Published:Updated:

சிக்ஸர் அடிக்கத் தயாராகும் நடிகர் வைபவ்!

சிக்ஸர் அடிக்கத் தயாராகும் நடிகர் வைபவ்!
சிக்ஸர் அடிக்கத் தயாராகும் நடிகர் வைபவ்!

நடிகர் வைபவ் ஹீரோவாக நடிக்கும் அடுத்த படத்துக்கு சிக்ஸர் எனப் பெயரிடப்பட்டுள்ளது. வால்மார்ட் எண்டர்டெயின்மெண்ட் தினேஷ் கண்ணன், ஸ்ரீதர் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சாச்சி இயக்கும் இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைக்க, பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

``இந்தியாவில் கிரிக்கெட் ஒரு மதமாகக் கருதப்படுகிறது. அதை மனதில் வைத்து இந்தப் படத்துக்கு `சிக்ஸர்' என்ற தலைப்பை வைத்திருக்கிறோம்" எனப் படக்குழுவினர் கூறியுள்ளனர்.

``சிக்ஸர் தான் தலைப்பு என்றாலும், இந்தப் படத்துக்கும் கிரிக்கெட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஆனால், `6' சிக்ஸ் என்ற வார்த்தை திரைக்கதையில் மிக முக்கிய பங்கை வகிக்கிறது. பல புள்ளிகளை இது இணைக்கிறது. இந்தக் கதைக்கு பக்கத்து வீட்டுப் பையன் போன்ற தோற்றம் கொண்ட, அதை திறம்பட செய்யும் வைபவ் மிகப் பொருத்தமாக இருந்தார். பல்லக் லால்வானி நாயகியாக நடிக்கிறார்.

``படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன, கோடை விடுமுறையின் இரண்டாம் பாதியில் படத்தை வெளியிடத் திட்டமிட்டு வருகிறோம். ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிந்திரன் சார் இந்தப் படத்தை வணிக அளவில் கொண்டு சேர்க்க மிகவும் உறுதுணையாக இருக்கிறார்," என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்கள் படக்குழுவினர்.