பிரீமியம் ஸ்டோரி

• அறிமுக இயக்குநர்கள் படத்தில் நடிப்பதில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வருகிறார், விஜய் சேதுபதி. தற்போது புதுமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ண ரோகாந்த் படத்தில் நடிக்கவிருக்கிறார். இசைக் கலைஞராக விஜய் சேதுபதி நடிக்கும் இந்தப் படத்தில், நடிகை அமலா பால் முதன்முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• ஜி.வி.பிரகாஷ் குமாரின் தங்கை பவானிஸ்ரீ தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். அமலா அக்கினேனி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘ஹை ப்ரீஸ்டெஸ்’ வெப் சீரிஸில் இவர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார். தற்போது விஜய் சேதுபதி - ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கவிருக்கும் ‘க.பெ.ரணசிங்கம்’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.  

• டைரக்டர் விஜய் இயக்கவிருக்கும் ஜெயலலிதாவின் பயோபிக்கான ‘தலைவி’ படத்தில், முதலில் ஒப்பந்தம் ஆனது வித்யா பாலன்தானாம். ஜெயலலிதா குறித்தும் படம் குறித்தும் வித்யா பாலன் கேட்ட பல சந்தேகங்களுக்குத் தயாரிப்பு தரப்பிடமிருந்தும் இயக்குநர் தரப்பிடமிருந்தும் சரியான பதில் வராததால், வித்யா பாலன் விலகிவிட்டாராம்.

• பிரபாஸ் நடிக்க, 300 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் ‘சாஹோ’ படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தில் இடம்பெறும் ஒரு டூயட் பாடலைப் படமாக்க ஆஸ்திரேலியா செல்லவிருக்கிறது படக்குழு. இந்தப் பாடலுடன் மொத்தப் படத்தின் ஷூட்டிங்கும் நிறைவடைகிறது. 

மிஸ்டர் மியாவ்

• நடிகர் ஆதி, தடகள வீரராக நடிக்கவிருக்கும் ‘கிளாப்’ படத்தின் ஹீரோயினாக, ‘ஸ்டார் பிளஸ்’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அகான்ஷா சிங் நடிக்கவிருக்கிறார்.

மிஸ்டர் மியாவ்

• தெலுங்கில் தமன்னா நடிக்கும் ‘சைரா நரசிம்ம ரெட்டி’ படத்துக்காக விலை உயர்ந்த ஆடைகள் தமன்னாவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பு தமன்னா இவ்வளவு விலை உயர்ந்த ஆடைகளை அணிந்து நடித்தது இல்லையாம்.

மிஸ்டர் மியாவ்

• மன்னர் நடிகர் வசம் அதிக படங்கள் இருந்தாலும், பணப் பிரச்னையில் தவித்துக் கொண்டிருக்கிறாராம். சிறப்புத் தோற்றத்தில் இவர் நடித்துக்கொடுத்த சில படங்களுக்கு இவருக்குப் பேசிய சம்பளத்தைக் கொடுக்காமல் இழுத்தடிப்பதால் வருத்தத்தில் இருக்கிறார், நடிகர்.

• கோலிவுட்டில் டாப் ஹீரோயினாக இருக்கும் நடிகை, தனது சம்பளத்தை அதிரடியாகக் குறைத்திருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த சில படங்கள் தோல்வியைச் சந்தித்தன. இதேநிலை தொடர்ந்தால், ‘நம்பர் ஒன்’ இடம் கைநழுவிப் போய்விடும் என்பதே இந்த முடிவுக்குக் காரணமாம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு