ஆலியா பட், சஞ்சய் தத், வருண் தவான், மாதுரி தீக்ஷித், சோனாக்ஷி சின்ஹா என நடிகர் பட்டாளமே நடிக்கும் `கலங்’ படத்தின் டீசர் தற்போது யூடியூபில் வெளியாகியுள்ளது.
இப்படத்தை `ஜோதா அக்பர்’ படத்தை இயக்கிய அபிஷேக் வர்மா இயக்குகிறார். ``இப்படத்தின் கதை சுமார் 15 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்டு, மாதுரி தீக்ஷித் கதாபாத்திரத்தில் ஸ்ரீதேவியை நடிக்க வைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது’’ என்று இன்று மும்பையில் நடந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் அபிஷேக் வர்மா கூறினார். இப்படத்துக்கு பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் ப்ரீத்தம் இசையமைக்கிறார். இதை கரன் ஜோகர், சஜித் நடியாத்வாலா, ஹிரோ யஷ், அபூர்வா மேத்தா ஆகியோர் தயாரிக்கின்றனர். இதன் டீசர் 'Fox Star Hindi' எனும் யூடியூப் சேனலில் வெளியாகியுள்ளது.
`கலங்’ எனும் வரலாற்றுப் படம் இந்து - முஸ்லீம் மதத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் காதல் கதை என்று டீசரிலிருந்து தெரிய வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.