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை.

மிஸ்டர் மியாவ்

• நடிகை வரலட்சுமி, சண்டைப் பயிற்சியில் ஈடுபடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்த நிலையில், நடிகை சாய் தன்ஷிகாவும் தான் டைவ் அடிக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

• சிரஞ்சீவி, நயன்தாரா, அமிதாப் பச்சன், விஜய் சேதுபதி என்று பலரின் நடிப்பில் உருவாகிக்கொண்டிருக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படப்பிடிப்பில் தற்போது அனுஷ்காவும் இணைந்திருக்கிறார். படத்தில் முக்கியமான திருப்புமுனையை ஏற்படுத்தும் கேரக்டராம் அனுஷ்காவுக்கு!

• சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர் காலம்’ திரைப்படம் ரிலீஸாகவிருக்கிறது. இந்தப் படத்தைப் பார்த்த இயக்குநர் விக்னேஷ்சிவன், படக்குழுவினரை யும் படத்தின் தயாரிப்பாளர் மதியழகனையும் புகழ்ந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

• நடிகை சமந்தா, ட்விட்டரில் தன் பெயரை சமந்தா அக்கினேனி என்பதிலிருந்து பேபி அக்கினேனி என்பதாக மாற்றியிருந்தார். இதைப் பார்த்த ரசிகர் ஒருவர், ‘சமந்தா கர்ப்பமா இருக்கிறீர்களா?’ என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு சமந்தா, ‘நான் கர்ப்பமாக இருக்கிறேனா? அப்படி எதையாவது நீங்கள் கண்டுபிடித்திருந்தால், எனக்குத் தெரியப்படுத்தவும்’ என்று நக்கல் அடித்துள்ளார்.

மிஸ்டர் மியாவ்

• ‘இறுதிச்சுற்று’ படத்துக்குப் பிறகு சுதா கொங்கரா இயக்கிக்கொண்டிருக்கும் ‘சூரரைப்போற்று’ படத்தின் ஷூட்டிங்கில், பிஸியாக இருக்கிறார் சூர்யா. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக அபர்ணா பாலமுரளியும் இரண்டாவது கதாநாயகியாக பூஜா ஹெக்டேவும் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். 

மிஸ்டர் மியாவ்
மிஸ்டர் மியாவ்

• சில வாரங்களில் நடக்கவிருக்கும் நடிகர்சங்கத் தேர்தலில் மோதிக் கொள்ளவிருப்பது, சினிமா நடிகர்கள் அல்ல... ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும்தான்! இரு கட்சிகளும் நடிகர்களை வைத்து, சங்கத்தைக் கைப்பற்றக்காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றன...

• தமிழிலிருந்து இந்திக்குச் சென்ற டாப் நடிகையின் வளர்ச்சியைப் பார்த்து, பல தமிழ் நடிகைகள் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக, நடிகையின் சம்பளம்தான் வாயடைக்க வைத்திருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு