Published:Updated:

``ஆர்யா - சாயீஷா ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படினு தெரியுமா?’’ - ஒரு நண்பனின் ஷேரிங்ஸ்

``ஆர்யா - சாயீஷா ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படினு தெரியுமா?’’ -  ஒரு நண்பனின் ஷேரிங்ஸ்
``ஆர்யா - சாயீஷா ஷூட்டிங் ஸ்பாட்ல எப்படினு தெரியுமா?’’ - ஒரு நண்பனின் ஷேரிங்ஸ்

கே.வி.ஆனந்த் உடனான நட்பு, `காப்பான்’ பட அனுபவம் உட்பட பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொள்கிறார் இந்த கலை இயக்குநர்

``சினிமாவுல எனக்கு இயக்குநர் ஆகணும்னு ஆசை. நண்பர் ஒருவர் சினிமாவுல அசிஸ்டென்ட் ஆர்ட் டைரக்டரா இருந்தார். நல்லா ஸ்கெட்ச்சிங் பண்ணத் தெரிஞ்ச ஆள் தேவைப்படுறாங்கனு என்னைக் கூட்டிக்கிட்டுப்போனார். அப்போ, அவர்கிட்ட என் இயக்குநர் ஆசையைச் சொன்னேன். `நீ ஆர்ட் டிபார்ட்மென்டுக்குள்ளே வா. அப்புறம் இயக்குநர் ஆகிடலாம்’னு சொன்னார். கலை இயக்கத்துக்குள்ளே வந்தபிறகு, இதுவே கன்டினியூ ஆகிடுச்சு’’ என்கிறார் கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண்.

``கலை இயக்குநரான உங்களை, முதல் முதல்ல நடிக்கச் சொன்னது யார்?’’ 

`` `ஹவுஸ்ஃபுல்’ படத்துல வொர்க் பண்ணும்போது, பார்த்திபன் சார் ஒரு கேரக்டர்ல நடிக்கச் சொன்னார். எனக்கு நடிக்கத் தெரியாது. தவிர, கலை இயக்குநரான எனக்குக் கீழே 10 உதவியாளர்கள் வேலை பார்ப்பாங்க. நடிப்புல சொதப்பி, இயக்குநர்கிட்ட திட்டு வாங்குனா, பத்துபேர் முன்னாடி அசிங்கமாகிடும்னு நோ சொல்லிட்டேன். பிறகு, உதவி இயக்குநரா வேலை பார்த்த கரு.பழனியப்பன் சாரை வெச்சு அந்தக் கேரக்டரை எடுக்கலாம்னு நினைச்சார், அவரும் நடிக்கமாட்டேன்னு சொன்னதும், பார்த்திபன் அந்தக் கேரக்டரையே தூக்கிட்டார். இப்போ, `நானும் ரெளடிதான்’ படத்துல வொர்க் பண்ணும்போது, `நான் அப்போவே சொன்னேன்; நடிக்கலை. இப்போ நடிக்கிறீங்க. இனிமே, வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கோங்க’னு பார்த்திபன் சார் சொன்னார்.’’ 

``கே.வி.ஆனந்துக்கும் உங்களுக்குமான அறிமுகம்?’’

``நான் பல விளம்பரப் படங்களில் வொர்க் பண்ணியிருக்கேன். அப்போ, எனக்கு நிறைய கேமராமேன்களோட தொடர்பு கிடைச்சது. கே.வி.ஆனந்தும் அப்படித்தான் எனக்கு அறிமுகமானார். `அயன்’ படம் எடுக்கிறப்போ அவரும், `நடிக்கிறியா’னு கேட்டார். `எனக்கு நடிக்கத் தெரியாது’னு சொன்னேன். `தெரியும். தெரியாதுனு நீ சொல்லாதே... அதை நான் பார்த்துக்கிறேன். நீ இல்லைனு மறுத்தா ஜெகனை மைண்ட்ல வெச்சிருக்கேன்’னு சொன்னார். அந்தப் படத்தைப் பார்த்த பிறகுதான், `நல்ல வாய்ப்பை மிஸ் பண்ணிட்டோமோ’னு தோணுச்சு. அப்புறம், `கோ’ படத்துல வொர்க் பண்ணக் கூப்பிட்டு, ஒரு கேரக்டர்ல நடிங்கணும் சொன்னார். இந்தமுறை விடக்கூடாதுனு நடிச்சுட்டேன். அப்போ தொடங்கி, `அனேகன்’, `கவண்’னு அவர் படங்களில் நடிச்சுக்கிட்டு இருக்கேன். அதைப் பார்த்து, மத்த பட வாய்ப்புகளும் வருது. நானும் பயன்படுத்திக்கிறேன். ஆனா, கே.வி.ஆனந்துக்கு என் ஆக்டிங் பிடிக்காது.’’ 
 

``ஒரு படத்துல நடிச்சுக்கிட்டே, கலை இயக்கத்தையும் கவனிக்கிறது எப்படி இருக்கு?’’ 

``அம்மாவையும் மனைவியையும் ஒரே நேரத்துல சமாளிக்கிறது எவ்ளோ கஷ்டமோ... அதைவிடக் கஷ்டம் அது. ஏன்னா, எப்போவும் சின்னச் சின்ன டீட்டெய்லிங் ஆர்ட் வொர்க்ல இருக்கணும்னு நினைப்பேன். அதனாலேயே என்னை கே.வி.ஆனந்த் கூடவே வெச்சுப்பார். மேக்அப் போட்டு கேமரா முன்னாடி நிற்கும்போது, வசனத்தை உள்வாங்கிக்கிட்டு நடிக்க ரெடியாகணும். ஆனா, மனசுல ஆர்ட் டைரக்‌ஷன் வேலைகள்தான் ஓடிக்கிட்டு இருக்கும். `காதலும் கடந்து போகும்’, `பாயும் புலி’னு நான் நடிகரா மட்டுமே கமிட் ஆன படங்களில் ரிலாக்ஸா நடிச்சேன்.’’ 

`` `காப்பான்’ பட வேலைகள் எப்படிப் போகுது, படம் எப்படி வந்திருக்கு?’’ 

`` `அயன்’, `கோ’ படங்கள் எந்தளவுக்குப் பரபரப்பைக் கொடுத்ததோ, அதைவிடத் தரமான சம்பவங்களை `காப்பான்’ கொடுப்பான். இந்தப் படத்துல ஆர்ட் டைரக்‌ஷனுக்கு அதிக ஸ்கோப் இருக்கு. அதைச் சரியா புரிஞ்சுக்கிட்டு வொர்க் பண்ணியிருக்கேன்னு நினைக்கிறேன். ஒரு பாட்டுக்காக வெளிநாட்டுக்குப் போகணும்னு சொல்லியிருக்கார் கே.வி.ஆனந்த். கடைசி நேரத்துல இங்கேயே எடுத்துக்கலாம்னுகூட சொல்வார். ஏன்னா, `கோ’ படத்துல ஒரு பாட்டுக்காக சீனா போக வேண்டியது, போகலை. அவர் மட்டும் போய் மாண்டேஜ் ஷூட் பண்ணிக்கிட்டு வந்துட்டு, இங்கே ப்ளூமேட்ல மிச்சத்தை எடுத்துட்டார். `அனேகன்’ படத்துக்காக ஸ்காட்லாந்து போகலாம்னு இருந்தோம். தனுஷ் பாலிவுட் படத்தை முடிச்சுட்டு வர்றதுக்குள்ள, ஸ்காட்லாந்துல நாங்க எதிர்பார்த்த சீஸன் முடிஞ்சிருந்தது. பிறகு, ஏவி.எம் ஸ்டூடியோவுலேயே ஷுட் பண்ணிட்டோம். இப்போவும் சொல்லியிருக்கார், ஃபிளைட்ல ஏறி உட்கார்ற வரைக்கும் நான் நம்புறதா இல்லை.’’ 

`` `காப்பான்’ ஷூட்டிங் ஸ்பாட் அனுபவம்?’’

``படத்துல மோகன்லால் சார், சூர்யா, ஆர்யா, போமன் இரானி, சமுத்திரக்கனி... இப்படிப் பல நட்சத்திரங்கள் இருக்காங்க. `ஏன்யா, இப்படிப் பரபரனு ஓடிக்கிட்டே இருக்கீங்க’னு சூர்யா சார் கலாய்ப்பார். மோகன் லால் சார் செம ஜாலி டைப். சும்மா அவரை சார்னு கூப்பிட்டாகூட, `என்ன... ஒன்மோரா, போயிடலாம்’னு சொல்வார். போமன் இரானி சார் ஒரு ஸ்டில் போட்டோகிராஃபராம்! அதனால, ஆனந்தும் அவரும் கேமராவைப் பத்தியே பேசிக்கிட்டு இருப்பாங்க. செட் டென்ஷனா இருந்தா, மோகன் லால் சாரும் ஆர்யாவும்தான் கூலா வெச்சுப்பாங்க.’’ 
 

``கல்யாண ஜோடி ஆர்யா - சாயீஷா ஸ்பாட்ல எப்படி?’’ 

``இவங்க ரெண்டுபேரும் லவ் பண்றாங்கனு சொல்லும்போது, எனக்கு அதிர்ச்சியா இருந்தது. நான் நம்பவே இல்லை. ஸ்பாட்ல சாயீஷா ஒரு பக்கம் இருப்பாங்க. ஆர்யா எங்ககூட இருப்பான். அவங்க லவ் பண்றாங்கன்னு உங்களுக்குத் தெரியிறதுக்கு ரெண்டு வாரம் முன்னாடிதான் எனக்குத் தெரியும். கே.வி.ஆனந்த்கிட்ட இதைப் பற்றிப் பேசும்போது, `ஆமா. உனக்குத் தெரியாதா?’னு கேட்டார். அப்போவும் நம்பாம, ஆர்யாகிட்டயே கேட்டேன். அவனும் `ஆமா. உனக்குத் தெரியாதா?’னு கேட்டான். அப்போதான் எனக்கு செம ஷாக். ஏன்னா, ஆர்யா செம ஜாலியான ஆள். சாயீஷா அப்படியில்லை. ஆர்யாவுக்கு நேரெதிர். அவங்களுக்குள்ளே காதல் இருக்குனு வெளியே தெரியாத அளவுக்கு வெச்சிருந்திருக்காங்க. கல்யாணத் தேதியைச் சொன்ன பிறகு, ஆர்யாவைக் கலாய்க்க ஆரம்பிச்சோம்.’’

`` `காப்பான்’ படத்துல உங்களையும் நடிக்க வெச்சிருக்காரா கே.வி.ஆனந்த்?’’ 

``வழக்கம்போல நடிக்க வெச்சிருக்கார். ஆனா, இந்தமுறை ஒரு புது ட்ரிக்கைப் பயன்படுத்தியிருக்கார். எனக்கு முடி இருக்கிறதால சில படங்கள்ல நடிக்க வாய்ப்புகள் வருது. இந்தப் படத்துல அதை வெட்டிவிட்டு ஒரு போலீஸ் கேரக்டர் கொடுத்திருக்கார். முடியை வெட்டினதுனாலேயே, `காஞ்சனா 3’, ரத்ன சிவா - ஜீவா படம்... இப்படி சில படங்கள்ல நடிக்க முடியாம போயிடுச்சு. எல்லா இயக்குநர்களும் ஆர்ட் டைரக்டர்கள் பக்கத்திலேயே இருந்தாதான், சப்போர்டா இருக்கும்னு நினைப்பாங்க. அதனால, என் கெட்டப்பை மாத்தி ஒரு ரோலைக் கொடுத்து, என்னை எங்கேயும் நகரவிடாம வெச்சிருக்கார். எனக்கு ஹீரோ, வில்லன் ரெண்டுமே கே.வி.தான்!’’ 
 

``எப்போ உங்களை இயக்குநரா பார்க்கலாம்?’’ 

``ஆர்ட் டைரக்டரா இருக்கிறதையே பெரிய பொறுப்பா நினைக்கிறேன். இயக்குநர் ஆனா, அது ரொம்ப ரொம்பப் பெரிய பொறுப்பாகிடும். ஒரு படம் சரியா போகலைனா, அந்த இயக்குநருக்கு மட்டுமல்ல, நடிச்ச ஹீரோவின் இமேஜும் கீழே இறங்கிடும். அதனால, இப்போதைக்கு அந்தப் பக்கம் போகமாட்டேன். கதைகள் எழுதி வச்சிருக்கேன். ஒரு படத்தையாவது நிச்சயம் டைரக்ட் பண்ணிடுவேன்.’’ 

இப்படி இன்னும் பல சுவாரஸ்யமான கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கிறார் கலை இயக்குநர் டி.ஆர்.கே.கிரண். அவருடைய வீடியோ பேட்டி இதோ!

அடுத்த கட்டுரைக்கு