Published:Updated:

மோகன்லாலை இயக்கும் பிரித்விராஜ் - நான்கு மொழிகளில் வெளியாகும் அரசியல் திரைப்படம்!

மோகன்லாலை இயக்கும் பிரித்விராஜ் - நான்கு மொழிகளில் வெளியாகும் அரசியல் திரைப்படம்!
மோகன்லாலை இயக்கும் பிரித்விராஜ் - நான்கு மொழிகளில் வெளியாகும் அரசியல் திரைப்படம்!

நடிகரும், தயாரிப்பாளருமான ப்ரித்விராஜ் தற்போது இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். முக்கியமாக, இந்தப் படம் அரசியல் பின்னணி கொண்ட த்ரில்லர் ஜானர். படத்தின் ஹீரோவாக மோகன்லால் நடித்திருக்கிறார். 

இவரைத் தவிர நடிகை மஞ்சு வாரியார் முக்கியமான ரோலில் நடித்திருக்கும், இந்தப் படத்தில் கேமியோ ரோலில் நடிகர் ப்ரித்வி ராஜூம் தோன்றியிருக்கிறாராம். பாலிவுட் ஹீரோ விவேக் ஓபராய் நடிக்க, இவருடன் டோவினோ தாமஸ், இந்திரஜித், ஜான் விஜய் பலரும் நடித்திருக்கின்றனர். மல்ட் ப்ளை ஸ்டார்ஸ் நடித்திருக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தியில் மார்ச் மாதம் இறுதியில் ரிலீஸாக இருக்கிறது.

லூசிஃபர் (`lucifer') எனப் பெயரிடப்படிருக்கும் இந்தப் படத்தில் மோகன்லால் நடிக்க சம்மதம் தெரிவித்தற்காக ப்ரித்விராஜ் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் இயக்குநர் ப்ரித்விராஜ் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். சுஜித்  வாசுதேவ் ஒளிப்பதிவு செய்ய, தீபக் தேவ் இசையமைத்திருக்கிறார். எல்லா மொழி அரசியலுக்கும் புரியும்  வண்ணம் இந்தப் படத்தை ப்ரித்விராஜ் எடுத்திருக்கிறாராம். கே.வி.ஆனந்த் படத்தில் சூர்யாவுடன், மோகன்லால் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.