Published:Updated:

ஆறு வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் கைகோக்கும் பா.விஜய்!

ஆறு வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் கைகோக்கும் பா.விஜய்!
ஆறு வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் கைகோக்கும் பா.விஜய்!

சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான `விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை.’ இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கேரக்டரை வடிவமைத்துள்ளார் வினோத். அந்த கேரக்டரில்தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித் - வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். `ஆரம்பம்’ படத்தில் அனைத்துப் பாடல்களையும் பா.விஜய் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு, இந்தப் படத்தின் மூலம் இணைகிறது அஜித் - பா.விஜய் கூட்டணி. பி.எஸ்.மித்ரன் - சிவகார்த்திகேயன் படத்தின் ரிக்கார்டிங்காகத் துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான ரிக்கார்டிங்கை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.